உதவி செய்வதற்கு வயது தேவை இல்லை. எங்கும் தேடிச் செல்லவும் வேண்டாம். ஒரு கம்ப்யூட்டர் போதும்.

ஆம்! www.Freerice.com என்ற இணையதளத்துக்குச் செல்லுங்கள். இந்தத் தளம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு அமைப்புக்காக (United nations world food program)நிறுவப்பட்டது. அனைவருக்கும் கல்வி மற்றும் ஏழைகளுக்கு இலவச உணவு தானம் செய்வதே இதன் நோக்கம்.

இந்த இணையதளத்தில் உங்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 10 அரிசி மணிகள் தானமாக வழங்கப்படும். கேள்வி என்றவுடன் பதற வேண்டாம். பல்வேறு பிரிவுகளில், நமக்கு உகந்த தலைப்பில் உள்ள கேள்விகளை நாமே தேர்வுசெய்து பதில் அளிக்கலாம். மொழிப் பயிற்சி, இலக்கியம், புவியியல், ஆங்கில மொழியாற்றல், கணிதம், வேதியியல் போன்ற தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்படும்.

இந்தத் தளம், அக்டோபர் 7, 2007 அன்று துவக்கப்பட்டது. துவங்கிய முதல் நாளில் 830 பருக்கை அரிசிகள் தானமாக வழங்கப் பட்டன. இந்தத் தளத்தை உருவாக்கியவர், ஜான் ப்ரீன் (John Breen), இதற்காக 'பெர்க்மேன்’ என்கிற விருதைப் பெற்றுள்ளார்.

இந்தத் தளத்தில் நமக்கெனத் தனிக் கணக்கைத் தொடங்கியும் கேள்விக்குப் பதில் அளிக்கலாம். ஒவ்வொரு மாதமும் அதிகமாகத் தானம் செய்யும் நபர்களை, அந்த மாத சாதனையாளர் என்றும் அறிவிக்கிறார்கள்.

சுட்டிகள் சரியான பதில் அளித்ததன் மூலம், இதுவரை 91 மில்லியன் அரிசி மணிகளை இலவசமாக வழங்கி இருக்கிறது. மேலும், இந்தத் தளத்தில் ஒரு குட்டி மார்க்கெட்டும் உள்ளது. இங்கு டி-ஷர்ட், பை, காபி கப் ஆகியவை பரிசுகளாக உள்ளன. இங்கு நாம் வாங்கும் பொருள்களின் மூலம் கிடைக்கும் பணத்தின் லாபம், அரிசி தானத்துக்கு வழங்கப்படும். இந்தத் தளத்தில் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது மூலம் நமது அறிவையும் பெருக்கலாம், பிறருக்கு அரிசியைத் தானமும் செய்யலாம்.