Published:Updated:

ஸ்கூல் ஸ்டார் !

ம.சபரிபடங்கள் : எம்.விஜயகுமார்

ஸ்கூல் ஸ்டார் !

ம.சபரிபடங்கள் : எம்.விஜயகுமார்

Published:Updated:

பெயர்: த.கவிப்பிரசாத்
வகுப்பு: 5-ஆம் வகுப்பு
பள்ளி: ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சேலம்.      
சாதனை: குழந்தை ஓவியர் விருது.

##~##

''கவியைப் பார்க்கணுமா? ஓவியர் இப்போ ரொம்ப பிஸியா இருப்பாரே...'' என்று செம பில்டப் கொடுத்தனர் சுட்டிகள். அவர்கள்... கவிப்பிரசாத்தின் நண்பர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த கவிப்பிரசாத் படிப்பது, ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு.

ஒரு சூழ்நிலையைச் சொல்லிவிட்டால் போதும், அடுத்த நொடி பேப்பர், பிரஷ், வண்ணங்களுடன் உட்கார்ந்து கிடுகிடு என வரைய ஆரம்பிக்கிறார். சற்று நேரத்தில் அழகான ஓவியம் ரெடி!

''போன வருடம், ஓசூரில் உள்ள 'இந்தியக் கலைத் தொழில்நுட்பக் கழகம்’ நடத்திய போட்டியில், எனக்கு 'குழந்தை ஓவியர்’ விருது கொடுத்தாங்க'' என்று மழலைக் குரல் மாறாமல் சொல்கிறார் கவிப்பிரசாத்.

பள்ளிகளுக்கு இடையே நடத்தப்படும் ஓவியப் போட்டிகளிலும் முதல் பரிசு எப்பவுமே கவிப்பிரசாத்துக்குதான்.

ஸ்கூல் ஸ்டார் !

''வீட்டில் எங்கள் யாருக்கும் ஓவியம் வரையும் பழக்கம் கிடையாது. கவிக்கு இயல்பாகவே இந்தத் திறமை வந்தது எங்களுக்கு ஆச்சர்யம்.  இரண்டு வருஷத்துக்கு முன், யுசிமாஸ் (uநீனீணீs) நடத்திய ஓவியப் போட்டியில் சிறந்த ஓவியர்  பரிசைப் பெற்றான்.  அப்புறம்தான் டிராயிங் கிளாஸ்ல சேர்த்துவிட்டோம். அதில் இருந்து பல பரிசுகளைக் குவிச்சுட்டு இருக்கான்'' என்று பெருமையுடன் கூறுகிறார் கவியின் அம்மா சங்கீதா.

அப்பா தங்கவேல், வீடுகளுக்குத் தேவையான கட்டில், பீரோ போன்றவற்றை தவணை முறையில் விற்பனை செய்து வருகிறார். அண்ணன் யுவப்பிரகாஷ், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.

ஸ்கூல் ஸ்டார் !

''கவிப்பிரசாத் படிப்பிலும் ரொம்பக் கெட்டிக்காரன். கணிதம், அறிவியலில் 100 மதிப்பெண்கள் எடுப்பான். சொல்றதை உடனே புரிஞ்சுக்கிட்டு செய்றதில் கில்லாடி. லஞ்ச் பிரேக்கில்கூட ஏதாவட்வரைஞ்சுட்டு இருப்பான்'' என்கிறார் கவிப்பிரசாத்தின் வகுப்பு ஆசிரியர் சுஜா இப்ராஹிம்.

பள்ளியின் தாளாளர் ஜுலியா மேரி,  ''சில மாதங்களுக்கு முன் எங்கள் பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில், 'தொழிற்சாலை மூலமாக ஏற்படும் மாசுபாடு’ என்ற தலைப்பில் வரையச் சொன்னோம். உடனே ஒரு ஆலைகளில் இருந்து கழிவுகள் ஆற்றில் கலப்பது போலவும், அந்த ஆற்றில் ஒருவர் குளிப்பது போலவும், அங்கு இரு பெண்கள் தண்ணீர் எடுப்பது போலவும், அங்கேயே ஒருவர் மாடுகளைக் குளிப்பாட்டுவது போலவும் வரைஞ்சு பிரமிக்கவெச்சான். கவியால் இந்தப் பள்ளிக்கே பெருமை'' என்றார்.

ஸ்கூல் ஸ்டார் !

''அனிமேஷனில் கலக்க வேண்டும் என்பதுதான் என் எதிர்கால லட்சியம். எதையாவது செய்ய நினைச்சா, அதில் தயக்கமோ, பயமோ இருக்கக் கூடாது. செய்துதான் பார்ப்போமேனு இறங்கிடணும். அப்பதான் ஜெயிக்க முடியும்'' என்கிறார் கவிப் பிரசாத்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism