Published:Updated:

திட்றாங்க...திட்றாங்க !

எஸ்.ஷக்தி, ஆர்.மோகன், வீ.மாணிக்கவாசகம், கே.ஆர்.ராஜமாணிக்கம், ஆ.அலெக்ஸ் பாண்டியன் என்.விவேக், உ.பாண்டி, ரா.ராம்குமார், ஜெ.வேங்கடராஜ் செ.பாலநாக அபிஷேக்

திட்றாங்க...திட்றாங்க !

எஸ்.ஷக்தி, ஆர்.மோகன், வீ.மாணிக்கவாசகம், கே.ஆர்.ராஜமாணிக்கம், ஆ.அலெக்ஸ் பாண்டியன் என்.விவேக், உ.பாண்டி, ரா.ராம்குமார், ஜெ.வேங்கடராஜ் செ.பாலநாக அபிஷேக்

Published:Updated:
##~##

சன்டே ஆச்சுன்னா ஜாலியா ஷாப்பிங் கூட்டிட்டுப் போறதில்லை, வாரத்தில் ஒரு

திட்றாங்க...திட்றாங்க !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தடவைகூட பார்க் அழைச்சுட்டுப் போறதில்லை, அவ்ளோ ஏன்? சுட்டி க்ரியேஷன்ஸ் செய்றதுக்குக்கூட ஹெல்ப் பண்றதில்லை. எப்போ பார்த்தாலும் 'எனக்கு ஆயிரம் வேலை இருக்குடா கண்ணா... ப்ளீஸ் அமைதியா வீட்ல இரு’-ன்னு போரடிக்கிறார் அப்பா. அம்மாவும் அப்படித்தான்.

ஹூம்... எங்களுக்கு மட்டும் பிரச்னைகளே இல்லையா? காலையில் கண் முழிக்கிறதில் ஆரம்பிச்சு, நைட்ல நிலாவுக்கு குட் நைட் சொல்ற வரைக்கும் நாம மீட்பண்ற பிரச்னைகளை இவங்களுக்குச் சொல்லியாகணும்பா. ஒரு குக்கர் பாயசத்துக்கு ஒரு ஸ்பூன் பதம்ங்கிற மாதிரி ஒவ்வோர் ஊரில்இருந்தும் ஒரு சுட்டியை... அவங்களோட பிரச்னையைச் சொல்ல வைக்கலாமா..?

சென்னை

முதலில் சென்னையில் இருந்து ஸ்டார்ட் பண்ணுவோம்.    ஆறாம் கிளாஸ் படிக்கும் வர்ஷா, ''காலையில் 7 மணிக்கு எழுந்திரிப்பேன். 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்படுவேன். 8.20-க்கு ப்ரேயர். அதனால் அதிகாலையில் 6 மணிக்கு கூடைப்பந்து விளையாட்டு ப்ராக்டீஸ் போகணும். அவ்ளோ சீக்கிரம் எழுந்திரிச்சிக் கிளம்ப ரொம்பக் கஷ்டமா இருக்கும். தூக்கம் கெடும்னு போகாமல் விட்டுருவேன். 'ப்ராக்டீஸ் போகாமல் தூங்குறா... தூங்குறா’-ன்னு அம்மா திட்டிட்டே இருப்பாங்க. அதனால், கோவிச்சுக்கிட்டு காலையில் சாப்பிடாமலேயே ஸ்கூலுக்குப் போயிருவேன். அப்புறம் அதுக்கும் திட்டுவாங்க. ஸ்கூல் கிளம்புறதுக்கு டைம் பத்த மாட்டேங்குது. தலைக்குக் குளிச்சாக் காயாதுன்னு வாரத்தில் ஒரு நாள்தான் தலை குளிப்பேன். அதுவும் கஷ்டமான விஷயம்தான். ஸ்லோகம் கத்துக்கிறேன். ஸ்கூல் போற அவசரத்தில் ஸ்லோகம் சொல்லி சாமி கும்பிட முடியாமப் போயிரும். இவ்ளோ பிரச்னைகள் எனக்கு இருக்கு. இதெல்லாம் யாருக்கும் புரியுறதே இல்லை.''-ன்னு ரொம்பவே ஃபீல் பண்றாங்க.

''எங்க அம்மா நைட்ல படிக்கச் சொல்லுவாங்க, அப்புறம் காலையிலும் படிக்கச் சொல்வாங்க, டிரெஸ் போடும்போதும் ஆன்ஸர் கேப்பாங்க... வேனில் ஏறும்போதும் ஆன்ஸர் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. லீவில் சீக்கிரமா எழுந்தால் தூங்கு தூங்கும்பாங்க. அவங்க வேலை எல்லாம் எப்ப முடியுதோ... அப்பதான் நான் எழுந்துக்கணுமாம். ஃபாஸ்ட்டா டிரெஸ் பண்ணச் சொல்லுவாங்க. லேட்டாச்சு லேட்டாச்சுனு சொல்லும்போதே.... ஏதாச்சும் தப்பா செஞ்சிடுவேன். ஸ்கூலில் என்ன நடந்ததுன்னு ஈவ்னிங் சொல்லப்போனா... அப்புறம் சொல்லும்பாங்க... நைட்டு தூங்குறதுக்கு முன்னால் சொன்னா... ஏன் இப்போ சொல்றே?ம்பாங்க. டி.வி. அரை மணி நேரம்தான் பார்ப்பேன். அதுக்கு மேல் போனால், நீ டி.வி.க்கு அடிக்ட் ஆயிட்டேனு சொல்வாங்க. இப்போ செகண்ட் ரேங்க் வாங்குறேன், முதல் ரேங்க் வாங்கணும்னா, டி.வியை விட்டுட்டுப் படினு அம்மா சொல்றாங்க. ஆனால், பேனாவில் இங்க் ஊத்துறேன் ஊத்துறேன்னு ஊத்தவே மாட்டாங்க.'' என்று கடகடவென அடுக்குகிறான் சென்னையில் 4-ஆம் வகுப்பு படிக்கும் சுட்டி பாலமுருகன்.

திட்றாங்க...திட்றாங்க !

கோவை

கோயம்புத்தூரில் நான்காவது படிக்கும் ஸ்ரேயா, ''என்னோட பெரிய பிரச்னையே, மறந்துபோறதுதான். ஸ்கூலில் மிஸ் சொல்லிக் கொடுக்கிறப்ப சூப்பராப் புரியும். ஆனால், வீட்ல ஹோம் ஒர்க் பண்றப்ப,  'இந்தக் கணக்கை எப்படி போட்டே?’னு அம்மா கேட்டா, ஒண்ணுமே புரியாது. ஸ்டெப்ஸ் மறந்துபோனதால், அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு, வடிவேலு அங்கிள் மாதிரி 'அவ்வ்வ்...’னு அழுவேன். பெங்களூரு போயிட்டு வந்த அப்பா, சூப்பரா மிக்கி மவுஸ் டிஸைனில் ஒரு ரப்பர் வாங்கிட்டு வந்தார். ஜாலியா ஸ்கூலுக்குக் கொண்டுபோயி ஃப்ரெண்ட்ஸ்கிட்ட காட்டினேன். ஆனால், அந்த ரப்பரை என்னோட டெஸ்க்கிலேயே வெச்சுட்டு வந்துட்டேன். எக்ஸாம் டைம்ல, காலையில் எந்திருச்சு நல்லாப் படிச்சுருவேன். எக்ஸாம் எழுதுறப்ப, படிச்ச ஆன்ஸரோட முதல் ரெண்டு வரி மறந்து போயிருக்கும். இந்த மறதியை மறக்கிறதுக்கு ரொம்ப சின்சியரா ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.''

திட்றாங்க...திட்றாங்க !

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருண்பாலாஜி-க்கு ரொம்ப முதுகு வலி. காரணம் கேட்டதுக்கு, ''அஞ்சாம் கிளாஸ் பையன் தூக்குற அளவுக்கா புக்ஸ் கொடுக்கிறாங்க? இந்தப் புத்தகப் பையைத் தூக்கித் தூக்கிக் கொக்கி மாதிரி நானும் வளைஞ்சுடுவேன் போலிருக்கு. அதுக்கொரு புக், இதுக்கொரு புக். நோட்ஸ், பாக்ஸ்னு ஊரையே காலி பண்ணி என் முதுகில் தூக்கிவெச்ச மாதிரி இருக்கு. நாங்கள் என்ன ஹெர்குலிஸா? ப்ச்!''

ராமேஸ்வரம்

பரபரன்னு அலையடிக்கிற ராமேஸ்வரத்தில் இருக்கிற சுட்டி ஸ்ரீசிம்கிநாதனுக்கு வித்தியாசமான ஒரு பிரச்னை. ''இரண்டாம் கிளாஸ் படிக்கிற என்னைத் தினமும் ஸ்கூலுக்கு கூட்டிட்டுப்போறது என் அங்கிள். டூவீலர்ல டேங்க் மேலே உட்கார வைக்கிறார். வசதியாக இல்லாம கஷ்டப்பட்டு உட்கார்ந்து  ஸ்கூலுக்குப் போகவேப் பிடிக்கவே இல்லை. இந்த சிம்கியை ஏதோ மூட்டை மாதிரி வண்டியில் உட்காரச் சொல்றார் அங்கிள். கால் நீட்ட முடியலை, கையை மடக்க முடியலை. ஒரே இம்சை.!''

திருநெல்வேலி

திட்றாங்க...திட்றாங்க !

''தூங்கி எந்திரிச்ச கொஞ்ச நேரத்துக்குள்ளே ஸ்கூலுக்குப் போக ஆட்டோ வந்துரும். நேரமாச்சு குளி குளிம்பாங்க அம்மா. பேஸ்ட் எடுத்துக் குடுத்து பல்லு வெளக்கச் சொல்வாங்க. தூக்கக் கலக்கத்தில் இனிக்கும் பேஸ்ட்டை முட்டாயின்னு நெனச்சி விழுங்கிடுவேன். அம்மா திட்டுவாங்க. ஒரு சொம்புத் தண்ணியைத் தலையில் ஊத்தினதுமே குளிச்சிட்டியா குளிச்சிட்டியாம்பாங்க. அப்புறம் அம்மாவே வந்து குளிப்பாட்டுவாங்க. டிரெஸ் போடவே நேரம் பத்தாது. சாப்பிடச் சொல்வாங்க.  சாப்பிட ஆரம்பிச்சதும் ஆட்டோ வந்துரும். சீக்கிரம் சீக்கிரம்னா... எப்பிடித்தான் சாப்பிட முடியும்? டெய்லி இதே தொந்தரவுதான்!'' என்கிறான் மூன்றாம் வகுப்பு சீனிவாஸ்.

திருச்சி

திட்றாங்க...திட்றாங்க !

முத்துக்குமார் கொஞ்சம் அப்செட்.  ''இந்த சயின்ஸ் கிளாஸ் ரொம்பத் தலைவலிப்பா. அதில் ஆரம்பிச்சு, வீட்டுச் சாப்பாடு வரை பாதி விஷயம் நமக்குப் புடிக்காதது தினமும் நடக்குது. லீவில்தான் டி.வி. பாக்குறேன், அப்போ அப்பா பட்டிமன்றம் பாக்குறாரு, அம்மா நாடகம் பாக்குறாங்க. நான் எப்படிப் பாக்குறது? இந்த இட்லியைப் பாத்தாலே, வாந்தி வாந்தியா வருது.  'ஒரு இட்லியை எவ்ளோ நேரம் சாப்டலாம்? நான் அரை மணி நேரமா சாப்பிடுறேன். அப்பவே தெரிய வேணாம்? எனக்கு இட்லி புடிக்கலைன்னு. லஞ்ச் பாக்ஸ்ல மத்தியானமும் இட்லி இருக்குன்னா பார்த்துக்கங்களேன்.'' என்று சலிப்புடன் முடித்தான்.

''ஸ்கூல் லீவ்னு வீட்ல இருந்தால் போதும் கடைக்கு போ. கடைக்கு போனு தொல்லை பண்றாங்க. டி.வி. பாக்கவே எனக்கு புடிக்காது. ஆனால், எப்ப பாத்தாலும் வீட்ல டி.வி. ஓடிக்கிட்டே இருக்கு. தூங்கப் புடிக்கலைன்னா, விளையாடத்தானே போகணும்? ஆனால், அம்மா தூங்கு தூங்குனு தொல்லை பண்றாங்க. வீட்டை விடுங்க... எங்க கிளாஸ் பசங்க இருக்காங்களே, ஐயோ... காமெடிங்கற பேர்ல டெய்லி மொக்கைப் போடுறாங்க. எங்க வீட்ல அடிக்கடி பிரியாணி செய்வாங்க... அது சுத்தமாப் பிடிக்கல... ரொம்பக் கஷ்டம்! இந்த ட்ரெயின்ல போறது ரொம்ப போர். ஆனால், எங்கே போனாலும் ட்ரெயின்லதான் கூட்டிட்டுப் போறாங்க.'' என்கிறான் முஹமது பரித்.