சிலந்தி இனங்களிலேயே அதிக விஷம்கொண்டது 'வாழைச் சிலந்தி.’ மிக அதிக மனிதர்களின் சாவுக்குக் காரணமான சிலந்தி என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து இருக்கிறது. இவற்றில், 'போனிட்ரியா ஃபெரா’ (Phoneutria Fera) என்ற சிலந்தி மிகவும் கொடிய விஷம்கொண்டது. இதற்கு கிரேக்க மொழியில், ’கொலைகாரன்’ என்று பெயர்.

இவை, மத்திய மற்றும் தென் அமெரிக்க வெப்ப மண்டலப் பகுதிகளில் வசிக்கின்றன. கோஸ்டா ரீகா, கொலம்பியா, வெனிசுவேலா, கினியா, ஈக்குவேடார், பெரு, பொலிவியா, பிரேஸில், அமேஸான் காடுகளில் அதிகம் தென்படும்.

இவற்றுக்கு எட்டுக் கண்கள். அவற்றில் இரண்டு பெரியவை. கால்களின் நீளம் 15 செ.மீ. வெட்டுக்கிளி, பூச்சிகள், சிறிய ஓணான்கள், சுண்டெலிகள் ஆகியன இவற்றின் உணவு.

இவற்றை, 'அலையும் சிலந்திகள்’ என்றும் சொல்வார்கள். இரவு நேரத்தில் அங்கும் இங்கும் ஊர்ந்துகொண்டே இருக்கும். பகலில், இருட்டான பகுதிகளில் ஒளிந்துகொள்ளும். பெரும்பாலும் வாழை மரத்தின் பட்டைகளுக்கு இடையிலும், பழக் குலைகளுக்கு உள்ளேயும் ஒளிந்து இருக்கும். அதனால், வாழைச் சிலந்தி என்கிறார்கள்.

கறையான் புற்றுக்கள், பாறை மற்றும் விழுந்துகிடக்கும் மரங்களின் அடிப் பகுதி, மரப் பெட்டிகள், வீட்டின் சமையல் அறை, ஷூக்கள் போன்ற இடங்களிலும் அழையா விருந்தாளியாகக் குடியேறிவிடும். தெரியாமல் நம் உடல் மீது பட்டுவிட்டால், ஒரே கடி. விஷம் உடலுக்குள் ஏறிவிடும்.

கடித்த இடத்தில், கடுமையான வலியும் வீக்கமும் தோன்றும். தசைகளைச் செயல் இழக்கச் செய்வது, மூச்சுத் திணறல், பக்கவாதம், மலட்டுத்தன்மை போன்றவற்றை இதன் விஷம் ஏற்படுத்தும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, கார்பன்-டை ஆக்ஸைடின் அளவை அதிகரித்து, முதலில் மயக்கத்தையும் பிறகு மரணத்தையும் ஏற்படுத்தும்.

இவை, 165 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, பூமியில் இருந்ததற்கான பாறைப் படிம ஆதாரங்கள் உள்ளன.