Published:Updated:

'தானே' துயர் துடைக்க... நீளட்டும் நம் கரங்கள்!

'தானே' துயர் துடைக்க... நீளட்டும் நம் கரங்கள்!

'தானே' துயர் துடைக்க... நீளட்டும் நம் கரங்கள்!

'தானே' துயர் துடைக்க... நீளட்டும் நம் கரங்கள்!

Published:Updated:
'தானே' துயர் துடைக்க... நீளட்டும் நம் கரங்கள்!

ன்பார்ந்த வாசகப் பெருமக்களே!

 'தானே' புயலின் கோரத் தாண்டவம் ஏற்படுத்திய அழிவுகளில் இருந்து கடலூர், புதுச்சேரி மக்களை மீட்டு எடுப்பதற்கான துயர் துடைப்புத் திட்டத்துக்கு நீங்களும் உதவலாம். Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சேமிப்புக் கணக்கு எண் 000901003381 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: ICIC 0000009, நுங்கம்பாக்கம் கிளை, சென்னை-600034) வழியாக அனுப்பலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிநாட்டு வாசகர்கள் எங்களின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918-க்கு (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IDIB 000C032, எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து, உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/0304 dt. 10052010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.

நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருப்பினும், கீழே நாங்கள் அளித்து உள்ள படிவத்தையும் தயவுசெய்து பூர்த்திசெய்து, 'தானே துயர் துடைப்புத் திட்டம்’ என்று உறையின் மீது மறவாமல் குறிப்பிட்டு 'ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.  www.vikatan.com/thane என்ற  இணைய முகவரியில், இது தொடர்பான பூர்வாங்க விவரங்களை இப்போதே நீங்கள் காணலாம்.

வாருங்கள் வாசகர்களே... 'தானே’ துயரை நாமும் துடைப்போம்!

- ஆசிரியர்

'தானே' துயர் துடைக்க... நீளட்டும் நம் கரங்கள்!
'தானே' துயர் துடைக்க... நீளட்டும் நம் கரங்கள்!

நெகிழவைத்த சுட்டிகள்!

'தானே' துயர் துடைக்க... நீளட்டும் நம் கரங்கள்!

'உதவி செய்வதற்குப் பணம் முக்கியம் இல்லை... மனம்தான் வேண்டும்’ என்று பொட்டில் அறைந்தாற்போலக் காட்டிவிட்டார்கள் திருப்பூரைச் சேர்ந்த காது கேளாத, வாய் பேசாத மாணவ, மாணவியர். கடலூர் பாதிப்பை அறிந்து அதிர்ச்சியும் அனுதாபமும் அடைந்திருக்கிறார்கள். அதுவரை அவர்கள் சேமித்துவந்த உண்டியலை, ''இதைப் பாதிக்கப்பட்டவங்களுக்கு அனுப்புங்க சார்...'' என்று பள்ளி நிர்வாகி  முருகசாமியிடம் மனப்பூர்வமாகக் கொடுத்து இருக்கிறார்கள். அவர் அனுப்பிவைத்த ஏழு உண்டியல்கள் நமக்கு வந்து சேர்ந்தன. அத்துடன் இருந்த முருகசாமியின் கடிதத்தில், 'விகடனில் பதிவான தானே புயல் கட்டுரையை, குக்கூ குழந்தைகள் வெளி நண்பர் குமரன் என் குழந்தைகளோடு பகிர்ந்துகொண்ட வேளையில், நிறையக் குழந்தைகளின் கண்களில் நீர்... பெருமூச்சு. அடுத்த நாள், அந்த மக்களுக்காக இறை வேண்டலுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. விகடனின் உயர் கருணைக்கு எம் குழந்தைகளின் சிறிய பங்களிப்பு அவர்களது சேமிப்பிலிருந்து... பெற்றுக்கொள்ளுங்கள்!’ என்று எழுதி இருந்தது. அந்த உண்டியல்களில் இருந்த தொகை

'தானே' துயர் துடைக்க... நீளட்டும் நம் கரங்கள்!

8,343.25. இந்தத் தொகை ஆயிரம் கோடிகளுக்குச் சமம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism