Published:Updated:

நன்றி என்ணும் விருது !

பா.சிவராம கிருஷ்ணன்

நன்றி என்ணும் விருது !

பா.சிவராம கிருஷ்ணன்

Published:Updated:
##~##

பரமேஸ்வரன், டெல்லி வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்த தமிழகத்துச் சுட்டி. அசாத்தியத் துணிவுடனும் சமயோஜித புத்தியுடனும் செயல்பட்டு, பேராபத்தில் இருந்த மூன்று சுட்டிகளின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்.

பரமேஸ்வரன், தருமபுரி மாவட்டத்தில்... ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-வது படிக்கிறார். இந்தியக் குழந்தைகள் நலச் சங்கத்தால் வழங்கப்படும் 2011-ஆம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான தேசிய விருதைப் பெற்று இருக்கிறார். நாடு முழுவதும் இருந்து 21 சுட்டிகள் இந்தச் சாதனைக்காக கௌரவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வெள்ளிப் பதக்கம், பாராட்டுப் பத்திரம், அதோடு, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும் பிரதமர் கைகளால் பெற்று இருக்கிறார் பரமேஸ்வரன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நன்றி என்ணும் விருது !

பரமேஸ்வரனின் அப்பா கோவிந்தன், அம்மா லட்சுமி கூலி வேலை செய்பவர்கள். 'அன்னிக்கு நான் ஆத்தங்கரையில் துணி துவைச்சுட்டு இருந்தேன். அப்போ, ஆத்துக்குள்ளே இருந்து அலறல் சத்தம் கேட்டுச்சு. போய்ப் பார்த்தால், என்னோடு பள்ளிக்கூடத்தில் படிக்கிற சரண்யா, ஆர்த்தி, புவனேஸ்வரி, உமா, பூஜா... இந்த அஞ்சு பேரும் ஆத்தில் தத்தளிச்சுட்டு இருந்தாங்க. அவங்க இருந்த இடத்தில் ஆழமும் 20 அடிக்கு மேலே இருக்கும். எனக்கு ஓரளவுதான் நீச்சல் தெரியும். இருந்தாலும், எப்படியாவது எல்லாரையும் காப்பாத்திடணும்னு முயற்சி செஞ்சேன். துணிகளை எல்லாம் நீளமா சேர்த்துக் கட்டிட்டு, துணிச்சலோடு இறங்கினேன்.  ஆனாலும் சரண்யா, புவனேஸ்வரி, ஆர்த்தி இவங்க மூணு பேரைத்தான் காப்பாத்த முடிந்தது. உமாவையும் பூஜாவையும் காப்பாத்த முடியலையேங்கிற வருத்தம் இன்றைக்கும் இருந்துட்டே இருக்கு' என்கிறார் பரமேஸ்வரன்.

பரமேஸ்வரனை அப்போதைய மாவட்டக் கண்காணிப்பாளர் சுதாகர் பாராட்டிப் பரிசு அளித்ததுடன், விருதுக்கும் பரிந்துரைத்தார். தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம், உதவித் தலைமை ஆசிரியர் தங்கவேல் ஆகியோர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

நன்றி என்ணும் விருது !

''என் மகன் டெல்லிக்குச் சென்று, பிரதமர் கையால் விருது பெற்றது எங்க எல்லோருக்கும் சந்தோஷம். அதைவிட, அவனால் காப்பாற்றப்பட்ட மூணு பேரின் நன்றியைத்தான் பெரிய விருதாக நினைக்கிறோம்' என்கிறார் அப்பா கோவிந்தன்.

ஆமோதித்து தலை அசைக்கிறான் இந்த வீரச் சுட்டி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism