சுட்டிகளின் உலகம் சுவாரஸ்யம் நிறைந்தது. சிறு வயது நிகழ்வுகளே அவர்கள் வளர்ந்த பின் அனுபவமாய் நின்று வழிகாட்டும். சுட்டிகளின் மனம், வருத்தம் கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை. இங்கே சில சுட்டிகள் தம் மனம் திறந்து தங்களின் பிரச்னைகளைப் பேசுகிறார்கள், கேட்போமா?

ரோஹித், 3-ஆம் வகுப்பு, புதுவை.

''வெளிநாட்டில் இருந்து வருஷத்துக்கு ஒரு தடவை என் அக்காவும் தங்கச்சியும், பெரியப்பா பெரியம்மாகூட இங்கே வருவாங்க. அவங்க வந்துட்டாப் போதும்... எங்க அப்பாவும் அம்மாவும் அவங்களை ஓவராக் கொஞ்ச ஆரம்பிச்சுடுவாங்க. நான் சும்மா இருந்தாலும், என் தங்கச்சி என்னை வீண் வம்புக்கு இழுப்பா, சண்டை வரும். ரெண்டு பேருமே முடியைப் பிடிச்சு இழுத்து சண்டை போடுவோம். அக்காதான் எங்களோட சமாதானப் புறா. எங்க அப்பா-அம்மாவும் சரி, அவங்க அப்பா-அம்மாவும் சரி, 'ஏன்டா அந்த புள்ளையைப் போட்டு அடிக்கிறே?’னு அவளுக்கு சப்போர்ட் பண்ணி தான் பேசுவாங்க. உண்மையில், நான்தான் அவகிட்ட இருந்து நல்லா அடி வாங்கிட்டு இருப்பேன்.

எனக்கு ஸ்கூல் போறதுன்னா, ரொம்ப இஷ்டம். ஆனால், காலையில் எந்திரிக்கிறதுதான் ரொம்பக் கஷ்டம். கொஞ்சம் லேட்டா ஆரம்பிச்சு நைட் வரையிலும் ஸ்கூல் வெச்சாக்கூட பரவாயில்லை. ஆனா அதெல்லாம் நடக்காது... என்ன செய்ய! ஈவ்னிங்ல விளையாடிட்டு சட்டையில் அழுக்கோடு வீட்டுக்கு வந்தால், அவ்ளோதான். தொவைச்சுடுவாங்க தொவைச்சி, சட்டையை இல்லை அங்கிள்... என்னைய! 'நல்லாப் படி, சைக்கிள் வாங்கித் தர்றேன்’னு அப்பா சொல்வார். நல்லா படிப்பேன். ஆனால், வாங்கித் தரமாட்டார். என்னோட மனசு இப்போ புரிஞ்சுதா?''

அஃப்ரின், 2-ஆம் வகுப்பு, நாகர்கோவில்.

''ஸ்கூலுக்கு தினமும் ஆட்டோவில்தான் போறேன். நிறையப் பேர் போகிற ஆட்டோவில் போனா சேஃப்ட்டி இல்லேன்னு, தனி ஆட்டோவில் அனுப்புறாங்க. ஆட்டோவில் தனியாப் போறது செம போர். ஆட்டோக்காரர் கரெக்ட்டா ஸ்கூல் ஆரம்பிக்கிற நேரத்துக்குக் கொண்டுபோய் விடுவார். முடிகிற நேரத்துக்கு வந்து கூட்டிட்டிப் போயிடுவார். ஸ்கூல் கிரவுண்டுல ஃப்ரீயா ஒரு நாள்கூட விளையாட முடியலை. எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கிறவங்க கிட்டே நானா போய்ப் பேசத்தான் செய்றேன். ஆனாலும், அவங்க ஃப்ரெண்ட்ஸ் ஆகிறது இல்லை. க்ளாஸ்ல பக்கத்தில இருக்கிற பொண்ணுங்க கிட்டே பேசினாப் போதும், 'அஃப்ரின் எப்பவும் பக்கத்தில் இருக்கும் பொண்ணுங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள்’ அப்படின்னு மிஸ் டைரியில் எழுதிக் கொடுத்துருவாங்க.

அதைப் பார்த்துட்டு, அம்மா என்னைப் பின்னி எடுத்துருவாங்க. இதனால், ஸ்கூலில் ஃப்ரெண்ட்ஸ் கிடைக்க மாட்டேங்கிறாங்க. வீட்டுக்குப் பக்கத்திலோ அண்ணன்கள் எல்லாம் எப்பவும் கிரிக்கெட்தான் ஆடுறாங்க. யாருமே கண்ணாமூச்சி, பச்சக் குதிரை விளையாட வர்றது கிடையாது. பீரோவுல ஒட்டி இருக்கிற டோரா புஜ்ஜியைத் தவிர, எனக்கு வேற ஃப்ரெண்ட்ஸே இல்லை அங்கிள்.''

கிரன், 5-ஆம் வகுப்பு, கோவை.

'ஏன் எப்பவும் டல்லா, உம்முனு இருக்கே?’னு நிரையப் பேர் அடிக்கடி கேட்கிறாங்க. இதுக்கான பதில் கொஞ்சம் நீளமாக இருக்கும்.

''வாரத்துல 6 நாள் ஸ்கூல், தினமும் ஹோம் வொர்க் பண்ணச் சொல்றது, காலையும் மாலையும் 'படி படி’ என்கிற அம்மாவின் கண்டிப்பு, வீடியோ கேம்ஸை ஒளிச்சு வைக்கும் அப்பாவின் விளையாட்டு எல்லாம் சகஜமப்பா ரகம். ஆனால், எனக்குத்தான் ஜாலியாப் பேசி விளையாட வீட்ல யாரும் இல்லை. அப்பா காலையில் 5 மணிக்கே வேலைக்குப் போயிருவாரு. அம்மா கிச்சன்ல பிஸியா இருப்பாங்க. பேசிக்கிட்டே எனக்கு காம்ப்ளான் தர அம்மாவுக்கு நேரம் இருக்காது. 'குளிடா, சாப்பிடுடா, ஷூ போட்டுக்கடா’னு மிஸ் மாதிரி ஆர்டர் போட்டு, என்னை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, அவங்களும் ஸ்கூலுக்குக் கிளம்பிடுவாங்க. ஏழரை மணிக்கு ஸ்கூல். 3 மணிக்குத் திரும்பி வர்றப்ப, வீட்டுல யாரும் இருக்க மாட்டாங்க. நானே என் வேலைகளைப் பார்த்துக்கணும். அம்மா 6 மணிக்கு வருவாங்க, கிச்சன்ல பிஸியாகிருவாங்க. அப்பா, வேலைக்கு ரொம்ப தூரம் போய் வர்றதாலே டயர்ட் ஆயிருவாரு. அப்போ, யாருதான் என்கூட பேசுவாங்க... விளையாடுவாங்க? ஆனா, என் ஃப்ரெண்டு பரத்தோட அம்மா, அவனோட சிரிச்சுப் பேசுறாங்களாம், விளையாடுறாங்களாம், டாட்டா சொல்வாங்களாம், ப்ச்!

யோக ஸ்ரீ 3-ஆம் வகுப்பு, திருவண்ணாமலை.

''எனக்கு வெளியே ஷாப்பிங் போகணும்னு ரொம்ப நாளா ஆசை. ஆனால், என் அப்பா, அம்மா வெளியே கூட்டிக்கிட்டு போக மாட்டாங்க. என் தம்பியை மட்டும் எனக்குத் தெரியாமல் கூட்டிக்கிட்டுப் போய் ஷாப்பிங் முடிச்சுட்டு வந்துருவாங்க. ஸ்கூலில் என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவங்க அம்மாவோடு அடிக்கடி ஷாப்பிங் போற கதையைச் சொல்வாங்க. நாமளும் இது மாதிரி எப்ப போவோம்னு இருக்கும். ஷாப்பிங் போனால், எனக்கு விதவிதமா கம்மல், ஜிமிக்கி, வளையல் எல்லாம் வாங்கிக்குவேன். அதனாலயோ என்னமோ, என்னைக் கூட்டிட்டுப் போக மாட்டேங்கிறாங்க. பொண்ணோட ஆசையை நிறைவேத்துறது பெற்றோரின் கடமைனு நினைக்காமல், எக்ஸ்ட்ரா செலவு ஆகுமே?னு நினைச்சா, நம்ம மனசு என்ன பாடுபடும்னு கொஞ்சமாவது நினைச்சுப் பார்க்கிறாங்களா? நீங்களாவது எங்க அம்மாக்கிட்டே சொல்லுங்களேன் அங்கிள்''