Published:Updated:

என் 10

பில்கேட்ஸ்...கணினி உலகின் சிகரம்!பூ.கொ.சரவணன்

என் 10

பில்கேட்ஸ்...கணினி உலகின் சிகரம்!பூ.கொ.சரவணன்

Published:Updated:
##~##

ளியவர்களும் நுழையும் வகையில் கணிப்பொறியின் ஜன்னல்களைத் திறந்தவர். ஓயாத உழைப்பின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்தவர்.

• பில் கேட்ஸின் தந்தை, அரசாங்க அட்டர்னி ஜெனரல். தாய், பிரபல வங்கியின் இயக்குனர்களில் ஒருவர். பில் கேட்ஸ் சுட்டிப் பையனாக இருந்த பொழுது அதிகமாகப் படித்தது என்சைக்ளோபீடியா.  அதன் மீதே சாய்ந்து தூங்கிவிடுவார். படிப்பில் கெட்டியாக இருந்தாலும், அடிக்கடி வகுப்பை கட் அடிப்பது உண்டு. அதனால், சியாட்டில் நகரில் உள்ள படு ஸ்ட்ரிக்ட்டான பள்ளியில் பெற்றோர் சேர்த்தார்கள். 'அங்கேதான் பரந்த உலகின் அற்புதங்களை ரசிக்கக் கற்றுக்கொண்டேன்’ என்பார் கேட்ஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  தமது 13-ஆம் வயதில், 'டிக் டாக் டோ’ எனும் விளையாட்டுக்கு புரோக்ராம் செய்தார் கேட்ஸ். அதன் வெற்றி, கணினி மீதான ஆர்வத்தைத் தூண்டியது.

•  பள்ளியில் கேட்ஸ் விரும்பிப் படித்தது, அறிவியல் மற்றும் கணிதம். கல்லூரியில் நுழைவதற்கான தேர்வில் 1600-க்கு 1590 மதிப்பெண்கள் எடுத்தார். தந்தையைப் போல வக்கீல் ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. அங்கே, அவரைவிட இரண்டு வயது

என் 10

பெரியவரான பால் ஆலனின் நட்புக் கிடைத்தது.

•  இருவரும் குணத்தால் பெரிதும் மாறுபட்டவர்கள் என்றாலும், கணினி மீதான ஆர்வம் ஒன்று சேர்த்தது. இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு புரோகிராம்களை உருவாக்கினார்கள். பல நேரம் கணினி முன் உட்கார்ந்து இருப்பார்கள். இதற்காக, தனக்கு விருப்பமான பல கணக்கு வகுப்புகளையும் கட் அடித்துள்ளார் பில் கேட்ஸ்.  கல்லூரிப் படிப்பு சலிப்பைத் தந்தது. பெற்றோரின் அனுமதியோடு கல்லூரியைவிட்டு பாதியிலேயே வெளியேறினார்.

•  HONEYWELL  என்ற நிறுவனத்தில் சில காலம் புரோகிராம் உருவாக்குபவராக பால் ஆலனுடன் சேர்ந்து பணிபுரிந்தார் பில் கேட்ஸ். அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறிய பின், ஒரு நிறுவனத்தைத் தொடங்க முடிவுசெய்தார். MICRO COMPUTER மற்றும் SOFTWARE ஆகிய இரண்டு பதங்களை இணைத்து, MICROSOFT எனப் பெயர் வைத்தார். பால் ஆலன் உடன் இணைந்து, சொந்த நிறுவனத்தைத் தொடங்கியபோது கேட்ஸ் சொன்னது, 'முப்பது வயதிற்குள் நான் கோடீஸ்வரனாகிக் காட்டுவேன்!''  

•  அம்மா மீது ஏகத்துக்கும் பாசம் வைத்து இருந்தவர். அவரின் அம்மா பல்வேறு அனாதைச் சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகளுக்கு நிதி திரட்டியவர். அவர், மார்பகப் புற்றுநோயால் இறந்த போது நொறுங்கிப்போனார் பில் கேட்ஸ். புற்றுநோய், எய்ட்ஸ், போலியோ நோய்களுக்கு எதிராக நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு ஏராளமான நிதி வழங்கி உள்ளார்.

•  மிகவும் எளிமையான பழக்கங்கள் உடையவர்.கடுமையான உழைப்பாளி. அலுவலகத்தில் பல மணி நேரம் வேலை செய்வார். ஒரு நாள் காலை அவரின் அறைக்குள் வந்த உதவியாளர், யாரோ டேபிளுக்கு அடியில்  தூங்கிக்கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போய், அருகில் சென்று பார்த்தார். பில்கேட்ஸ்தான், இரவு வேலையை முடித்துவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டு இருந்திருக்கிறார்.

•  நல்ல ஓவியங்கள், பழங்கால பொருட்கள் மீது ஆர்வம் அதிகம். மில்க் சாக்லேட்களிலும் மனதைப் பறிகொடுப்பவர். குழந்தைகளின் மீது அளவு கடந்த ப்ரியம் உண்டு. தன்னைச் சந்திக்கும் சுட்டிகள் கேட்கும் குறும்பான கேள்விகளுக்கு முகம் கோணாமல் பதில் சொல்வார்.

•  ஹார்வர்டு கல்லூரியில் இருந்து பட்டம் பெறாமல்  வெளியேறினாலும் அதே பல்கலைக்கழகம்,  அவருக்கு கௌரவப் பட்டம் வழங்கி இருக்கிறது. தன் நிறுவனத்தில் பட்டங்கள் அதிகம் பெற்றவர்களைவிட, மாற்றிச் சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார்.

•  தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இல்லை. 'மெலிண்டா கேட்ஸ்’ என்கிற அமைப்பின் சார்பாக, உலகம் முழுக்க பயணம் செய்து, மக்களின் பிரச்னைகளுக்கு உதவும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய  மூன்று பிள்ளைகளுக்கும் தன் சொத்தில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவாகவே கொடுத்து இருக்கிறார். மிச்ச சொத்துக்களை, சமூகப் பணிகளுக்காக ஒதுக்கி இருக்கிறார் பில் கேட்ஸ்.

   சென்ற இதழில் 'என் 10’ பகுதியில் வெளியான ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த தேதி, தவறானது. '1966 ஜனவரி 6, சென்னை’ என்பதே சரியானது. தவறுக்கு வருந்துகிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism