''புத்தகம் வாசிக்கும் பழக்கத்தில்தான் எல்லாம் ஆரம்பித்தது'' என்கிறார் சிலம்பாட்ட இளவரசி அஞ்சனா தேவி.

திருச்செந்தூர், காஞ்சி சங்கராச்சாரி¢யார் அகாடமி பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் அஞ்சனா தேவி, தமிழ் மொழி மற்றும் தமிழின் பாரம்பரி¢யக் கலைகளின் மீது தீராத ஆர்வம் மிக்கவர்.

'சின்ன வயசிலேயே விவேகானந்தர், சாரதா தேவி, பரமஹம்சர், இவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பேன். சத்திய சோதனை, திருப்பாவை, திருவெம்பாவை, மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம்னு என் படிக்கும் ஆர்வம் அதிகமாச்சு.

இந்த மாதிரித்¢ தமிழ்ப் புத்தகங்கள் படிக்கப் படிக்க நமது பாரம்பரி¢யக் கலைகளைக் கத்துக்கணும்னு நினைச்சேன். வாள்வீச்சு, சிலம்பம், கராத்தே, மான்கொம்பு சுற்றுதல் போன்றவற்றைக் கத்துக்க ஆரம்பிச்சேன். என்னோட சிலம்பம் மாஸ்டர் ஸ்டீஃபன் ரொம்பவே ஆர்வமாக் கத்துக் கொடுத்தார். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் நான் ஜெயிக்க ஆரம்பிச்சேன்.'' என்கிறார்அஞ்சனா.

''சிறிய வயதில் எனக்கும் சிலம்பு கத்துக்கணும்னு ரொம்ப ஆசை. என் ஆசையை என் பொண்ணு மூலமாக நிறை வேத்திக்கலாம்னு நினைச்சேன். இயல்பாகவே அஞ்சனாவுக்கு ஆர்வம் இருந்ததால், இந்த அளவுக்கு சாதிக்க முடிஞ்சது'' என்கிறார் அஞ்சனாவின் அப்பா மூர்த்தி.

அஞ்சனா தேவியின் தங்கை அபிநயா ஹரிணி, கராத்தேவில் கலக்குகிறார்.

''பெண்கள் எல்லாத்தையும் கத்துக்கணும். என் நோக்கம் எல்லாமே என் ரெண்டு பொண்ணுங்களையும் தைரியசாலிகளாக வளர்க்கணும்கிறதுதான். அதை அவர்கள் இந்த வயதிலேயே நிறைவேற்றி வருவது சந்தோஷமாக இருக்கு'' என்று பெருமிதமாகச் சொல்கிறார் அஞ்சனாவின் அம்மா நீலாவதி.

கலைகளை ஒரு பக்கம் கற்றுக்கொண்டு இருந்தாலும், பள்ளிக்கு விடுமுறை எடுத்தது இல்லை. ''ஸ்கூல் நாட்களில் போட்டிகள் நடந்தால், போக மாட்டேன். அதனால், பாதி போட்டிகளில் கலந்துக்க முடியறதில்லை'' என்கிறார் அஞ்சனா தேவி.

''எங்கள் பள்ளியில், எந்தப் போட்டி நடந்தாலும் அஞ்சனா முதல் பரி¢சு வாங்கிடு வாள். பாரதப் பண்பாட்டுத் தேர்வு, திருப் பாவை, திருவெம்பாவை போன்ற 150-க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறாள்'' என்கிறார் பள்ளியின் முதல்வர் செல்வ வைஷ்ணவி.

அஞ்சனா தேவி, 5-ஆம் வகுப்பு படிக்கும்போது, பாரதியார் பண்பாட்டுக்கழகம் சிறந்த மாணவருக்கான விருதைக் கொடுத்து இருக்கிறது.

''விருதுகள் வாங்க வாங்க இன்னும் சாதிக்கணும்னு ஆர்வம் வந்துச்சு. நடனம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மாவட்ட அளவில் கிராமிய நடனத்தில் பரிசு பெற்றேன். அம்மா, காமராஜ் கல்லூரியில் கரஸ்பாண் டென்ட்டாக இருக்காங்க. அங்கே நிறையப்புத்தகங்கள் கொண்டுவந்து எனக்கு படிக்கக் கொடுப்பாங்க. ஓய்வு நேரத்தில் டிக்ஷ்னரி, என்சைக்ளோபீடியானு ரெஃபர் பண்ணுவேன். ஹிந்தியில் பி.ஏ, முடிக்கப்போறேன். கம்ப்யூட்டரில் ஆட்டோ மெஷின் வரை முடிச்சு இருக்கேன்.'' என்று அடுக்குகிறார்.

அஞ்சனாவுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார் தெரியுமா? மாணிக்கவாசகரும், இளங்கோ வடிகளும்தான்.

''என்னோட கனவு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவது. சிலம்பாட்டத்திலும் உலக அளவில் பல சாதனைகளைப் புரியணும்'' என்கிற அஞ்சனா தேவி, சொல்லும் வெற்றி மந்திரம்...

''புத்தகங்கள் நம் அறிவை விருத்தி செய்யும். அதனால், வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் நிறையப் படியுங்கள். வெற்றிகள் தேடி வரும்''