Published:Updated:

பஃபர் மீன்

ரேஞ்சர் மாமா

பஃபர் மீன்

ரேஞ்சர் மாமா

Published:Updated:
##~##

பஃபர் என்றால் ஊதிப் பெரிதாக்குதல் என்று பொருள். ஆபத்து சமயங்களில் இந்த மீன், காற்று அல்லது நீரைக்கொண்டு உடலைப் பெரிதாக்கிக்கொள்ளும். அதனால், பஃபர் மீன் (Puffer Fish) எனப்படுகிறது.

இந்த மீனுக்கு எலாஸ்டிக் தன்மையுள்ள தோல் இருப்பதும், விலா எலும்புகள் இல்லாததும் தனிச் சிறப்பு. ஆபத்து சமயங்களில் இது எழுப்பும் ஒலி, ஊளையிடுவது போல் இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதன் விலங்கியல் பெயர் Arothron nigropunctatus.சுமார் 89 முதல் 138 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

சுமார் 120 இனங்கள் இந்த வகையில் உள்ளன. அட்லான்டிக் கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிஃபிக் கடல்களில் இவை காணப்படுகின்றன.  

இந்த வகை மீன்கள், 2.5 செ.மீ. நீளம் முதல் 61 செ.மீ. நீளம் வரை இருக்கும். இவற்றின் வாயில், மேலும் கீழுமாக பறவைகளின் அலகுகளைப் போல பற்கள் நீட்டிக்கொண்டு இருக்கும். விரலை நீட்டினால், ஒரே கடியில் துண்டாக்கும் பலம்கொண்டது. சிலவற்றின் உடல் முழுவதும் முட்கள் நீட்டிக்கொண்டு இருக்கும்.

பஃபர் மீன்

இதன் தோலும், வேறு சில பாகங்களும் கொடிய விஷம்கொண்டவை. கடலின் தரைப் பகுதியில் உலா வருகையில், நத்தை போன்றவற்றையும்  உண்ணும்.

இந்த மீன் கடித்துவிட்டால்... மயக்கம், தலைவலி, நெஞ்சுக் கூட்டில் இறுக்கம், உதறல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும். இதனுடைய விஷம், 'டெட்ரோடோடாக்ஸின்’ எனப்படும். இது சயனைடைப் போல 1,200 மடங்கு விஷத்தன்மை கொண்டது. ஒரே மீனிடம் 30 மனிதர்களைக் கொல்லும் விஷம் இருக்குமாம். இதற்கு முறிவு மருந்து இல்லை.

விஷத்தன்மை இருந்தாலும், இதையும் விரும்பிச் சாப்பிட ஆள் இருக்கு. உரிய லைசென்ஸ் பெற்ற சமையல்காரர்கள் மட்டுமே இதைச் சமைக்க வேண்டும் என்பது ஸ்பெஷல் ரூல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism