Published:Updated:

சுட்டி ஸ்டார்ஸ்!

இது எங்க ஏரியா

சுட்டி ஸ்டார்ஸ்!

இது எங்க ஏரியா

Published:Updated:

2012 ல் உலகம் அழியுமா?

##~##

'உலகம் அழியும்’ என்று ரொம்ப நாட்களாகவே பீதியைக் கிளப்பிட்டு இருந்த 2012 -ஆம் வருடம் இதோ வந்தாச்சு. இந்த உலகம் அழிவுக்கான காரணங்களாக சம்பந்தப்பட்டவங்க சொல்லும் விஷயங்கள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2012-ல் உலகம் அழிந்தே ஆக வேண்டும் என்று மாயன் காலண்டரில் குறிப்பிட்டு இருக்காம். இன்று, நாம் பின்பற்றும் தேதி முறை உள்ளிட்ட பல விஷயங்களைக் கணித்தவர்கள் மாயன்கள். இது மட்டுமா? சூரியன் காலாவதியாகும் தேதியையும் கணித்துவைத்து இருக்கிறார்களாம். அதுவும் 2012-ஆம் வருடம்தான்.

அடுத்து, சூரியப் புயல்கள். சூரியனுக்குள் ஏற்பட இருக்கும் பனிப் புயல்களினால், கதிர்வீச்சு உருவாகி, பூமியைப் பொசுக்கிவிடும் என்கிறார்கள்.

சுட்டி ஸ்டார்ஸ்!

அடுத்து சொல்லும் விஷயம்... ஐரோப்பிய விஞ்ஞானிகள், உலகின் பெரிய மூலக்கூறு உந்து எந்திரத்தை கண்டுபிடிச்சு இருக்காங்களாம். 27 கி.மீ. ஆழமான சுரங்கத்தில், இதனை வெடிக்கச் செய்வது திட்டமாம். எதற்காக? உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்துகொள்ளத்தான். அதை, 2012-ல் நடத்தப்போறாங்களாம். இது நடந்தால் உலகமே காலி!

அடுத்து, காந்தப் புலம்... வடக்கு, தெற்கு எனப் பூமியில் காந்தப் புலம் இருப்பது தெரியும். இதுவே, உலகை நிலைப்படுத்தி இயங்கவைக்கிறது. ஆனால், 7,50,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கு காந்தப் புலன் தலைகீழாக மாறுமாம். அப்படி மாறும்போது, அடுத்த 100 ஆண்டுகளுக்கு காந்தப் புலமே இருக்காதாம். அதனால், புற ஊதாக் கதிர்கள் உயிரினங்களைப் பொசுக்கிவிடுமாம்.

இது தவிர, ஆழிப் பேரலை, பூகம்பம், எரிமலை வெடிப்புகளையும் காரணமாகச் சொல்றாங்க. ஆனாலும் பல விஞ்ஞானிகள் பாஸிட்டிவ்வாகப் பேசுகிறார்கள், 'இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிய வாய்ப்பே இல்லை’ என்று அடித்துச் சொல்கிறார்கள்.

அப்புறம் என்ன? பீதியை விட்டுவிட்டு படிக்கப் போவோம். எக்ஸாம் பக்கத்தில் வந்துடுச்சே!

சுட்டி ஸ்டார்ஸ்!

நில், கவனி, செல்!

ராஜன் ஒரு லாரி டிரைவர். ஒரு நாள் இரவு, முதலாளி அவனை அவசரமாக அழைத்து, ''ராஜா... கோவைக்கு ரொம்ப அவசரமா சரக்கை டெலிவரி செய்யணும். முனுசாமி திடீர்னு வரலை. நீ லாரியை எடுத்துக்கிட்டுப் போ'' என்றார்.

சுட்டி ஸ்டார்ஸ்!

லாரியில் லோடு ஏற்றி, தார்ப்பாய் கட்டித் தயாராக இருந்தது. 'ஓட ஓட தூரம் குறையலை’ என்று எஃப்.எம் பாடல் கேட்டுக்கொண்டே ராஜன் பயணத்தைத் தொடர்ந்தான். சேலத்தை நெருங்கிவிட்டான். பின்னால் எதுவோ புகையும் வாடை வந்தது. லாரியை நிறுத்திவிட்டு, இறங்கி வந்து பார்த்தவன், திடுக்கிட்டான். மூடி இருந்த தார்ப்பாயின் ஒரு பகுதியில் கொஞ்சமாக எரிந்துகொண்டு இருந்தது.

சற்று முன் வரும் வழியில் ஒரு கோயில் முன் பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்தார்கள். எப்படியோ ஒரு பட்டாசு இதன் மேலே விழுந்து இருக்க வேண்டும். ராஜன் சுற்றும் முற்றும் பார்த்தான். தூரத்தில் ஒரு கிராமம் தெரிந்தது. அதை நோக்கி ஓடினான். அங்கே இருந்த வீடுகளின் கதவுகளைத் தட்டி எழுப்பி, விஷயத்தைச் சொன்னான். எல்லோரும் குடம், பக்கெட் என கைக்குக் கிடைத்ததில் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஓடி வந்தார்கள். வேக வேகமாகத் தண்ணீரை ஊற்றி, தீயை அணைத்தார்கள்.

''ரொம்ப நன்றிங்க. நீங்க எல்லாம் இல்லைனா, லாரியும் அதில் இருக்கும் சரக்குகளும் எரிஞ்சு இருக்கும்'' என்றான் ராஜன்.

''லாரியில் என்ன சரக்கு இருக்கு?'' என்று ஒருவர் கேட்டார்.

அப்போதுதான் ராஜனே யோசித்தான். தார்ப்பாயை நீக்கிப் பார்த்ததும் எல்லோருக்கும் சிரிப்பு வந்துருச்சு. காரணம், லாரியில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேன்கள் இருந்தன.

ராஜனைப் பார்த்து ஒரு பெரியவர், ''தம்பி, வண்டியை எடுத்துட்டுக் கிளம்பும்போதே என்ன ஏதுனு பார்த்து இருந்தால், சின்னதாக தீப்பிடிச்சப்ப நீயே அணைச்சு இருக்கலாமே'' என்றார். ராஜன் அசடு வழிய நின்றான்.

சுட்டி ஸ்டார்ஸ்!

நேராக யோசி!

சுட்டி ஸ்டார்ஸ்!

ரு அம்மா கொசு, தன் இரண்டு குழந்தைக் கொசுக்களை அழைத்தது. 'இன்று முதல் உங்கள் வேட்டையை ஆரம்பிங்க. போய்ட்டு வந்து உங்க அனுபவங்களைச் சொல்லுங்க'' என்று சொல்லி, அனுப்பிவைத்தது.

காலையில் இரண்டு கொசுக்களும் வீடு திரும்பின. அண்ணன் கொசு, ''அம்மா... நம்மை யாருக்கும் பிடிக்கலை. மனிதர்கள் கிட்டே போனாலே... அவங்க கைகளுக்கு நடுவே நசுக்கப் பார்க்கிறாங்க. அந்த அபாயத்தில் இருந்து தப்புறதே பெரிய பாடாய்ப் போச்சு'' என்றது.

அப்போது, தம்பி கொசு வந்தது. ''உன் அனுபவம் எப்படி?'' என்று கேட்டது அம்மா.

''பிரமாதம்! மனிதர்கள் நம்மைப் பார்த்ததுமே கைகளைத் தட்டி வரவேற்கிறாங்க'' என்றது.

எதையும் நேர்மறையாக எடுத்துக்கொண்டால், பயமோ, சலிப்போ இருக்காது!

சுட்டி ஸ்டார்ஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism