Published:Updated:

ரேஞ்சர் மாமா

விஷ அம்புத் தவளை

ரேஞ்சர் மாமா

விஷ அம்புத் தவளை

Published:Updated:
##~##

இரண்டு அங்குல நீளம், அட்டகாசமான வண்ணங்களைக் கொண்ட மிகச் சிறிய தவளை இது.

இந்தத் தவளையின் தோலில் சுரக்கும் விஷம், மிகவும் ஆபத்து. குண்டூசியின் தலை அளவு உள்ள இதன் விஷம், ஒரே சமயத்தில் 10 ஆட்களைக் கொல்லும் திறன் வாய்ந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் தவளையைத் தொட்டாலோ அல்லது சாப்பிட்டாலோ ஆள் க்ளோஸ். அமெரிக்கப் பழங்குடிகள் தங்கள் அம்பின் நுனியில் இதன் விஷத்தைத் தடவிப் பயன்படுத்தியதால், இதற்கு விஷ அம்புத் தவளை என்று பெயர் வந்தது.

இதன் விலங்கியல் பெயர் டெண்ட்ரோபேட்ஸ் அஸ¨ரஸ்(Dendrobates azureus).

ரேஞ்சர் மாமா

தென் அமெரிக்காவில் சூரினாம் என்ற சிறிய பகுதியிலும், மத்திய அமெரிக்காவில் உள்ள மழைக் காடுகளிலும் இவை அதிகமாகக் காணப்படுகின்றன.

அடர்ந்த நிழல் மற்றும் ஈரப்பதம் உள்ள பகுதிகளில் வசிக்கும். இந்த வகை தவளைகள் தான் வாழும் எல்லைக்குள் மற்ற இனத் தவளைகளை அனுமதிப்பது இல்லை.

இனப்பெருக்கக் காலத்தில், பெண் தவளையானது  பத்து முட்டைகள் வரை இடும். முட்டைகளை ஆண் தவளை பாதுகாக்கும்.

1968-க்குப் பிறகே இப்படி ஓர் இனம் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். எறும்புகள், சிறு குளவிகள், ஈக்கள், சிலந்திகள், புழுக்கள், இலை மக்கில் திரியும் சிறிய பூச்சிகள் போன்றவைதான் இவற்றின்  உணவு.

காட்டில் வாழும் போது, ஆறு  ஆண்டுகள் வரை உயிர் வாழும். மனிதர்களால் ஆராய்ச்சிக்காக சோதனைச்சாலைகளில் வளர்க்கப்படும்போது, 10 ஆண்டுகள் வரைகூட இவை உயிர் வாழும். இவற்றின் எடை சுமார் 8 கிராம் மட்டுமே!