Published:Updated:

ஸ்மார்ட் ஸ்டிக் சாந்தனு !

பா.சிவராமகிருஷ்ணன் ஆர்.ஷஃபி முன்னா

ஸ்மார்ட் ஸ்டிக் சாந்தனு !

பா.சிவராமகிருஷ்ணன் ஆர்.ஷஃபி முன்னா

Published:Updated:
##~##

சுட்டி விஞ்ஞானி

பார்வையற்றவர்களின் வழிகாட்டி ஸ்டிக். அதில் புதுமையைப் புகுத்தி 'ஸ்மார்ட் ஸ்டிக்’ என்ற பெயரில் தயாரித்து இருக்கிறார் சாந்தனு கங்வார். டெல்லியில் ராமகிருஷ்ணாபுரம் டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படிக்கும் ப்ளஸ் டூ மாணவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கண்டுபிடிப்புக்காக, மத்திய அரசின் ‘CSIR DIAMOND JUBLEE INVENSION’ விருதையும், முதல் பரிசையும் பெற்றிருக்கிறார். ''பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகள் ஸ்டிக்கின் உதவியால் செல்வதைப் பார்த்து இருக்கிறோம். இது, சில சமயம் அவர்களை இடறவைப்பதும் உண்டு. இந்த ஸ்டிக், எதிரில் வரும் தடைகளை உணரவைத்து அவர்களை உஷார்படுத்தினால்  உதவியாக இருக்கும் என யோசித்தேன்.'' என்கிறார் சாந்தனு.

ஸ்மார்ட் ஸ்டிக் சாந்தனு !

மின்னணு சாதனங்களின் செயல்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டும் சாந்தனுவின் மூளைஅதற்கான யோசனையில்  இறங்கியது. விளைவு, நான்கு மாதங்களில் உருவானது 'ஸ்மார்ட் ஸ்டிக்.’

சாந்தனுவின் தந்தை தர்மேந்திரா சிங் கங்வார், ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. தாய் நீத்தா சிங் டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்.

''என்னுடன் படிக்கும் பார்வைத் திறனற்ற சில  மாணவர்கள் படும் சிரமத்தைக் கண்டு இந்த யோசனை வந்தது. டெல்லி ஐ.ஐ.டியில் படிப்பதுதான் எனது குறிக்கோள். அதற்காகக் கடுமையாக உழைத்துவருகிறேன். எனது மூத்த சகோதரரும் அதே ஐ.ஐ.டியில் மூன்றாம் ஆண்டு பயில்கிறார். அவரைவிட நான் எலெக்ட்ரானிக் பொருட்களை மிக எளிதாக சரி செய்துவிடுவேன். இதற்கு முன், ரேடியோ, மெட்டல் டிடெக்டர், இன்டர்காம் ஆகியவற்றையும் தயாரித்து இருக்கிறேன். இந்த ஸ்மார்ட் ஸ்டிக் தயாரிப்பில் ஏற்படும் சந்தேகங்களைக் களைந்து, என் எலெக்ட்ரானிக் ஆசிரியரான டாக்டர். டிங்கரா வழிகாட்டியாக இருந்தார்.'' என்கிறார் சாந்தனு.

ஸ்மார்ட் ஸ்டிக் சாந்தனு !

இந்த ஸ்மார்ட் ஸ்டிக் இரண்டு அடி தூரம் வரை ஏதேனும் தடை இருப்பின் அதனைக் காட்டிவிடும். 400 கிராம் எடையுள்ள  ஸ்டிக்கில் செய்து இருக்கிறார். ஐ.ஆர் சென்ஸார், எலெக்ட்ரானிக் சர்க்யூட் போர்டு, பேட்டரி மற்றும் மோட்டார் ஆகியவற்றைப் பொருத்திய பின் 250 கிராம் எடை  கூடியுள்ளது.

ஸ்மார்ட் ஸ்டிக் சாந்தனு !

இதன் மொத்தச் செலவு ரூபாய் 800 மட்டுமே. இதற்கான பொருட்கள் சுலபமாக மார்க்கெட்டில் கிடைக்கும். ஸ்டிக்கின் வெளியில் தெரியும் ஐ.ஆர் உட்பட சாதனங்களை உள்ளே அடங்குமாறு டிசைன் செய்தால், மார்க்கெட்டில் விற்க ஸ்மார்ட் ஸ்டிக் ரெடி!

சாந்தனு, டென்னிஸ் மற்றும் கூடைப்பந்திலும் தேர்ச்சி பெற்ற வீரர். ஸ்மார்ட் ஸ்டிக் தவிர, மேலும் ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்து இருக்கிறாராம். அதை வரும் ஆண்டுக்கான CSIR Diamond Jublee Invension விருதிற்காக விண்ணப்பித்து இருக்கிறார். அதன் இறுதி முடிவு வருவதற்குள் வேறு யாரும் தயாரித்துவிடக் கூடாது என்பதால் அதன் ரகசியம் காக்கிறார்.

இவ்வளவு திறமை படைத்த சுட்டி விஞ்ஞானிக்கு ரோல் மாடல் யார் தெரியுமா?

''நான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் மற்றும் ஐ -பாட் பார்த்து நான் வியப்பேன். அதன் கண்டுபிடிப்பாளர் ஸ்டீவ் ஜாப்ஸ்தான் என் ரோல் மாடல்'' என்கிற சாந்தனுவை  குழந்தைகளின் தோழர், அப்துல் கலாம் அழைத்துப் பாராட்டி விருந்து அளித்து இருக்கிறார்.

இந்த ஸ்மார்ட் ஸ்டிக்கின் தயாரிப்புக்கு அனுமதி கேட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் பல இவரை அணுகி இருக்கிறன.  ''இதன் காப்புரிமைக்காக மனுச் செய்து இருக்கிறேன். அது கைக்கு வந்த பிறகுதான் உரிமையைக் கொடுப்பது குறித்து யோசிப்பேன். இதன் மூலம் பணம் சம்பாதிப்பது என் நோக்கம் அல்ல.  எத்தனையோ விஞ்ஞானிகள், உலக மக்களின் வாழ்க்கைப் பாதையில் ஏராளமான நல்ல பங்களிப்புகளைச் செய்து  இருக்கிறார்கள். அதில் ஓர் அணில் போன்ற பங்களிப்பாக இதை நான் கருதுகிறேன்'' என்கிறார் சாந்தனு கங்வார் பணிவாக!

ஸ்மார்ட் ஸ்டிக் சாந்தனு !