Published:Updated:

என் IO

அண்டன்பிரகாஷ் ஹாசிப்கான்

என் IO

அண்டன்பிரகாஷ் ஹாசிப்கான்

Published:Updated:

கலிபோர்னிய மாநிலத்தின் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் 1955 பிப்ரவரி மாதம் பிறந்தார்.  பெற்றோரால் வளர்க்க முடியாததால், குழந்தையைத் தத்தெடுத்துக்கொண்ட தம்பதியினர் வைத்த பெயர்தான் ஸ்டீவ் பால் ஜாப்ஸ். ஐந்து வயதாக இருக்கையில், சிலிக்கான் வேலி எனப் பொதுவாக அழைக்கப்படும் பகுதியின் முக்கியமான நகரான மவுண்டன் வியூவுக்கு இடம்பெயர்ந்தனர் ஜாப்ஸ் குடும்பத்தினர்.

ஜாப்ஸின் தந்தை பால், மின்சாரப் பொறியாளர். தாயார், தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஜாப்ஸ் படிப்பில் படு சுட்டி என்றாலும், அதையும் மீறிய ஆர்வம் எலெக்ட்ரானிக்ஸ் மீதுதான். ஓய்வு நேரங்களில் எலெக்ட்ரானிக்ஸ் பற்றி பேசப்படும் இடங்களுக்குச் சென்று, ஆர்வமாகத் தகவல்கள் சேகரிப்பதுதான் பிடித்த பொழுதுபோக்கு.

இவரைப்போலவே எலெக்ட்ரானிக்ஸில் மிகவும் ஆர்வமாக இருந்த ஸ்டீவ் வாஸ்னியாக்குடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்புதான் ஆப்பிள் என்ற நிறுவனம் தொடங்கக் காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் IO

1974-ஆம் ஆண்டு ஏழு மாதங்கள் இந்தியாவில் செலவழித்தார் ஸ்டீவ். டெல்லி, உத்திரப்பிரதேசம், ஹிமாச்சலப்பிரதேசம் என்றெல்லாம் பல இடங்களுக்குப் பேருந்திலேயே பயணித்தார்.

ஆப்பிள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது, அதற்கு அலுவலகம் இல்லை. ஸ்டீவின் படுக்கை அறை, வாஸ்னியாக்கின் கார் நிறுத்தும் இடம் இரண்டிலும்தான் ஆப்பிள் கம்ப்யூட்டர்களைத் தயாரித்தார்கள். 'செய்வன திருந்தச் செய்’ என்பதில் கண்டிப்பாக இருப்பார் ஸ்டீவ். புதிதாக வாங்கிய வீட்டுக்குப் பொருத்தமாக மேசை, நாற்காலி, சோபா போன்றவை கிடைக்கவில்லை என்பதால், பல மாதங்கள் தரையிலேயே அமர்ந்து வேலை பார்த்தவர். தயாரிக்கும் சாதனங் களின் இயக்கத்துக்குச் சமமான அளவிற்கு வடி வமைப்பும் இருக்கவேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்துவார்.

மிகப் பெரிய பணக்காரராக ஆன பின்னரும், தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையைக் கடை பிடித்தவர் ஸ்டீவ். 'அவர்கள் வீட்டு இரவு உணவு ஒரே ஒரு காய்கொண்டு செய்யப்பட்டதாக இருக்கும்'' என்று நினைவுகூறுகிறார் அவரது சகோதரி.

சில பிரச்னைகளால் ஆப்பிள் நிறுவனத்தைவிட்டு வெளியேறும் நிலை வந்தபோது, அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு NeXT என்ற பெயரில் தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கினார்.  தொடர்ந்து பிக்ஸார் (Pixar) என்ற அனிமேட் நிறுவனத்தைத் தொடங்கினார். டாய் ஸ்டோரி, ஃபைண்டிங் நிமோ, வால்-இ, போன்ற படங்கள் தயாரிக்கப்பட்டது இந்த நிறுவனத்தில்தான்.

என் IO

மீண்டும் ஆப்பிள் நிறுவனத்துக்கு வந்த ஸ்டீவ் தயாரித்த நியூட்டன் என்ற சாதனம் தோல்வியைத் தழுவியது. அதை மனதில் கொள்ளாமல், அவர் தயாரித்த ஐ-பாட் பிரபலமானது. அதைத் தொடர்ந்து ஐ-போன், ஐ-பேட் எனத் தொடர்ந்து வெற்றித் தயாரிப்புகளைக் கொடுத்தார்.

2005-ல் அரிய வகைப் புற்றுநோயால் தாக்கப்பட்டார் ஸ்டீவ். முதலில் இதைப்பற்றி அதிகம் கவலை கொள்ளவில்லை. உணவுப் பழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் புற்றுநோயை வென்றுவிடலாம் என நம்பினார். அது நடக்கவில்லை என்பது தெரிந்ததும், கல்லீரல் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

உடல் நலம் எவ்வளவு குறைவாக இருந்தாலும், தன்னால் முடிந்த வரை தனது அத்தனை வேலைகளையும் பொறுப்புடன் பார்த்துக்கொண்ட ஸ்டீவ், இந்த வருடம் அக்டோபர் 5-ல் இயற்கை எய்தினார்.