ஜனவரி 21-ஆம் தேதி டெல்லியில் நீர்வளத் துறை அமைச்சகத்தால் 'வருங்காலத்துக்கான நீர் சேமிப்பு' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடந்தது. இந்தியா முழுவதிலும் இருந்து 23,475 பள்ளிகளைச் சேர்ந்த 16 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அதில், 4,5,6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில், கோவை, பாரதீய வித்யாபவன் மெட்ரிக் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் பாவிகா, இரண்டாவது இடத்தைப் பிடித்து, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தார். பாவிகாவுக்கு 50 ஆயிரம் ரூபாயும், டிராயிங் கிட் ஒன்றும் பரிசாகத் தந்தார்கள். சென்ற வருடம் 'உலகக் காடுகள்’ தினத்தை முன்னிட்டு, தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஓவியப் போட்டியில்... பாவிகா ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். பாவிகா நீச்சல் வீராங்கனையும்கூட. சென்ற வருடம் தேசிய அளவில் இந்தூரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில், இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தினார்.

சுட்டி விகடனின் 'அவதார்’ பாணியில் கொல்கத்தாவில் பள்ளி மாணவர்கள் 485 பேர், மகாத்மா காந்தி வேடத்தில் உலா வந்து, புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். மீசை, கதராடைகள், ரவுண்ட் ஃபிரேம் கண்ணாடிகள் அணிந்து, தடியை ஊன்றியபடியே மத்திய கொல்கத்தாவின் மாயோ சாலையில் ஒரு கிலோ மீட்டருக்கு அமைதிப் பேரணி நடத்தினர்.

தேசத் தந்தையின் உண்மை, நீதி மற்றும் அகிம்சை ஆகிய கொள்கைகளைப் பறைசாற்றிய சுட்டிகளின் அமைதி ஊர்வலம், கொல்கத்தா மக்களை வியப்புக்கு உள்ளாக்கியது. ஒரே நேரத்தில் 485 சுட்டிகள் காந்தி அவதாரம் எடுத்தது, புதிய உலக சாதனை என்பதால், கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், கோவையில் 255 சுட்டிகள் காந்தி அவதாரில் கூடியதே முந்தைய உலக சாதனை!

பொதுமக்கள் பார்வைக்காக லண்டனில் உள்ள டிராஃபால்கர் ஸ்கொயர் பகுதியில் 'பிரைட்டர் மார்னிங்’ என்ற ஸ்லோகனோடு ஜூஸ் தயாரிக்கும் டிராப்பிகானா நிறுவனம், விளம்பரத்துக்காக பிரமாண்ட விளக்கு ஒன்றை அமைத்துள்ளது. இதனை உருவாக்க 6 மாதங்கள் ஆனதாம். இந்த செயற்கைச் சூரியனின் அளவு, கால்பந்தைப் போல 30 ஆயிரம் மடங்கு பெரியது. எடை 2,500 கிலோ. இதில் பயன்படுத்தி இருக்கும் விளக்குகள், 60,000 பல்புகளுக்குச் சமம். இதனை உருவாக்கியவர், கிரேவேர்ல்டு. ஜனவரி 23-ஆம் தேதி இந்த பிரமாண்ட விளக்கைத் தற்காலிகமாக எரியவைத்தனர். இதனைப் பார்த்தவர்கள், 'இரவில் சூரியன் வந்துவிட்டதோ...’ என வியந்தனர்.

உலகப் பெண்கள் ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா பல்லிக்கல், 14-வது இடத்தைப் பிடித்து இருக்கிறார். இந்திய பெண்கள் ஸ்குவாஷ் வரலாற்றில், உலகத் தர வரிசையில் இந்த அளவுக்கு உச்சத்தை எட்டிய ஒரே வீராங்கனை இவரே.

சென்னையில் நடந்து முடிந்த 21 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்தார், தீபிகா.

எகிப்துக்கு எதிரான இறுதிப் போட்டிகளில், தீபிகா அபார வெற்றி பெற்றாலும், இந்தியாவின் மற்ற இருவர் தோல்வியைத் தழுவியதால், 2-1 என்ற கணக்கில் எகிப்து சாம்பியன் பட்டத்தைக் கைப் பற்றியது.

இம்முறை இந்தியா பட்டத்தைத் தவறவிட்டாலும், ரசிகர்களின் உள்ளங்களை வெகுவாகக் கவர்ந்தார் தீபிகா.

உத்தரப் பிரதேசத்தின் அஸம்கர் என்ற மாவட்டத்தில் உள்ள பல மசூதிகள், துவக்கப் பள்ளிகளாகவும் இயங்குகின்றன. இஸ்லாமியர்கள் வழிபடும் 100க்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ள இந்த மாவட்டத்தில், சுமார் 50 மசூதிகளில் எல்.கே.ஜி. முதல் 5-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தப்படுகிறது. அதுவும், இலவசக் கல்வி.

இஸ்லாமியக் கல்வியாளர்களால் இந்தப் பள்ளிகள் இயங்கினாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு சேர்ந்து படிக்கலாம் என்பது மற்றொரு சிறப்பு. உருது மொழி சிறப்பாக சொல்லித் தரப்படுவதால், இந்தப் பள்ளிகளுக்கு நல்ல வரவேற்பு. பள்ளிகளைக் கோயிலுக்கு ஒப்பிடுவது வழக்கம்; ஆனால், அஸம்கரில் கோயில்களே பள்ளிகளாகச் செயல்படுகின்றன.

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள 'ராடிசன் ப்ளூ’ என்ற ஹோட்டலில், 82 அடி உயரம்கொண்ட சிலிண்டிரிக்கல் வடிவிலான உலகின் பிரமாண்ட மீன் தொட்டியை அமைத்துள்ளனர். இந்த மீன் தொட்டியில் நூற்றுக்கணக்கான வண்ண மீன் வகைகள் இருக்கின்றன. என்ன விசேஷம் என்றால், சிலின்டிரிக்கல் வடிவில் இருப்பதால், இதன் நடுவில் ஒரு லிஃப்ட் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில் ஏறி, வகை வகையான மீன்களை மிக நெருக்கமாக பார்த்துக்கொண்டே... இந்த மீன் தொட்டியின் மேல் தளத்துக்குச் செல்லலாம். இப்படிப் போகும்போது கடலின் உள்ளேயே செல்வது போன்ற அனுபவம் கிடைக்கிறதாம். இதை ரசிப்பதற்காகவே, அந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறதாம். என்னமா யோசிக்கிறாங்கப்பா!

கடலூரில் உள்ள சி.கே. ஸ்கூல் ஆஃப் பிராக்டிக்கல் நாலெட்ஜ் பள்ளியின் மாணவர்கள், 10 நிமிடங்களில் காய்கறி களில் இருந்து 15,000 பூ வடிவங்களைச் செதுக்கி, அதைக்கொண்டு 50 அடிக்கு 30 அடி அளவில் உலக வரைபடத்தை உருவாக்கி, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தனர். ஒவ்வொரு கண்டத்தின் கல்வி அறிவு விகிதம் மற்றும் ஏழ்மை விகிதம் என்று இந்த வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தந்தை காமராஜரின் 108-வது பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாடுவது என சரவணனும் மொகைதீன் அலியும் முடிவு செய்தனர். கண்ணாடி, டீத்தூள், மரத்தூள், பென்சில் சீவல்கள், விரல் ரேகை என 108 விதமான பொருள்களைக்கொண்டு காமராஜரின் 108 உருவங்களை உருவாக்கினார்கள். சீர்காழி, பெஸ்ட் மெட்ரிக் பள்ளியில் 1 படிக்கும் சுட்டிகளின் இந்தச் சாதனை, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் 2012 பதிப்பில் இடம்பெற்றுள்ளது. ''தினமும் ஐந்து மணி நேரம் என 12 நாட்களில் இந்த ஓவியங்களை உருவாக்கினார்கள்'' என்றார் பள்ளியின் முதல்வர் ஜேக்கப் ஞானசெல்வன்.