Published:Updated:

எக்கினோடெர்மேடா

கடல் அட்டைகள் !

எக்கினோடெர்மேடா

கடல் அட்டைகள் !

Published:Updated:

ரேஞ்சர் மாமா

##~##

நீர்நிலைகளில் மட்டும் அல்ல, கடலிலும் அட்டைகள் வாழ்கின்றன. இவை ரத்தம் உறிஞ்சுவது கிடையாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடல் அட்டைகள் எக்கினோடெர்மேடா என்ற விலங்கியல் வகையைச் சேர்ந்தவை. நாம் காடுகளில் பார்க்கிற ரத்தம் உறிஞ்சும் அட்டைகள், அன்னலிடா வகையைச் சேர்ந்தவை.

கடல் அட்டைகளில் சுமார் 1,250 வகைகள் உண்டு. வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடாப் பகுதியில் மட்டும் 36 வகைகள் உள்ளன.

ஆழம் குறைந்த கடல் பகுதியில், மணல் கலந்த தரைப் பரப்பில் காணப்படும். தட்டையான மற்றும் நீளமான உடல் அமைப்பும் தடிமனான மேல் தோலும் கொண்டவை. இதற்கு, கடல் வெள்ளரி என்ற பெயரும் உண்டு.

2 செ.மீ. முதல் 2 மீ. வரை வளரும். ஊர்ந்து செல்வதோடு, சில நேரம் நீரில் மிதக்கவும் செய்யும்.

நியூஸிலாந்து கடல் பகுதியில் வாழும் ஒருவகை அட்டை... 'ஸ்ட்ராபெர்ரிக் கடல் வெள்ளரி.’ இது, ஆறு மாதம் வரைகூட உணவு உண்ணாமல் இருக்கும்.

எக்கினோடெர்மேடா

தன் உடலைச் சுருக்கி, சிறிய இடைவெளியில்கூட நுழைந்துவிடும்.

இதன் ரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காரணம், வெனபின் என்ற மஞ்சள் நிறமி. இது மணலில் உள்ள ப்ளாங்க்டன், ஃபோராமினிஃபெரா தாவரங்களை உண்ணும். செரித்ததும், மணல் வெளியே வந்துவிடும்.

பெரும்பாலான இனங்களில்... ஆண், பெண் வேறுபாடு இருக்காது. உடலில் உள்ள ஆண், பெண் உயிரணுக்களைக் கடலில் கலக்கவிடும். கடல் நீரிலே உயிரணுக்கள் சேர்ந்து, புதிய அட்டைகள் உருவாகும்.

எதிரிகள் தொந்தரவு செய்தால், குடல் மாதிரியான ஒன்றை வெளியே தள்ளி, அதில் உள்ள ஹோலோதூரின் என்ற விஷத்தால்  எதிரிகளை ஓடச் செய்யும்.

திசு வளர்ச்சிக்கு உதவும் என்பதால், இதை மருந்தாகவும் உட்கொள்கிறார்கள்.

இதை வேட்டையாடுபவர்களுக்கு  அபராதத்துடன் சிறைத் தண்டனையும் உண்டு.