Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

Published:Updated:
பென் டிரைவ் !
பென் டிரைவ் !

மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரைச்  சேர்ந்தவர் ஜோதி அம்கே. டிசம்பர் 16-ஆம் தேதி தனது 18-வது பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில், கின்னஸ் சாதனை அவரைத் தேடிவந்தது. ஆம்... உலகின் மிகக் குள்ளமான பெண் என்ற விருது கிடைத்துள்ளது. 62.8 செ.மீ உயரமே இருக்கும் ஜோதி, அமெரிக்காவைச் சேர்ந்த பிரிட்ஜெட் ஜோர்டான் (69 செ.மீ) என்ற பெண்ணை பின்னுக்குத் தள்ளி இந்தப் பெருமையைப் பெற்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பென் டிரைவ் !

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில்... ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் ரூ.1,000 பரிசுத் தொகை வழங்க இருக்கிறார்கள். அப்படி 100 சதவீதம் வருகைப் பதிவு வாங்கும் மாணவர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று பரிசுத் தொகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி முடிவுசெய்து இருக்கிறது. மாணவ மாணவிகள் ஒரு நாள்கூட தவறாமல் பள்ளிக்கு வருகை தர ஊக்குவிக்கவே இப்படி ஒரு பரிசுத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது சென்னை மாநகராட்சி.

பென் டிரைவ் !

 அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், வருடா வருடம் கிறிஸ்துமஸை முன்னிட்டு விழாக்கள் கொண்டாடப்படும். அதில் ஒரு பகுதியாக, 'தேங்ஸ் கிவ்ங் பரேட்’ என்ற பெயரில் ஒரு விழா நடக்கும்.  அப்போது, அமெரிக்கக் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமான ஆடை அலங்காரம், இசை நிகழ்ச்சி என ஊர்வலம் செல்கிறார்கள். அதில் ஒரு பகுதிதான் பலூன் ஊர்வலம். பிரசித்தி பெற்ற கார்ட்டூன் கேரக்டர்களைக்கொண்டு ஹீலியம் பலூன்களைத் தயாரித்து, மேலே பறக்கவிட்டபடியே ஊர்வலமாகச் செல்கிறார்கள். பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்தப் பலூன் ஊர்வலத்தை ’பிவீரீலீ கிக்ஷீt’ என்று அழைக்கின்றனர். இந்தப் பலூன்களை வடிவமைத்தவர், ஜப்பான் ஆர்ட்டிஸ்ட் டகாஷி முரகாமி.

பென் டிரைவ் !

தூரத்தில் இருக்கும் ஒரு பொருளைப் பார்த்து சரியாகச் சொல்லிவிட்டால், 'உனக்கு கழுகுப் பார்வைடா’ என்போம். அதனால்தான், மங்கோலியர்கள் வேட்டையாடுவதற்குக் கழுகுகளைப் பயன்படுத்து கிறார்கள். போலீஸ் நாய்களுக்கு ட்ரெய்னிங் தருகிற மாதிரி, இந்தக் கழுகுகளுக்கும் வேட்டையாடக் கடினப் பயிற்சிகளைத் தருகிறார்கள் மங்கோலியர்கள். வருடா வருடம் அங்கு கழுகுகளுக்கு வேட்டைப் போட்டியும்  நடத்தப்படுகிறது. ஒரு மைதானத்தில் முயல், குள்ளநரி போன்ற சிறிய விலங்குகளை விட்டுவிடுவார்கள். அவற்றை எந்தக் கழுகு சீக்கிரத்தில் உயிரோடு பிடித்துத் தன் எஜமானிடம் தருகிறதோ... அந்தக் கழுகு வெற்றி பெற்றதாக அறிவித்து, அதற்குப் பரிசுகளும் தருகிறார்கள். இந்தக் கழுகு வேட்டைப் போட்டியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கிறார்கள்.

பென் டிரைவ் !

 உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்டவர், கனடாவைச் சேர்ந்த 17 வயது பாப் பாடகர் ஜஸ்டின் பீபர். மிக இளம் வயதில் தனது இசைத் திறமையால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் ஜஸ்டின், ஏழை மாணவர்களுக்காக உதவிகளும் செய்து வருகிறார். கனடாவில் ஓர் அறக்கட்டளையைக் கவனித்துவரும் ஏழை மாணவர்கள், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தினங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக  இவர் அளித்திருக்கும் தொகை மட்டும்

பென் டிரைவ் !

25 கோடி.

பென் டிரைவ் !

 சிறு வயதில் சறுக்கு மரம் விளையாடுவது அனைவருக்கும் பிடிக்கும். காலேஜ் படிப்பு, வேலை என்று சென்றுவிட்டால், இதை மறந்துவிடுவோம். ஆனால், ஜெர்மனியில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் மியூனிச்-ல் மாணவர்களுக்காகவே இரண்டு பெரிய சறுக்கு மரங்களை உருவாக்கி உள்ளனர். மூன்றாம் மாடியில் இருப்பவர்கள் இதில் அமர்ந்தால், நொடியில் 'சர்ர்ர்’ரென்று கீழே வந்துவிடுவார்கள். யுனிவர்சிட்டியில் படிக்கட்டுகள், லிஃப்ட் தவிர, இதுபோல் சறுக்கு மரம் அமைத்து இருப்பது உலகிலேயே இதுவே முதல் தடவை.

பென் டிரைவ் !

 டெல்லி தெருக்களில் ஆதரவற்றவர்களாகத் திரிந்த 60 ஏழைச் சுட்டிகளை நல்வழிப்படுத்தி, அவர்களே முழுக்க முழுக்க இசையமைத்த செய்த ஆல்பம் ஒன்று வெளிவந்துள்ளது. 'Dhanak Dhin: Monsoon with Music Basti  என்ற இசைத் திட்டத்தின் கீழ், மனித உரிமைகள் தினம் அன்று வெளியிடப்பட்ட அந்த ஆல்பம், டெல்லியின் குளிர்கால வாழ்க்கையை வர்ணிக்கிறது. டெல்லியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தின் நோக்கம், சிறுவர்கள் ஒவ்வொருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்குவதும், விழிப்பு உணர்வை உண்டாக்குவதுமே. இந்தப் புதிய முயற்சி பற்றியும், சுட்டிகளின் இசையை ரசிக்கவும் http://dhanakdhin.com என்ற வலைத்தளத்தை நாடலாம்.

பென் டிரைவ் !

தங்கள் பள்ளியைச் சுற்றி 1,500 அடி தூரத்துக்கு நொறுக்குத் தீனிகளும், குளிர்பானங்களும் விற்பதற்குத் தடை விதிக்கவேண்டும் என்று கோரி, தெற்கு டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருக்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் மூலம் நம் நாட்டில் உடல் பருமன் உள்ளிட்ட, வாழ்க்கை முறை சார்ந்த அனைத்து நோய்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது அந்த மாணவர்களின் எண்ணம். அதை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிப் பகுதிகளில் உரிய நடவடிக்கை எடுத்து, அது பற்றிய ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு போட்டு இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism