Published:Updated:

ஸ்POT விசிட் !

ஸ்POT விசிட் !

ஸ்POT விசிட் !

ஸ்POT விசிட் !

Published:Updated:

இரா.முத்துநாகு

##~##

உழவர் திருநாளான பொங்கல் நெருங்குகிறது. பொங்கல் என்றதும்  நினைவுக்கு வருவது பானை. ஒரு காலத்தில் சமையல் அறையில் முதல் இடத்தில் இருந்தது. இப்போது, 'எவர் சில்வர்,’ 'நான் ஸ்டிக்’ என்று வந்துவிட்டாலும்... பானையின் சிறப்பே தனிதான். பானை எப்படி தயாராகிறது?  சில நகரத்துச் சுட்டிகளுடன் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியபட்டி என்ற கிராமத்துக்குக் கிளம்பினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வாங்க புள்ளைங்களா... எல்லாமே பிளாஸ்டிக்கா மாறிவிட்ட இந்தக் காலத்துல பானையைப் பத்தித் தெரிஞ்சுக்க வந்து இருக்கிறதே சந்தோஷமா இருக்கு'' என்று உற்சாகத்தோடு வரவேற்றார் பொன்னையா.  அங்கே குவித்து இருந்த மண்ணைக் காட்டி, ''இதுதான் பானை செய்ற மண்ணு'' என்றார்.

''இதை எங்கே இருந்து கொண்டுவர்றீங்க?'' என்று கேட்டான் நிதிஷ்.

சிரித்த பொன்னையா, 'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்’னு ஒரு பழைய சினிமாப் பாட்டு இருக்கு... கேட்டு இருக்கியா? நம்மகிட்டே இல்லாத வளமே கிடையாது. இதுக்கு பேரு கரம்பை மண். குளத்தில் இருந்து கொண்டு வந்தது. இந்த மண்ணில் மட்டும்தான் மண்பாண்டம் செய்யமுடியும். மண்ணில் குழி பறிச்சுத் தண்ணீரை ஊற்றி ஒரு நாள் முழுக்க அப்படியே விட்டுருவோம். இதுக்கு ஊறல்னு பேரு. மண் நல்லா ஊறினால்தான்,  குழைத்துப் பிசைய முடியும்'' என்றார்.

ஸ்POT விசிட் !

அப்படி ஒரு நாள் முழுக்க ஊறலில் இருந்த மண்ணை இரண்டு கைகளிலும் எடுத்தார். ''வீட்டில் சப்பாத்திக்கு மாவு பிசையறது மாதிரிதான். இந்த அளவு மண்ணுக்கு கால் படி மணலை எடுத்து சல்லடையில் சலித்துக் கலந்து, மறுபடியும் பல முறை பிசையணும். மண்ணும் மணலும் சரியான அளவு இல்லைன்னா பானையில் கீறல் விட்டுரும்'' என விளக்கியபடி, பிசைந்த மண்ணை சக்கரத்தின் மையத்தில் வைத்து சக்கரத்தை வேகமாகச் சுற்றிவிட்டார்.

''அட... இது மாட்டு வண்டியில் இருக்கிற சக்கரம்தானே தாத்தா? டூ இன் ஒன் மாதிரி பானை செய்ற வேலை முடிஞ்சதும் இதை எடுத்து வண்டியில கட்டி ஓட்டுவீங்களோ?'' என்று கேட்டாள் பிரியா.

''டூ இன் ஒன் சமாச்சாரம் எல்லாம் இங்கே கிடையாது செல்லம்... பானை செய்றதுக்குன்னே செய்ற சக்கரம் இது. இதன் மூலமா வேண்டிய வடித்தில் பாண்டங்கள் செய்யலாம்'' என்றபடி சக்கரத்தைச் சுற்றிக்காட்டினார். உடனே சுட்டிகளும் குஷியுடன் சுற்றினார்கள்.

ஸ்POT விசிட் !

''இதுல கைப் பக்குவம்தான் ரொம்ப முக்கியம். நாம என்னா உருப்படி (பாண்டம்) செய்யணும்னு நினைக்கிறோமோ... அதை, மண் வெளியே வரவர லாகவமாப் பிடிச்சு எடுக்கணும். மண் பாண்டமா இருந்தாலும் பார்க்க அழகா இருந்தால்தானே வாங்குவாங்க. அதுக்காக பாண்டம் செய்யும்போதே... அதில் எங்களோட கற்பனைத் திறனைக் காட்டும்விதமா அழகழகாக் கோடு போடுவோம்.'' என்ற பொன்னையா, அதுபோல் செய்து காட்டினார்.

''பாண்டத்தில் வாப்பாடு (வாய்ப் பகுதி) கெட்டியாக இருக்கிறது முக்கியம். அதுக்காக கொஞ்சம் மண் சேர்த்து வரணும். அதே வேளையில் அழகா இருக்க, ஒரு நுட்ப வேலைப்பாடும் செய்யணும். டிசைன்னு சொல்வாங்களே அதுதான்'' என்றவர், இரண்டு இடங்களில் சின்னச் சின்னக் கோடுகளைக் கிழித்தார். பாண்டத்தின் மேல் பரப்பு வழுவழுப்பாக இருக்க, தண்ணீரில் நனைத்து துணியால் பாண்டத் தில் லேசாக வைத்து சமப்படுத்தியபடியே பானையை வடிவ மைத்தார்.

ஸ்POT விசிட் !

பாண்டம் முழுமையாகத் தயாராகிவிட்டது. அதன் அடிப் பகுதியைத் தூர் என்பார்களாம். அங்கே சின்ன குச்சியை விட்டு எடுத்தார். பாண்டம் தனியாகப் பிரிந்து வந்தது. அதைக் கையில் எடுத்து சுட்டிகளிடம் காட்ட, 'வாவ்’ என வாயைப் பிளந்தனர்.

அந்தப் பாண்டத்தை உலரவைப்பதற்கு ஒருவர் எடுத்துச் சென்றதும், மீதம் இருந்த மண்ணில் சுட்டிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கார்த்திகை விளக்கு, உண்டியல், ஊறுகாய் சாடி, என விதவிதமாக செய்வதற்கு சொல்லிக் கொடுத்தார் பொன்னையா. சுட்டிகளும் பக்காவாகச் செய்து அசத்தினார்கள்.

ஏற்கெனவே தயாரித்த பாண்டங்கள் எல்லாம் நிழலில் காய்ந்துகொண்டு இருந்தன. பாண்டங்களின் தூர் ஓட்டையாக இருந்தது. இதைப் பார்த்து, ''இதில் எப்படி தண்ணீர் ஊற்றிவைக்க முடியும்?'' என்று சுட்டிகள் ஒரே குரலில் கேட்டனர்.

ஸ்POT விசிட் !

''இந்தப் பாண்டங்களை இப்படியே இரண்டு நாள் நிழலில் உலரவிடுவோம். அப்பத்தான் பாண்டங்களை கையில் தூக்கினாலும் நெளியாம உடையாம இருக்கும். அப்புறம் உருண்டை கல் ஒண்ணை, செய்து வெச்சு இருக்கோம். அதைத்  தூர்ப் பகுதிக்குள் வைத்து, மரத்தட்டையால் தட்டித் தட்டி, பாண்டத்தில் உள்ளே மண்ணை நகர்த்தி ஓட்டையை அடைப்போம்'' என்றவர், உருண்டைக் கல்லைக் காட்டி னார்.

''அப்புறமா பாண்டங்களை மொத்தமா வைத்து, அதற்கு மேல் மண்ணைக் குழைத்துப் பூசி, தீ மூட்டம் போடணும். நாலு ஐந்து மணி நேரத்தில் பாண்டங்கள் வெந்துவிடும். அப்புறம், பாண்டங்களைத் துணியால் துடைத்து, செவக்காட்டு மண்ணைக் கரைத்து, மேலாகப் பூசி மெருகு கூட்டணும்.'' என்றவர், தயாராக இருந்த ஒரு பானையை எடுத்துக் காட்டினார்.

ஸ்POT விசிட் !

''ஓ... இதுதான் இயற்கை பெயின்டோ? கலர் பெயின்ட் அடிச்ச பானைகளைக்கூட பார்த்து இருக்கேன்'' என்றான் ஆதிகேசவன்.

''அப்படியும் செய்றது உண்டு. பாண்டங்களை விரலால் சுண்டினால், கணீர் கணீர் என சத்தம் வரணும். அதுதான் நல்ல பானை. தட்டும்போது 'சொல சொல’னு சத்தம் வந்தால் எங்கேயோ சரியா வேக்காடு இல்லைன்னு தெரிஞ்சுக்கலாம்'' என்றவர், ஒரு பானையை விரலால் சுண்டிவிட... 'கணீர்’ சத்தம்.  

''வர்ற மாசி மாசம் வாங்க நம்ம ஊர்ல இருக்கிற மாரியம்மாள், முத்தாளம்மாள், மதலை (குழந்தை) கருப்பசாமி குதிரைஎல்லாம் செய்வோம்.'' என்று விழாவுக்கு இப்போதே அழைப்புவிடுத்தார்   பொன்னையா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism