Published:Updated:

கால் கிலோ கலக்கல் புலிகள் !

ரேவதி படங்கள் : காயத்ரி அகல்யா, சரவணன்

கால் கிலோ கலக்கல் புலிகள் !

ரேவதி படங்கள் : காயத்ரி அகல்யா, சரவணன்

Published:Updated:
 ##~##

''ஒய்.ஜி.மகேந்திரன் அங்கிளோடு சேர்ந்து ஒரு பைப் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிச்சு இருக்கேன். அதுதான் ரசிகர்களுக்கு என் புத்தாண்டுப் பரிசு. டி.வி.யில பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்'' என்கிறான் நிதிஷ்.

நிதிஷை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து இருக்க மாட்டோம். 'காலு கிலோ கறுப்புப் புளி மஞ்சள் தூளுடா’ என்று துள்ளிக் குதிச்சுக்கிட்டே கடைக்குப்போகும், விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் ஜூனியர் விளம்பரப் பாடலில் அசத்திய வால் பையன். மூன்றரை வயதில் ஆரம்பித்து, 40 விளம்பரப் படங்களில் நடித்து இருக்கும் நிதிஷ், கே.கே. நகர், பத்மா சேஷாத்ரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒருமுறை அப்பாவோட ஃப்ரெண்ட் எங்களை போட்டோ எடுத்தார். அதை ஒரு விளம்பர டைரக்டர்கிட்ட காண்பிக்க... அவர், 'குடும்பமே நடிக்க வருவாங்களான்னு கேளுங்க’ன்னாராம். அப்படி வந்ததுதான் விளம்பர வாய்ப்புகள். நான், என் அக்கா, அம்மா, அப்பா நாலு பேருமே விளம்பரப் படங்களில் நடிக்கிறோம். அப்பா, சாஃப்ட்வேர் கம்பெனி டைரக்டர். பி.வாசு அங்கிள் இயக்கிய 'மகேஷ்-சரண்யா மற்றும் பலர்’ படத்தில் நாலு பேருமே நடிச்சு இருக்கோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, நடிகர் ஜெமினி கணேசன் சாரோட வாழ்க்கை வரலாறை படம் எடுத்தாங்க. அதில் நான் குட்டி ஜெமினி. என் அப்பா, ஜெமினியோட அப்பாவாக நடிச்சார்’ என்றான்.

கால் கிலோ கலக்கல் புலிகள் !

சர்ஃப் எக்சல் நடத்திய கிச்சன் கலாட்டா விளம்பரத்தில், ஏழு விதமான கதைகளில் கலக்கலாக நடித்து இருக்கிறான் நிதிஷ். ''சூப்பர் சிங்கர் விளம்பரம் வந்த பிறகு, எங்கே போனாலும் 'கறுப்புப் புளி வருதுடா’னு ஜாலியாக் கிண்டல் பண்றாங்க. ஸ்கூலிலும் இதுவே, 'நிக் நேமா’ நிலைச்சிடும் போல இருக்கு'' என்றவன், ''என்னோட முதல் ஃப்ரெண்ட், முதல் எனிமி எல்லாமே என் அக்கா காயத்ரிதான். பின்னே... படிப்பு, நடிப்புன்னு எல்லாத்திலும் எனக்குப் போட்டியாவே இருக்காளே. ஆனாலும், 'காலு கிலோ கறுப்புப் புளி’ விளம்பரத் துக்குப் பிறகு ஐயாதான் செம ஹிட்!'' என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்கிறான்.

ஒரு விஷயம் தெரியுமா? அந்த விளம்பரத்தில் நடித்தது மட்டும்தான் நிதிஷ் வேலை. அழகான குரலில் பாடியது, குரோம்பேட்டை ஸ்ரீமதி லட்சுமியம்மாள் மெமோரியல் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் பிரகாஷ்.

கால் கிலோ கலக்கல் புலிகள் !

''நான் மூணு வருஷமாத்தான் பாட்டுக் கத்துக்கிறேன். என் அப்பா சேகர், எலெக்ட்ரிக்கல் லைனில் இருக்கார். அம்மா, டீச்சர். பொழுதுபோக்காத்தான் பாட்டுக் கத்துக்க ஆரம்பிச்சேன். எனக்கு டி.வி.யில் பாட்டுப் போட்டியில் கலந்துக் கணும்னு ரொம்ப ஆசை. நிறையப் படிக்கவேண்டி இருக்கிறதால நேரம் இல்லை. ஆனால், 'சூப்பர் சிங்கர்’ விளம்பரத்திலேயே பாடுறதுக்கு வாய்ப்புக் கிடைச்சது என்னோட லக்.'' என்கிறான் பிரகாஷ்.

கால் கிலோ கலக்கல் புலிகள் !

தேர்வுகள் வந்ததால், பாட்டு வகுப்புக்கே கொஞ்ச நாட்களாகப் போகாமல் இருந்தான். திடீரென ஒரு நாள் பிரகாஷின் பாட்டு டீச்சர் போன் செய்து, உடனே வரச் சொன்னாராம்.

''என்னோடு இன்னும் நாலு பேரை அந்த விளம்பர நிகழ்ச்சிக்கு அழைச்சிட்டுப் போனாங்க. என் குரல் உச்சரிப்பு அவங்களுக்குப் பிடிச்சுப்போச்சு. பொதுவாக ஒரு விளம்பரத்தில் நடிக்கிறவங்களைத்தான் ஜனங்க அடையாளம் தெரிஞ்சுக்கிட்டு ஓடி வந்து விசாரிப்பாங்க. எங்களை மாதிரி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுக்கு அந்த வாய்ப்பு இருக்காது. ஆனால், இந்த விளம்பரத்துக்கு அப்புறம் நான் வெளியே வாயைத் திறந்து பேசினாலே... 'ஏய்... நீதானே அந்த விளம்பரத்தில் பாட்டுப் பாடி குரல் கொடுத்த பையன்’னு கேட்கிறாங்க. ஆச்சர்யமா இருக்கு.... ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு'' என்று விழிகளை விரித்துப் பேசும் பிரகாஷ§க்கு டப்பிங் கொடுக்க வாய்ப்புகள் குவிகின்றன.

கால் கிலோ கலக்கல் புலிகள் !

''இன்னிக்குகூட ஒரு விளம்பர கம்பெனியில் பேசுறதுக்குப் போய்க்கிட்டு இருக்கேன். நடிக்கவும் நான் ரெடி! எல்லாத்தையும் ஒரு கை பார்த்துடணும். என்ன, நான் சொல்றது சரிதானே?'' என்கிறான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism