விலங்கியல் ஆசிரியர், மனித உடலின் மூளை, இதயம், சிறுநீரகம் வரைந்து பாகங்களைக் குறிக்கச் சொல்வாங்க. இதுவே மாயா டீச்சர்னா, பசங்களை மந்திரக் கம்பளத்தில் ஏற்றி, ஜாலியா டூர் கூட்டிட்டுப் போய், கற்றுத்தருவாங்க. நமக்கும் இப்படி ஒரு வழி இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்னு தோணும். உங்களுக்கும் அப்படிதானே?

நிஜமாகவே மனித உடலுக்குள் பயணம் செய்து, ஒவ்வொரு உறுப்பும் எப்படிச் செயல்படுகிறது எனத் தெரிந்தால், விலங்கியல் பாடம் ரொம்ப ஈஸிதானே! அதுக்கு நீங்க நியூசிலாந்தின் கார்பஸ் மியூஸியத்துக்குப் போகணும்.

கார்பஸ் என்பது உடல் கட்டமைப்பு என்பதைக் குறிக்கும். மனித உடல் மாதிரியான தோற்றத்தில் இருக்கும் இந்த மியூஸியம், உடல் கட்டமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளை விளக்குகிறது. ஒரு மனிதன் அமர்ந்து இருப்பது போல இருக்கும் இந்தக் கட்டடம், மார்ச் 2008ல் திறக்கப்பட்டது. உடற்கூறுகளைப் பற்றி தெரிந்துகொள்ள, உடலுக்குள் பயணம் செய்யலாம். சுவர் பகுதி, தரைப் பகுதிகள் எல்லாமே ஃபைபர் கிளாஸினால் உருவாக்கப்பட்டு, நாம் மிகப் பெரிய மனித உடலுக்குள் இருப்பது போன்ற உணர்வை உண்டாக்குகிறது.

பார்வையாளர்கள், உடல் உறுப்புகள் எப்படி இயங்குகிறது என்பதைப் பார்க்கவும், கேட்கவும், உணரவும் முடியும். கிட்டத்தட்ட நியூசிலாந்து சுட்டிகளின் மாயா டீச்சர் இந்த மியூஸியம். உடலுக்குள் பயணம் செய்யும்போதே, உடல் உறுப்புகள் பற்றிய பல அறிவுப்பூர்வமான தகவல்களையும் இந்த மியூஸியம் தருகிறது.

3D, கற்பனைக் காட்சியமைப்பு, ஒலிகளின் மூலம் மனித உடலின் செயல்பாடுகளை விளக்குகிறது. 8 மொழிகளில் இதற்கான விளக்கங்களும் தருகிறார்கள்.

மனித உடலின் இந்த பயணம் எஸ்கலேட்டர் மூலம் பாதத்தில் தொடங்கி, மூளையின் நியூரான் செல்களில் முடிகிறது. நடுவில், சீஸ் எப்படி செரிமானமாகிறது. சீஸை குடல் எப்படி எதிர்கொள்கிறது என்பதையும் அறியலாம். 5D தியேட்டரில் இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதைப் பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விளையாட்டு மூலமாகவும் எளிமையாக புரியவைக்கிறார்கள். தும்மும்போது என்ன ஆகிறது, நாக்கில் எந்த எந்த பாகங்களில் என்னென்ன சுவை உணரப்படுகிறது என்பது போன்ற தகவல்களும் காட்டப்படுகின்றன. குழந்தைகள், அந்த ரப்பர் நாக்குகளில் உற்சாகமாகக் குதித்து விளையாடவும் வசதி இருக்கிறது. மூக்கின் உள்ளே, விதவிதமான வாசனைகள் எப்படி உணரப்படுகின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

இறுதியாக மூளையில் எவ்வாறு தகவல்கள் பதிகின்றன? எவ்வாறு அவை தேவைப்படும் போது திருப்பி எடுக்கப்படுகின்றன என்பதையும் விஷுவலாக விளக்குகிறார்கள்.

இந்த மியூஸியத்துக்குப் போய் வந்த எல்லோரும் தங்கள் உடலின் அருமையை உணர்வார்கள். பிறகு, யாருமே தங்கள் உடலை சாதாரணமாகப் பார்க்க மாட்டார்கள் என்பது நிச்சயம் !