Published:Updated:

கலர்புல் ஹுரோ !

இர.ப்ரீத்தி

கலர்புல் ஹுரோ !

இர.ப்ரீத்தி

Published:Updated:
##~##

எட்டு வருடங்களாகத் தொடர்ந்து சுட்டிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பவர், போகோ சேனலில் 'விகிஞி’ நிகழ்ச்சி நடத்தும் ஹரூண் ராபர்ட். தனது க்ரியேட்டிவிட்டி மூலம் ஏராளமான குட்டீஸ்களை தன் ரசிகர் பட்டாளத்தில் அடக்கியவர்... எப்படி இந்த உயரத்தை எட்டினார் என்பதை அவரே சொல்கிறார்...

''நமக்கு பிடிச்ச விஷயத்தை முழு ஈடுபாட்டோட செய்தாலே எல்லா உயரமும் சாத்தியம்தான். தினமும் புதுப் புது விஷயங்களைக் கத்துக்க முயற்சி செஞ்சது. இந்தத் துறையில் நான் இன்னும் என்ன என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டே இருப்பேன். ஏன்னா, எனக்கு எல்லாம் தெரியும்னு சொல்றதை விட, நான் இன்னும் கத்துக்கணும்னு சொல்றதுதான் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடையாளம்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எப்படிக் கிடைச்சது போகோ சேனல் 'மேட்’ வாய்ப்பு?

கலர்புல் ஹுரோ !

''டெல்லியில் ஸ்கூல் படிக்கும்போதே லீவு நாட்களில் சும்மா இருக்காமல், மனசுக்குத் தோன்றிய எதையாவது கலர்கலரா செஞ்சு அசத்துவேன். அந்த ஈடுபாடுதான் என்னைக் கல்லூரியில் நுண்கலையைத் தேர்ந்தெடுக்க வெச்சது. என் கனவுக் குதிரை இன்னும் வேகம் பிடிக்க அந்தப் படிப்பு ரொம்பவே உதவியது. அடுத்து, அனிமேஷன் துறையில் மெள்ள ஈர்ப்பு வரவே, கல்லூரி மேற்படிப்பிற்கு அனிமேஷனையே தேர்ந்தெடுத்தேன். படிப்பு முடிச்ச கையோடு பல கனவுகளுடன் மும்பைக்கு வந்தேன். அனிமேஷன் துறையில் மெள்ள மெள்ள முன்னேறி 'வியாதவ்’ங்கிற ஸ்டூடியோ மூலமா நிறைய அனிமேடிவ் புராஜெக்ட்ஸ் செய்ய ஆரம்பிச்சேன். அதன் மூலமா கிடைச்சதுதான் இந்த போகோ சேனல் 'மேட்’ வாய்ப்பு.  குழந்தைங்களுடைய கற்பனை வளத்துக்குத் தீனி போடுற மாதிரியான விஷயங்களை நான் பண்ணப்போறேன்னு தெரிஞ்சதும், சந்தோஷமா சம்மதிச்சேன். இப்பவும் கனவு போல இருக்கு. எட்டு வருஷம் ஓடிவிட்டது.''

'’சுட்டி வயசுல நீங்க எப்படி?''

கலர்புல் ஹுரோ !

''மனசுக்குத் தோன்றியதை செய்துக்கிட்டே இருப்பேன். இது வேஸ்ட்டுனு எந்தப் பொருளையும் தூக்கிப் போட மாட்டேன். காலி இங்க் பாட்டிலைக்கூட தூக்கிப் போட மனசு வராது. ஏதாவது புதுமையா செய்து பார்த்துட்டே இருப்பேன். 'ஏன்டா வீட்டைக் குப்பையா ஆக்குற''னு அம்மாகிட்ட நான் ஸ்டாப்பா திட்டு வாங்கிட்டே இருப்பேன். ஆனா, வீட்டுக்கு எப்பவுமே நான் ரொம்ப சமர்த்துப் பையன். கொடுக்கிற வேலையைத் தட்டாம செய்திடுவேன். பொதுவா அம்மா, அப்பாவை எதிர்த்துப் பேசாம, சொல்றதைக் கேட்டுக்கிட்டாலே எல்லோரும் சமர்த்துப் பசங்கதான்''

கலர்புல் ஹுரோ !

''உங்க காஸ்ட்யூம் ஸ்டைலுக்கே பயங்கர ஃபேன்ஸ் இருக்காங்களே...?''

சிரிக்கிறார்... ''சொன்னா நம்புவீங்களா... நான் போகோ-வுக்கு இன்டர்வியூ போகும்போதே கார்கோ பேன்ட், டி.ஷர்ட், கேப்-னு பயங்கர கேஷூவலா போய் நின்னேன். என் முதல் அப்ரோச்சே அவங்களுக்குப் பிடிச்சுப் போய், அதையே என் காஸ்ட்யூமா மாத்திட்டாங்க. தலையில் ஒரு ஸ்கார்ஃப் மாதிரி கட்டிட்டு பெயின்ட்டோட பூந்து விளையாடுவது ஒரு ஜாலியான அனுபவம். என்னைப் பொறுத்த வரை, கோட், ஓவர் மேக்கப் போட்டுட்டு போய் கேமரா முன்னாடி நிக்கிறதைவிட, நமக்கு எது பொருந்துதோ... அதையே நம்ம அடையாளமா மாத்திக்கிட்டா, இன்னும் கூலா களத்தில் இறங்கலாம்.''

''வித்தியாசமான ஐடியாக்கள் எங்கே இருந்து பிடிக்கிறீங்க?''  

''எந்த விஷயத்துல நாம் ஈடுபட்டாலும் அதில் முழுமையா இருக்கணும். புதுப்புது விஷயங்களைக் கத்துக்கணும். அதேபோல என்கூட வேலை பார்க்கப்போற குழந்தைங்க ஏதாவது எடக்குமடக்கா கேள்வி கேட்டுட்டாங்கன்னா 'ஙே...'னு முழிக்கக் கூடாதுனு வீட்டில் மூளையைக் கசக்கி கான்செப்ட் பிடிப்பேன். குழந்தைகள் நம்மைவிட அறிவானவங்க. அவங்களை சீக்கிரம் ஏமாத்த முடியாது. ரொம்ப நேர்மையானவங்க, தவறை நம் கண் முன்னாடியே சுட்டிக் காட்டிடுவாங்க. தேங்க் காட். அவங்களால்தான் நான் நிறையப் புது விஷயங்கள் கத்துக்க முடியுது.''

கலர்புல் ஹுரோ !