Published:Updated:

`வரதட்சணைக்குப் பதிலாக புத்தகம்!' - மணமகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மணமகள் குடும்பத்தினர்

`வரதட்சணைக்குப் பதிலாக புத்தகம்!' - மணமகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மணமகள் குடும்பத்தினர்
`வரதட்சணைக்குப் பதிலாக புத்தகம்!' - மணமகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மணமகள் குடும்பத்தினர்
`வரதட்சணைக்குப் பதிலாக புத்தகம்!' - மணமகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மணமகள் குடும்பத்தினர்

கேட்ட வரதட்சணை கிடைக்கவில்லை என்பதற்காக, சமையலறைச் சிலிண்டர் உதவியுடன் மருமகள்களைக் கொலைசெய்பவர்களைக் கண்ட தேசம் இது. வரதட்சணை கேட்பது சட்டப்படி குற்றம் என்பதால், ”நாங்க நகை பணம் எல்லாம் வாங்குறது இல்லை.  ஏதோ நீங்களா பார்த்து பொண்ணுக்கு என்ன செய்யனுமோ செய்யுங்க!”, என்று சூசகமாகக் கேட்பவர்களும் ஒரு ரகம். 

இவர்களுக்கு நடுவே, வித்தியாசமானதொரு திருமணம் மேற்குவங்காளத்தில் நிகழ்ந்திருக்கிறது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர், சூர்யகாந்தா பாரிக். இவருக்கு, பிரியங்கா பேஜ் என்பவருடன் திருமணம் முடிவாகி இருந்தது. தொடக்கத்திலேயே வரதட்சணை வேண்டாம் எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார், சூர்யகாந்தா. 

அதனால், சூர்ய காந்தாவுக்கு வரதட்சணைக்குப் பதிலாக ஆயிரம் புத்தகங்களைத் திருமணத்தன்று சர்ப்ரைஸாகக் கொடுத்துள்ளனர் பெண்ணின் பெற்றோர். ஆயிரம் புத்தகங்களின் விலை, கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் இருக்கும். இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், “எனது பெற்றோருக்கு வரதட்சணை கொடுப்பதில் உடன்பாடு இல்லை. சூர்யகாந்தாவுக்கும் அது பிடிக்காது. சூர்யகாந்தாவின் இந்த குணத்தைப் பாராட்டி, அவருக்குப் பிடித்த ஆயிரம் புத்தகங்களைத் திருமணத்துக்காக எனது அப்பா தந்திருக்கிறார். சூர்யகாந்தாவைப் போல நானும் புத்தகம் அதிகம் படிப்பேன் என்பதால், எனது அப்பா இவ்வாறு தேர்ந்தெடுத்திருக்கிறார்!” என்கிறார். புத்தகங்களைக் கொல்கத்தாவின் கல்லூரி சாலையில்தான் வாங்கியுள்ளனர்.  

கொல்கத்தாவின் கல்லூரி சாலையும் அங்கு நிரம்பியிருக்கும் புத்தகக் கடைகள் அத்தனையும், புத்தக விரும்பிகளுக்காகவே அமைக்கப்பட்டிருக்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.