Published:Updated:

ஆர்யன் கான்

க.ஸ்ரீப்ரியா

ஆர்யன் கான்

க.ஸ்ரீப்ரியா

Published:Updated:
##~##

பாலிவுட் பாட்ஷா. அதாங்க... ஷாருக்கானின் செல்ல மகன் ஆர்யன் கான். மகள்தான் பிறக்கப்போகிறாள் என்ற ஷாருக்கின் நினைப்பை ஏமாற்றி, நவம்பர் 12, 1997ல் பிறந்தவன். ஷாருக்கின் 'கபி குஷி கபி கம்’ படத்தில் குழந்தை ஷாருக்காக நடித்து இருக்கிறான். டிஸ்னியின், 'தி இன்கிரெடிபில்ஸ் இன்’ இந்தி மொழிபெயர்ப்பான 'ஹம் ஹை லாஜவாப்’ படத்தில் தேஜ் கேரக்டருக்குக் குரல் கொடுத்துள்ளான்.

கொல்கத்தா நைட் ரைடர் அணி, பல சறுக்கல்களைச் சந்தித்தபோதும், அணியை வேறு யாருக்கும் கொடுக்காமல் இருக்க, ஆர்யனின் செல்லக் கட்டளைதான் காரணம். அந்த அளவுக்கு ஆர்யனுக்கு விளையாட்டு மீது ஆர்வம் அதிகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூப்பர்மேன் வேடத்தில் அப்பா நடிக்க வேண்டும் என்பது ஆர்யனின் வெகுநாள் ஆசை. அதற்காகவே 'ரா-ஒன்’ படத்தில் நடித்து, படத்தை ஆர்யனுக்கு டெடிகேட் செய்தார் ஷாருக்.

ஆர்யன் கான்

பள்ளி மைதானத்தில் கால்பந்துப் போட்டி நடந்தால், நிச்சயம் ஆர்யனும் இருப்பார். அவருக்குப் போட்டி யார் தெரியுமா? சைஃப் அலிகானின் மகன் இப்ராஹிம். இருவரும் நல்ல நண்பர்கள்.

ஆர்யன் கூச்ச சுபாவி. அப்பாவுக்காக வரும் மீடியாக்கள், தன்னைக் கவர் செய்வது பிடிக்காது. தன் திறமையால் மட்டுமே அறியப்படவேண்டும் என்பதில் ரொம்பவே பிடிவாதம்.

ஆர்யன் கான்

ஆர்யனுக்கு வளர்ப்புப் பிராணிகள் மீது கொள்ளைப் பிரியம். ஆர்யனின் சகோதரி சுஹானாவும் தேசிய அளவில் சிறுவர்களுக்கான கதை சொல்லும் போட்டியில் விருது வாங்கி இருக்கிறார். தன் வீட்டிலேயே ஒரு கதாசிரியர் உருவாகி வருகிறார் என்று பெருமையோடு, சொல்லி இருக்கிறார் ஷாருக்.

டாடி அவ்வளவு கூலாக இல்லை என்பது ஆர்யனின் புகார். அதனாலேயே, தான் கோபப்படுவதை வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளார் ஷாருக். 'அப்பா ஸ்மோக் பண்ணாதீங்க’ என்றும் அன்புக் கட்டளை இடுவான். டானும் இப்போது கன்ட்ரோலாக இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism