Published:Updated:

பென் டிரைவ்

பென் டிரைவ்

பென் டிரைவ்

பென் டிரைவ்

Published:Updated:
பென் டிரைவ்
##~##

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருக்கும் 'கிண்டர்குக் கேஃப்’ என்கிற ரெஸ்டாரென்ட், முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே நடத்தப்படுகிறது. இங்கு சமைப்பது, பறிமாறுவது, சுத்தம் செய்வது, பில் போடுவது என்று சகல வேலைகளைச் செய்வதும்  சுட்டிகளே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மில்க்ஷேக், சான்ட்விச், கேக்ஸ் என்று வெரைட்டியான உணவுகளைச் செய்து, வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறார்கள். தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர்களும் ஆர்வமாக ருசித்துப் பார்க்கிறார்கள். இதில், 5 முதல் 12 வயது வரையான சுட்டிகளுக்கு மட்டுமே அனுமதி. குழந்தைகளுக்கு சொல்லித் தர, பெரியவர்கள் கூடவே இருப்பார்கள். இதற்காகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. படிப்பு தவிர, மற்ற விஷயங்களையும் கற்றுக்கொள்வதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இங்கு விட்டுச் செல்கிறார்கள். சமையலுடன் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதையும் சொல்லித் தருகிறார்கள் ரெஸ்டாரென்ட் நிவாகத்தினர்.

பென் டிரைவ்

எப்போதும் கறுப்பு நிறத்தில் பார்க்கும் எருமைகளைக் கலர் கலராகப் பார்த்தால் எப்படி இருக்கும்?

சீனாவைச் சேர்ந்த யுனான் மாகாணத்தில் உள்ள மலையோர கிராமங்களில், வருடாவருடம் திருவிழா சமயத்தில் எருமைகளின் உடலில் வண்ண வண்ண  ஓவியங்கள் வரைந்து, தெரு வலம் வரவைப்பார்கள். இப்படி செய்வதன் மூலம், காட்டு விலங்குகளிடம் இருந்து தங்கள் கிராமம் பாதுகாப்பாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.   

பென் டிரைவ்

ராஜஸ்தானில் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் பென்சில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது அந்த மாநில அரசின் உத்தரவு. எந்தக் காரணத்தைக்கொண்டும் வகுப்பில் பால்-பாயின்ட் பேனாக்களில் யாரும் எழுதக் கூடாதாம். துவக்கப் பள்ளியில் பென்சிலால் எழுதும் பழக்கம் உடைய சுட்டிகளுக்குதான் கையெழுத்து மிகவும் அழகாக இருக்கிறதாம். இந்த விஷயம், அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் மூலம்  தெரிந்தது. கல்வித் துறை மேற்கொண்ட இந்த ஆய்வின் அடிப்படையில்தான், இப்படி ஓர் உத்தரவைப் போட்டு இருக்கிறது ராஜஸ்தான் அரசு. கையெழுத்து அழகாக மாறினால் சுட்டிகளுக்கும் கொண்டாட்டம்தானே!

பென் டிரைவ்

உலகில் மிக உயரமான 7 சிகரங்களின் உச்சியைத் தொட்ட இளம் சாதனையாளர் என்ற மகுடத்தைப் பெருமையுடன் பெற்று இருக்கிறார், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 15 வயது மாணவர் ஜோர்டன் ரூமெரோ!

சிகரங்களில் ஏறுவதில் சிறு வயதில் இருந்தே ஆர்வம் கொண்ட ஜோர்டன், தனது 10 ஆவது வயதில் ஆப்பிரிக்காவில் உள்ள 19,340 அடி உயரம்கொண்ட கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி  சாதனை படைத்தார். ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள மிக உயரமான சிகரங்களில் வலம் வந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ள இவர், அண்மையில்  அன்டார்டிகா பனிப் பிரதேசத்தில் உள்ள மிக உயர்ந்த சிகரமான வின்சன் மாஸ்ஸிஃப் (க்ஷிவீஸீsஷீஸீ னீணீssவீயீ) மீது ஏறி வெற்றிக் கொடி நாட்டி னார்.

உலகின் மிக உயரிய சிகரமான எவரெஸ்டை, ஜோர்டன் தனது 13வது வயதிலேயே ஏறி சாதித்ததும் குறிப்பிடத்தக்கது!

பென் டிரைவ்

நம் நாட்டில் முதல் முறையாக சுட்டிகள் மட்டுமே பங்கேற்ற ஃபேஷன் ஷோ நடந்தது.  மும்பையில், 'இந்தியன் கிட்ஸ் ஃபேஷன் வீக்' என்ற பெயரில் நடந்த இந்த ஃபேஷன் ஷோவில், சுட்டிகள் புதுப்புது டிசைன்களில் ஆடைகள் அணிந்து வலம் வந்தனர்.  ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவியை வழங்கி வரும் 'ணிணீநீலீ ளிஸீமீ ஜிமீணீநீலீ ளிஸீமீ’ என்ற அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தப்பட்டதால், சுட்டிகளுக்கான ஃபேஷன் ஷோவில் தங்கள் குழந்தைகள் பங்கேற்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டினர்.

பென் டிரைவ்

நகரவாசிகளில் பெரும்பாலானோர் தேர்தலில் வாக்களித்து, ஜனநாயகக் கடமை ஆற்றுவதில்லை. இந்த நிலையை மாற்றுவதற்காக, சுட்டிகளுடன் கைகோர்க்க முடிவு  செய்து இருக்கிறது, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். எப்படி தெரியுமா?

தேர்தல் காலங்கள், ஜனவரி 25-ல் நடத்தும் 'வாக்காளர் தினம்’ போன்ற நாட்களில் பெற்றோர்களுக்கு 'ஹேப்பி எலெக்ஷன்’ வாழ்த்து செய்திகளை சுட்டிகள் மூலம் அனுப்பச்  செய்வதுதான் முக்கியத் திட்டம். இதற்காக, நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் தேர்தல் ஆணையம் அணுகி வருகிறதாம். 5,000 கல்லூரிகள், 1.5 லட்சம் உயர்நிலைப் பள்ளிகளுடன் இணைந்து காற்றாடித்  திருவிழாக்கள், மாரத்தான் போட்டிகள் போன்றவற்றின் மூலம் மக்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் பற்றி விழிப்பு உணர்வை ஏற்படுத்தப்போகிறார்கள். நல்ல விஷயம்.

பென் டிரைவ்

கொலம்பியா, தன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கும், ஷாப்பிங் மால்களில் இருக்கும் எஸ்கலேட்டர்களை பொது இடங்களிலும் அமைத்து இருக்கிறது.  அதாவது, மெடிலின் நகரத்தில் உள்ள மலைப் பகுதியில்... உலகிலேயே மிகப் பெரிய எஸ்கலேட்டர்களை அமைத்துள்ளது. 28 மாடிகள் உயரம்கொண்ட மலை மீது வாழும் மக்களும், அதனைச் சுற்றி உள்ளவர்களும் மலை மீது ஏறவும் இறங்கவும், நூற்றுக்கணக்கான படிக்கட்டுகளைப் பயன்படுத்தி வந்தார்கள். இனி, இந்தப் பிரமாண்ட எஸ்கலேட்டர் மீது ஏறினால் போதும், நிமிடங்களில் மலை மீது ஏறிச் சென்றுவிடலாம். இந்த எஸ்கலேட்டர்கள் 6.7 மில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.

பென் டிரைவ்

திருக்குறளின் 1330 குறள்களை வைத்து திருவள்ளுவரை ஓவியமாக வரைந்துள்ளார், நாமக்கல் மாவட்டம், எளச்சிப்பாளையம், வித்யாபாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி நவீனா. ''குறள்களைப் படிக்கும்போது எல்லாம் திருவள்ளுவரை குறள்களால் ஓவியமாக வரைந்தால் அருமையாக இருக்குமே என்று நினைப்பேன். அந்த எண்ணத்தின் செயல் வடிவம்தான் இது'' என்கிறார் நவீனா. இந்த ஓவியம் வரைவதற்காக மூன்று வாரங்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism