Published:Updated:

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

Published:Updated:
##~##
சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வசிக்காதாமே உண்மையா ஜீபா?

லோ.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புலி மாதிரி ஒரே அடியா அடிச்சு ஆமான்னு சொல்ல முடியாது. ஆனால், ஓரளவுக்கு உண்மைதான் சுந்தரி. இந்த இரண்டுமே பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால், குணத்திலும் செயல்பாடுகளிலும் இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. சிங்கத்துக்கு அடர்த்தியான மரங்கள், புதர்கள் என்று 'கச்சாமுச்சா’னு இருந்தால் பிடிக்காது, வசிக்கும் இடம் மைதானம் மாதிரி ஓப்பனா இருக்கணும். இலையுதிர் காடுகளில்தான் வசிக்கும். இதுக்கு நேர் எதிரானது புலி. அடர்த்தியான புதர், இருட்டான குகைதான் சாருக்கு இஷ்டம். அதனாலேயே, சிங்கங்கள் இருக்கும் இலையுதிர்க் காட்டில் புலிகள் இருக்க விரும்பாது. கூடவே ஒரு தகவல் சொல்லட்டுமா? இந்தியாவிலேயே குஜராத்தில் இருக்கும் 'கிர்’ காட்டில் மட்டும்தான் சிங்கங்கள் இருக்கு.

டியர் ஜீபா... புரூஸ் லீ எப்படி இறந்தார்?

கோ.ப.பாலாஜி, தஞ்சாவூர்.

புரூஸ் லீ இறந்து 40 வருஷங்கள் ஆகப்போகுது. புரூஸ் லீ இறந்தபோது, இப்போ இருக்கிற சுட்டிகள், இளைஞர்கள் யாருமே பிறந்துகூட இருக்க மாட்டோம். ஆனாலும் இந்தக் கேள்வியைக் கேட்கிற அளவுக்கு மிகப் பெரிய சாதனையைச் செய்துவிட்டு மறைந்துவிட்டார் இந்த கராத்தே மன்னன். அமெரிக்கத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கின படம், 'என்டர் த டிராகன்.’ இது, அப்போதே அமெரிக்காவில் மட்டும் 8,50,000 டாலர் வசூல் செய்தது. ஆனால், இந்தப் படம் வெளியாவதற்கு மூன்று வாரங்கள் முன், இரவு நேரம் தலைவலி என்று புரூஸ் லீ, ஒரு தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டுப் படுத்தார். பிறகு, எழவே இல்லை. ஹாங்காங்கில் இருக்கும் குயின் எலிசபெத் மருத்துவமனைக்குத் தூக்கிட்டுப் போனாங்க. அங்கே கோமா நிலைக்குப் போனவர், 1973 ஜூலை 20-ல் இறந்துவிட்டார். இன்று வரை அவரின் மரணம் மர்மமாகவே இருக்கிறது.    

மை டியர் ஜீபா !

என் நோட்டுப் புத்தகத்தில் ஒரு மயிலிறகு வெச்சுட்டு இருக்கேன். ஆனால், அது குட்டி போடவே இல்லை... ஏன் ஜீபா?

     பி.கோபி, கிருஷ்ணகிரி

நான்கூட கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு கோழியை வாங்கிவந்து வீட்டில் வெச்சுட்டு இருந்தேன். தினமும் அதிகாலையில் அதுதான் என்னைக் கூவி எழுப்பும். நானும் காலையில் எழும்போது எல்லாம்... அது முட்டை போட்டு இருக்கும், ஆம்லேட் பண்ணிச் சாப்பிடலாம்னு ஆசையோடு பார்ப்பேன். ரொம்ப நாளாகியும் போடவே இல்லை. ஒரு நாள் வழக்கம்போல கூவி எழுப்பிச்சு. ரொம்பக் கடுப்பாகி, ''இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஏன் முட்டை போட மாட்டேங்கிறே?''னு கேட்டேன். ''அடேய் ஜீபா... இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் என்னால் முட்டை போட முடியாது. ஏன்னா... நான் கோழி இல்லே சேவல்''னு சொல்லிச்சு. அந்த மாதிரி, நீ நோட்டுப் புத்தகத்தில் வெச்சுட்டு இருந்தது ஆண் மயிலின் இறகா இருக்குமோ? எதுக்கும் உன்னோட விலங்கியல் ஆசிரியர்கிட்டே காட்டி கேட்டுப் பாரேன். சும்மா ஜோக்குக்கு சொன்னேன். மயிலிறகு எப்பவுமே குட்டி போடாது. உதிர்ந்த நம் தலைமுடி எப்போவாவது குட்டி போட்டது உண்டா என்ன?

எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் ஜீபா, பேய் இருக்குதா இல்லையா? தயவுசெய்து சொல்லு?

   -ரா.வீரபாண்டியன், புதுக்கோட்டை.

மை டியர் ஜீபா !

இறந்தவர்கள்தான் பேயாகச் சுத்துவாங்கன்னு சொல்றாங்க. கொஞ்சம் யோசிச்சுப் பாரு வீரபாண்டி... உலகமும் உயிரினங்களும் தோன்றி லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகுது. இதில் எத்தனையோ உயிரினங்கள் பிறந்து, இறந்து இருக்கு. அதில் ஓர் இனம்தான் மனிதன். இறந்தவர்கள் பேயாக மாறுவாங்க என்றால், மற்ற உயிரினங்களும் பேயாக மாறி இருக்கணுமே. ஒரு நாய் ஆவியோ, பூனைப் பேயோ, சிங்கப் பிசாசோ உலவினதா கேள்விப்பட்டு இருக்கியா? இல்லே... அதுங்கதான் அப்படி நினைச்சுப் பயந்து இருக்கா? ஏன்னா, அவற்றுக்கு எல்லாம் சிந்தனை இல்லை. மனிதனுக்கு அது இருக்கு. மனிதனை உயர்த்துவதும் சிந்தனைதான். அவனை இப்படி எல்லாம் கற்பனையாக  நினைக்கவைக் கிறதும் சிந்தனைதான். இப்போ, நீயே சொல்லு... பேய் இருக்கா? இல்லையா?

ஜீபா, குதிரைகள் உட்காராது எனக் கேள்விப்பட்டேன். அப்படின்னா குதிரைக்கு கால் வலிக்காதா?

    ரா.ராஜகுரு, நிலக்கோட்டை

இதைப் பற்றி வெட்னரி டாக்டர்கிட்டே கேட்டேன் ராஜகுரு... மற்ற விலங்கு களுக்கு இல்லாத சிறப்பான உடல் அமைப்பையும் வலிமையையும் குதிரை பெற்று இருக்காம். அதனால், மற்ற விலங்குகளைவிட குதிரையால் நீண்ட நேரம் நிற்க முடியும். மத்தபடி, குதிரையும் உட்காரும். குஷன் மாதிரி புல் கட்டு களைப் போட்டு வெச்சா, ஹாயாகப் படுத்துக்குமாம்.

மை டியர் ஜீபா !