Published:Updated:

எப்படி வந்தேன் தெரியுமா ?

ஷுஇரா. நடராசன்

எப்படி வந்தேன் தெரியுமா ?

ஷுஇரா. நடராசன்

Published:Updated:
##~##

வணக்கம்.... நான்தான் உன் கால்களைப் பத்திரமாப் பார்த்துக்கொள்வதோடு, உனக்கு 'டிப் டாப்பான’ தோற்றத்தைத் தரும் ஷூ பேசுறேன். நான் எப்படி வந்தேன் தெரியுமா?

முதலில், என்னோட பாகங்களைத் தெரிஞ்சுக்கலாம். அப்புறம், நான் தயாராகும் இடத்தைப் பார்க்கலாம்.  என்னை மாதிரி ஒரு யூனிபார்ம் ஷூ-வில் சோல், ஹீல் மற்றும் மேற்புறம் என மூன்று பாகங்கள் இருக்கின்றன. சோல் என்பது எனது அடிப்பாகம், தரையில் தேயும் பகுதி. அதில் மேல் சோல், நடு மற்றும் அடி சோல்னு  பிரிக்கப்பட்டு இருக்கும். மேல் சோல் மெத்துனு உன் கால்களுக்கு இதமாகவும், நடுசோல் உன் எடைக்கு ஏற்ப, வெப்பத்தை மிதமாக்கும் ஸ்பாஞ்சால் ஆனது. அடி சோல் பெரும்பாலும் டயர் செய்யும் ரப்பரால் ஆனது. இது ரொம்ப நாள் தேயாது பாதுகாக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்தது ஹீல். இது பின் பாதத்தைத் தாங்கவும், சில சமயம் உன் உயரத்தைக் கூட்டி, மிடுக்காகக் காட்டவும் இணைக்கப்படும் ரப்பர். போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களின் ஷூக்களில் இந்தப் பகுதியில் தேய்வைத் தாங்கிட, லாடத்தை இணைச்சு இருப்பாங்க.

எப்படி வந்தேன் தெரியுமா ?

மேற்புறம் வாம்ப் எனப்படுகிறது. என்னை எடுப்பாகவும் அழகாகவும் காட்டும் முக்கியப் பகுதி. இது பல வகைப் பொருட்களால் ஆனது. விளையாட்டு வீரர்கள், காவலர்கள் என அவரவர்களின் தேவைக்கேற்ப, துணி, தோல், சணலால்கூட அதைச் செய்வார்கள்.

இனி, நான் எப்படி உருவாகிறேன் என்று பார்ப்போம். நான் தயாராகும் தொழிற்சாலையில் பொதுவாக நான்கு துறைகள் இருக்கும். கட்டிங் பகுதி. எனது மேற்புறத்தைத் தயாரிக்க வெட்டும் இடம் இது. இங்கே அளவுக்கு ஏற்ப, தையல் இயந்திரங்களால் வெட்டப்படுவேன்.

பிறகு 'கப்’ போல வளைவான, திடமான பகுதியை உருவாக்க, மெஷினிங் எனப்படும் முப்பரிமாணத் தையல் பகுதி (குளோஸிங் டிபார்ட்மென்ட்) எனும் இரண்டாம் பகுதிக்குச் செல்வேன். மெஷினிங் துறையில் வேலைகள் படிப்படியாக நடக்கும். என் முனைகளை மடித்து மேற்புறத்தைப் பளபளப்பாக்கும் வேலையையும்  இயந்திரமே செய்துவிடும்.

எப்படி வந்தேன் தெரியுமா ?

அடுத்து, லாஸ்டிங் எனப்படும் துறைக்குச் செல்வோம். அங்கே, எனது அடித்தளம் ஏற்கெனவே இயந்திரங்கள் மூலம் பல்வேறு சைஸ்களுக்கு அழகாக, அச்சாக அடித்து வைக்கப்பட்டு இருக்கும். எனக்கு சைஸ் வாரியாக அங்கே 'கால்’ பதிப்பார்கள். இதற்கு ஃபுட் ஷேப்பிங் என்றும் பெயர். உள் சோல், பிறகு நடு சோல், கடைசியாக அடி சோலை இணைக்கும் நீண்ட வேலையில்... பல நூறு பேர் உழைக்கிறார்கள். இந்த வாஸ்டிங் துறையில்தான், பின் நாட்களில் நீ லேஸ் போட்டு என்னை உன் காலோடு கட்ட, பொத்தல் பித்தான்களும் வைக்கிறார்கள்.

கடைசியாக ஷூ ரூம். அதாவது, ஃபினிஷிங் துறை. இங்கேதான் எனக்கு இறுதி வடிவம் தரப்படுகிறது. தேவைப்பட்டால் பளபளக்கும் வெள்ளி, தங்க முலாம் பூசிய பட்டன்களை வைப்பது, லேட்டஸ்ட் ஸ்டைல்படி அமைப்பது, வலது கால், இடது கால் ஷூக்களைச் சரியாகச் சேர்த்து எனது ஜோடியைக் கண்டுபிடித்து இணைப்பார்கள். ஒன்றிரண்டு தையல் அவசரமாய்ப் போட்ட இடங்களில் பசை தீட்டுவார்கள். பிறகு, என்னை ஜொலிக்க வைக்க... என் தோல் உடம்பில் பிசின் தடவி மெருகு ஏற்றுவார்கள். கடைசியாக எனக்கு ஏற்ற லேஸ் கயிறை இணைத்துக் கட்டுவார்கள்.

இப்படி மிளிரும் என்னை, அழுக்குப்படாமல் மெல்லிய காகிதங்களால் சுற்றி, மிகவும் பத்திரமாகப் பெட்டிகளில் போட்டு, கடைகளுக்கு அனுப்புவாங்க.  இப்படித்தான் நான் உன்னிடம் வந்து சேர்கிறேன்!