Published:Updated:

பட்டையைக் கிளப்பும் ரெட்டைகள் !

எஸ்.எம்.காவிய பாரதி, கே.யுவராஜன்

பட்டையைக் கிளப்பும் ரெட்டைகள் !

எஸ்.எம்.காவிய பாரதி, கே.யுவராஜன்

Published:Updated:
##~##

ஒரு அண்ணனும் தங்கையும் இப்போ ஹாலிவுட்டைக் கலக்கிட்டு இருக்காங்க. குட்டியூண்டா இருக்கிறப்பவே உலகம் பூராவும் ஃபேமஸ் ஆன இந்த ஸ்டார்கள் யார் தெரியுமா? 'கராத்தே கிட்’ படத்தில் நம்ம ஜாக்கிசானோடு நடிச்ச சிறுவன் ஜேடன் வில்ஸ் ஸ்மித்தும் அவனது தங்கை வில்லோ ஸ்மித்தும்தான்.

'மென் இன் ப்ளாக்’ ஹீரோ தெரியுமா? செம ஹைட்டா... ஸ்மார்ட்டா ஃபைட் பண்ணுவாரே வில் ஸ்மித்... அவரோட குழந்தைங்கதான் இவங்க ரெண்டு பேரும். உலகம் முழுவதும் இப்ப இவங்க புகழ்தான் கொடிகட்டிப் பறக்குது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜேடன் முதலில் நடிச்சது 'தி பெர்ஸுயூட் ஆஃப் ஹேப்பினெஸ்’ அது 2006-ல் வந்தது. அதில் நடிக்க இவனுக்கு முதல் முதலாக சான்ஸ் கிடைச்சபோது, அவங்க அம்மா - ஜேடா பின்கிட் ஸ்மித், முடியாதுனு மறுத்துட்டாங்களாம். ஜேடனுக்கு முகம் சின்னதாப்போச்சு. அப்பாக்கிட்ட போய் நின்னான். காரணம், அவர்தான் அந்தப் படத்தின் ஹீரோ. 'நானே அம்மாகிட்ட பர்மிஷன் வாங்கித்தான் நடிக்கிறேன்’ என்று சிரித்தாராம்.

பட்டையைக் கிளப்பும் ரெட்டைகள் !

அப்புறம் ஜேடன் தன் அம்மாவோட தாடையைப் பிடிச்சுக் கொஞ்சிக் கொஞ்சி... சம்மதம் வாங்கினான். 'நீ சினிமாவில் நடிச்சா உனக்கு ஆதரவாக உன்கூட நான் வரணும். அப்ப நான் ஷூட்டிங் நடிப்புனு போயிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. அதனால், இனிமே நான் சினிமாவில் நடிக்கலை’னு நடிகையாக இருந்த ஜேடனின் அம்மா தன் வேலைகளை விட்டுட்டு, ஜேடனுக்குத் துணையாக ஷூட்டிங் போயிட்டு இருக்காங்க.

அந்தப் படத்தில் அப்பா வில் ஸ்மித்தின் பையனாவே ஜேடன் நடிச்சான். அப்போ அவனுக்கு எட்டு வயசு. படத்தில் அப்பாகூட சண்டை போட்டுக்கிட்டு அம்மா கோவிச்சிட்டுப் போயிருவாங்க. சரியான வேலை இல்லாமல்... கையில் காசும் இல்லாமல் வீட்டைக் காலி பண்ணிட்டு அப்பாவும் பையனும் ரோட்டில் அல்லாடுற அல்லாட்டம் இருக்கே... கண்ணீர் வரவெச்சுப் பின்னிட்டான் ஜேடன்.

2008-ல் 'தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில்’ படத்தில் நடிச்சான். 2010-ல் 'தி கராத்தே கிட்.’ இது, ஜேடனை ஓவர் நைட்டில் உலகப் புகழ் உச்சிக்கு கொண்டுபோயிருச்சு. அந்தப் படத்தின் தீம் சாங்கான 'நெவர் சே நெவர்’ பாட்டையும் பாடி, பட்டையைக் கிளப்பினான். அந்தப் படத்துக்கு ஜேடனுக்குக் கிடைச்ச சம்பளம் ஒரு மில்லியன் டாலர். படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிச்சதில் போனஸாக் கிடைச்சது ரெண்டு மில்லியன் டாலர்!

பட்டையைக் கிளப்பும் ரெட்டைகள் !

இந்தப் படத்துக்காக மூணு மாசம் ஜேடனுக்கு மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சி கொடுத்த ஜாக்கிசான்,  ''இவன்தான் ஹாலிவுட்டின் அடுத்த மிகச் சிறந்த மார்ஷியல் ஆக்டர்.'' என்றார். இப்போ கொலம்பியா பிக்ஸர்ஸின் 'ஒன் தவுசண்ட் ஏ.ஈ’ படத்தில் நடிக்க இருக்கிறான்.  

ஜேடன் இப்படின்னா, அவன் தங்கை வில்லோவும் லேசுப்பட்ட பாப்பா இல்லை. செம ஷார்ப். அவளுக்கு தினமும் தன்னோட ஹேர் ஸ்டைலை மாத்திக்கிறது ரொம்பப் பிடிக்கும். இதுவரை அவளே புதுசுபுதுசா 20 ஹேர் ஸ்டைலை உருவாக்கி இருக்கிறாள். வில்லோ ரெண்டு மியூசிக் ஆல்பத்தில் பாடி நடிச்சு இருக்கிறாள். இரண்டு ஆல்பங்களும் செம ஹிட்!

பட்டையைக் கிளப்பும் ரெட்டைகள் !

அப்பா வில் ஸ்மித் நடிச்ச, 'ஐ யம் லெஜன்ட்’ படத்தில் சின்ன ரோலில் நடித்த வில்லோ, இப்போ அண்ணன் ஜேடனோடு சேர்ந்து நடிக்கும் படம், 'அமுலெட்.’ இது பிரபலமான மந்திரக் காமிக்ஸ் கதை. இந்தக் கதையில் அண்ணன் - தங்கையாகவே நடிக்கிறாங்க. வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் 2012-ல் திரைக்கு வருது.

இவங்க ரெண்டுபேரும் பிரபலம் ஆகிட்டதால், எங்கே போனாலும் ரசிகர்கள் கூட்டம் சேர்ந்திடுதாம். அதனால், வீட்டுக்கே மாஸ்டரை வரவெச்சுப் படிக்க வைக்கிறாங்க.

இந்த ஸ்டார்கள் சம்பாதிக்கிறதை அப்படியே வீட்டுக்குக் கொண்டுபோறது இல்லை. ரெண்டு பேருக்குமே ரொம்பவே இரக்க மனசு. ஆப்ரிக்க நாடுகளில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏகப்பட்ட நிதியை இவங்க நன்கொடையாக் கொடுத்து இருக்காங்க. குறிப்பா, ஜாம்பியாவில் எய்ட்ஸ் நோயால் பெற்றோரை இழந்து  தவிக்கும் ஒன்றரைக் கோடிக் குழந்தைகளுக்காக செலவிட இருக்காங்க. இந்தச் சுட்டிகளுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு!