Published:Updated:

தெய்வத் திருமகள்

நிலாவுடன் சிறுமலர்கள் ! கவின் மலர் என்.விவேக்

தெய்வத் திருமகள்

நிலாவுடன் சிறுமலர்கள் ! கவின் மலர் என்.விவேக்

Published:Updated:
##~##

சாராவைத் தெரியும்தானே! 'தெய்வத் திருமகள்’ படத்தில் 'நிலா வந்தாச்சு...’ என்று விரல்கள் நடனமாட, விழிகள் கவிதை பேச நம்மை நெகிழவைத்த அழகான குட்டிப் பெண்.

சென்னை வந்திருந்த சாராவை அதிகாலையில் சந்திக்கப் போனபோது தூக்கம் கலைந்து அப்போதுதான் எழுந்தாள் ''அய்யய்யோ! ரொம்ப நேரம் தூங்கிட்டேனோ, ஸாரி'' என்றவாறு குளிக்க ஓடினாள். சற்று நேரத்தில் ப்ளூ ஜீன்ஸ், கருப்பு டிஷர்ட், வயலட் கலர் ஓவர்கோட்டில்... சாராக்குட்டி தயார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் பள்ளியை நோக்கி விரைந்தது கார். மழை பெய்து சாலை எல்லாம் தண்ணீர். ''இப்படி ரோடு பூரா தண்ணியா இருந்தா எனக்குப் பிடிக்காது'' என்றாள்.

இதோ... இடம் வந்துவிட்டது. காரைவிட்டு சாரா இறங்கியதும் பூங்கொத்துடன் வரவேற்றனர் சுட்டிகள். சாராவுடன் கை குலுக்கினார்கள். கையோடு கொண்டுவந்த சாக்லேட்கள், பிஸ்கட் பாக்கெட்டுகளை சாரா எல்லோருக்கும் கொடுத்தாள்.

தெய்வத் திருமகள்

பிறகு, அறைக்குள் வந்து குஷியாக நடனமாடினாள் சாரா. சுட்டிகள் சாராவின் கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சினார்கள். சாரா, சைகை மொழியில் அபிநயம் பிடித்துப் பேசினாள். சாராவின் அம்மாவும், பள்ளி ஆசிரியைகளும் உதவினார்கள்.

'என்னைப் பிடிச்சிருக்கா?’

'ரொம்ப...ரொம்ப...’ - அத்தனை சுட்டிகளும்ஒன்றாகச் சொன்னார்கள்.

'விக்ரம் அங்கிளைப் பிடிக்குமா உனக்கு?’ என்று ஒரு சுட்டி கேட்க,

கண்களை அகலமாக விரித்து 'ரொம்பப் பிடிக்கும். அவர் எனக்கு அப்பா’ என்றாள்.

'சாராவின் எதிர்கால ஆசை என்ன?’

தெய்வத் திருமகள்

'டைரக்டராகணும்’ -சட்டென்று சொன்னாள்.

'அப்போ நடிக்க மாட்டியா?’ என்று கேட்டார்கள்.

தெய்வத் திருமகள்

'நடிப்பேன். டைரக்ட் பண்ணுவேன். புரொடியூஸர் ஆவேன். அமீர்கான் மாதிரி ஆகணும்.அப்புறம் அஸ்ட்ரோநாட் ஆவேன்'' என்று பட்டியல் போட்டாள்.

'நம்மளை மாதிரி சின்னப் பிள்ளைங்களால் நடிக்கத்தானே முடியும். எப்படி டைரக்டராகிறது?’ என்று ஒரு சுட்டி கேட்டாள்.

'தெய்வத் திருமகள் படத்தின் டைரக்டர் விஜய் அங்கிள் எனக்கு ஃப்ரெண்ட். அவர்கிட்டே கேட்பேன். நிச்சயமா கத்துக் கொடுப்பார்.’ என்றாள்.

'தெய்வத் திருமகள் படத்தில் நீ ரொம்ப நல்லா நடிச்சிருந்தே’ என்று குழந்தைகள் பாராட்ட, சிரித்துக்கொண்டே 'தேங்க்ஸ்’ சொன்னாள்.

சாராவின் கண்கள் வகுப்பறையை ஆராய்ந்தது. அங்கே இருந்த பொம்மைகளைக் கேட்டாள். நிலா கேட்ட பின் கொடுக்காமலா? எல்லாப் பொம்மைகளையும் எடுத்துக்கொடுக்க, சாராவும் சுட்டிகளும் விளையாடினார்கள்.

சற்று நேரத்தில் அது போரடிக்க, வெளியே வந்தார்கள். மழை நின்று தரை பளிங்குபோல் சுத்தமாக இருந்தது. சுட்டிகளுடன் ரயில் வண்டி அமைத்தாள் சாரா. தானே ரயில் எஞ்சினாக மாறி 'கூ...கூ’ என்று கூவினாள். சுட்டிகள் அவளுடன் சேர்ந்து ரயிலை ஓடவைத்தார்கள்.

ஓடிக்கொண்டே ஒரு சுட்டி கேட்டாள்  'லேட்டஸ்டா என்ன படம் பார்த்தே நிலா?’

'சிங்கம் பார்த்தேன். அதில் பிரகாஷ்ராஜ் அங்கிள் நல்லா நடிச்சு இருந்தார். ஐ வாண்ட் டு வொர்க் வித் ஹிம்’ என்றாள்.

'அய்யே! உனக்கு என்ன ஹீரோவைப் பிடிக்காமல் வில்லனைப் பிடிக்குது?''

'ஹீரோவோ, வில்லனோ, யார் நல்லா நடிக்கிறாங்களோ அவங்களைப் பிடிக்கும்.’

'அப்போ சூர்யாவைப் பிடிக்கலையா?’ என்று கேள்வி வர,

'

தெய்வத் திருமகள்

அய்யோ... நான் பார்த்தது ஹிந்தி சிங்கம்?’ என்று விளக்கினாள்.

'சென்னையில் உனக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா?’ என்ற கேள்விக்கு உடனே சொன்னாள்...

'சென்னையில் எனக்கு ஃபேன்ஸ் அதிகம். அம்ரீஷ்னு ஒரே ஒரு ஃப்ரெண்ட் இருக்கான். இன்னியில் இருந்துநீங்களும்எனக்கு ஃப்ரெண்ட்ஸ்.’ என்று குதித்தாள்.

சுட்டிகளின் பிரார்த்தனை நேரம் நெருங்க, சாரா எல்லோரிடமும் கை குலுக்கி விடைபெற்றாள்.

''சாரா, இப்போ சென்னை பிடிச்சிருக்கா?'' என்று கேட்டால், சிரித்துக்கொண்டே சொல் கிறாள்...

''ஓ! எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச் சுட்டாங்களே! அதனால் என்றாள் அழகாக.