Published:Updated:

ஓம்டர்மேன் தேள் !

ரேஞ்சர் மாமா

ஓம்டர்மேன் தேள் !

ரேஞ்சர் மாமா

Published:Updated:
##~##

வட ஆப்பிரிக்காவிலும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் காணப்படும் ஓம்டர் மேன் தேள்கள் இவை. ஆங்கிலத்தில் Death Starker Scorpionஎன்பார்கள். இதன் விலங்கியல் பெயர் Leiurus quinquestriatus. 'ஐந்து பட்டைகள் உள்ள மென்மையான வால்’ என்று அர்த்தம். பாலஸ்தீன மஞ்சள் தேள், ஓம்டர்மேன் தேள், இஸ்ரேல் பாலைவனத் தேள் என்ற பெயர்களும் இதற்கு உண்டு.

 பொதுவாக, தேள் கொட்டினால் வக்குமே தவிர, ஆளைக் கொன்றுவிடாது. ஆனால், இந்த வகைத் தேள்கள் கொட்டினால், முதல் தாங்க முடியாத வ, பிறகு காய்ச்சல், கோமா, வப்பு, பக்கவாதம் என்று படிப்படியாகப் போய்... மரணம் ஏற்படும். இதற்காக விஷ முறிவு மருந்துகள் மிக அதிக அளவில் செலுத்தப்பட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவை, மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் இருக்கும். சுமார் 30 முதல் 77 மி.மீ நீளம் வரை வளரும். பெண் தேள்களைவிட ஆண் தேள்கள் சிறியதாகவும், மெல்யதாகவும், வலு குறைந்ததாகவும் இருக்கும். சிறிய பூச்சிகள், சிலந்திகள், வெட்டுக்கிளிகள்தான் இவற்றின் உணவு. பகல் வளைகளிலும், பாறைகளுக்கு அடியிலும் தங்கும். இரவில் மட்டும் நடமாடும்.

ஓம்டர்மேன் தேள் !

வட ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதிகளில் உள்ள பாலைவனங்கள் மற்றும் புதர்க் காடுகளில் வாசம்செய்கின்றன. அல்ஜீரியா, பஹ்ரைன், எகிப்து, எத்தியோப்பியா, பியா, சோமாயா, சூடான், ஈரான், டுனீசியா, ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், ஓமன், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, சிரியா, துருக்கி, கஜகஸ்தான், ஏமன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

இவற்றை, மேலை நாடுகளில் வளர்ப்புப் பிராணிகளாகவும் வளர்க்கிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். எகிப்தில் இருந்து அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் பெருமளவு ஏற்றுமதி ஆகின்றன.

இவற்றை வளர்ப்புப் பிராணிகளாக வளர்ப்பதை, தென் ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகள் தடைசெய்து இருக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தகுந்த லைசென்ஸ் இருப்பவர்கள் மட்டுமே இதை வீட்டில் வளர்க்க முடியும்.

இந்தத் தேளின் விஷத்தில் இருக்கும் 'பெப்டைட் க்ளோரோடாக்ஸின்’ என்னும் வேதிப் பொருள், மனிதர்களின் மூளையில் உருவாகும் கட்டிகளைக் குணமாக்கும் எனக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். வேறு சில வேதிப் பொருட்கள் சர்க்கரை வியாதிக்கும் மருந்தாகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism