Published:Updated:

சுட்டி விஞ்ஞானி

செல்வச் சிநேகிதன் சந்துரு !என்.சுவாமிநாதன் படங்கள் : ரா.ராம்குமார்

சுட்டி விஞ்ஞானி

செல்வச் சிநேகிதன் சந்துரு !என்.சுவாமிநாதன் படங்கள் : ரா.ராம்குமார்

Published:Updated:
##~##

''இப்ப எல்லாம் ஸ்கூல் படிக்கிற பசங்ககூட செல்போன் வெச்சுக்கிட்டு, கேம்ஸ், எஸ்எம்எஸ்னு பேசிக்கிட்டே இருக்காங்க... படிப்பே கெடுது'' என்று சிலர் அலுத்துக்கொள்வதைப் பார்த்து இருப்போம்.

அதே பள்ளி வயதில் செல்போனை வைத்து உபயோகமான விஷயங்களையும் செய்யலாம் என்று நிரூபித்து இருக்கிறார்,  கன்யாகுமரி மாவட்டம், தோப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்  பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் சந்துரு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் 2010-ஆம் வருடம் இரவிபுதூர்  அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன். அப்போ, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுத்து, 'இன்ஸ்பயர் அறிவியல் கண்காட்சி’யில் பங்கேற்க அனுப்பினாங்க. அதுக்கு, அரசாங்கத்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. நாகர்கோவில் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துக்கிட்டேன். அதில் 18 பேரைத் தேர்ந்தெடுத்து,  தமிழக அளவிலான போட்டிக்காக சென்னைக்கு அனுப்பினாங்க. அங்கே, மாநில அளவில் 20 பேரைத் தேர்ந்து எடுத்தாங்க. அதிலும் நான் தேர்வானேன். முதல் இடம் வந்த என்னை ப்ளஸ் டூ முடிச்சதும் வேல்டெக் பல்கலைக்கழகத்தில் இலவசமாகவே சேர்த்துக்கிறதா சொல்லி இருக்காங்க'' என்கிறார் சந்துரு சந்தோஷமாக!.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான இன்ஸ்பயர் அறிவியல் கண்காட்சில் கலந்துகொண்ட சந்துரு, தனது கண்டுபிடிப்பைச் செய்துகாட்டி அசத்தி இருக்கிறார்.

சுட்டி விஞ்ஞானி

'ரிமோட் ஸ்விட்சிங் சிஸ்டம்தான் என் கண்டுபிடிப்பு. இதன் மூலம், உலகின் எந்த மூலையில் இருந்தும் நம் வீட்டில் இருக்கிற லைட், ஃபேன், மோட்டார், ஏ.சி.-ன்னு ஏதாவது மூணு பொருள்களை இயங்கச் செய்யலாம். என்னோட ரிமோட் ஸ்விட்ச்சிங் சிஸ்டத்தில்  மோட்டார் மூலமாகத் தண்ணீர் பாய்வது, பல்பு எரிவது, கூடவே சி.டி., பிளேயரும் இயங்குவது மாதிரி வடிவமைச்சு இருக்கேன். இதை

சுட்டி விஞ்ஞானி

ஒரு மொபைல் ஹெட்செட் மூலம் கனெக்ட் செஞ்சு இருக்கேன். ஹெட்செட் கூட இருக்கிற மொபைலின்  சிம்கார்டுக்கு, எந்த போனில் இருந்தும் போன் பண்ணி, இதை இயங்கச் செய்யலாம். போன் பண்ணியதும், ரெண்டாவது ரிங்கிலேயே... ரிமோட் ஸ்விட்ச்சிங் போன் தானாக அட்டெண்ட் ஆகும்'' என்று ஆச்சர்யப்படுத்தினார் சந்துரு.

''செல்போனில் 1-ஆம் நம்பரை அழுத்தினால், பல்ப்  எரியும். 2-ஆம் நம்பரை அழுத்தினால், மோட்டார் மூலமாகத் தண்ணீர் பாயும். 3-ஆம் நம்பரை அழுத்த, லைட், பம்ப் இரண்டும் சேர்ந்து இயங்கும். 4-ஆம் நம்பரை அழுத்தினால், சி.டி.பிளேயர் இயங்கும். 5-ஆம் நம்பரை அழுத்தினால், சி.டி., பிளேயரும், லைட்டும் இயங்கும். 6-ஆம் நம்பரை அழுத்தினால், சி.டி.பிளேயரும், மோட்டாரும் இயங்கும். 7-ஆம் நம்பரை அழுத்தினால், மூணுமே செயல்படும். இயக்கத்தை நிறுத்துறதுக்கு 8-ஆம் நம்பரை அழுத்தணும். இதில் குறிப்பிட்ட நேரத்தில் ஆஃப் ஆகும் மாதிரி டைமர் சிஸ்டத்தையும் பொருத்தி இருக்கேன். அதனால், மின்சாரச் செலவும் அதிகம் வராது. வீட்டில்  இருக்கும் நோயாளிகள், தாத்தா, பாட்டிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். விவசாயிகளும் மோட்டார் பம்ப் செட் ஸ்விட்ச்சை வீட்டில் இருந்தே  அணைச்சுக்கலாம். அவ்வளவு ஏன்...  வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் இருக்கிற அம்மாக்கள் எல்லாம் அறக்கப் பறக்க மோட்டாரைப் போடுறதுக்கு குட்பை சொல்லிட்டு, ரிமோட் ஸ்விட்ச்சிங் சிஸ்டத்துக்கு வெல்கம் சொல்லலாம். எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்த தலைமை ஆசிரியர் தங்கம் சோபனா மற்றும் என் பெற்றோர் ஒத்துழைப்பும் சேர்ந்ததே இந்தக் கண்டுபிடிப்பு'' என்கிறார் சந்துரு.

எடுங்கள் ரிமோட்டை!

சுட்டி விஞ்ஞானி
சுட்டி விஞ்ஞானி