ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகளுக்கு இணையாக சுட்டிகளைக் கவர்ந்து இழுப்பது காமிக்ஸ் புத்தகங்கள்.

படிக்கப் படிக்க விறுவிறுப்பு. பத்து வரிகளில் சொல்ல வேண்டியதை, ஒற்றை வரியில் சொல்வது. ஓவியங்கள் மூலம் கண்களுக்கும் வண்ண வண்ண விருந்து படைப்பது... இவைதான் காமிக்ஸ் புத்தகங்களின் சக்சஸ் ஃபார்முலா. ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் எனப் பல அதிரடி ஹீரோக்கள் முதலில் பிறந்தது காமிக்ஸ் புத்தகத்தில்தான். பிறகு, சினிமாவில் நுழைந்து, எல்லோரையும் கவர்ந்தார்கள்.

இந்த காமிக்ஸ் புத்தகங்களை இன்னும் அதிகப் புத்துணர்ச்சியுடன் வெளிக் கொண்டுவரத் தூண்டும் வகையில், டெல்லியில் காமிக்ஸ் கான்ஃபெரன்ஸ் மூன்று நாட்கள் நடந்தது.

காமிக்ஸ் நிறுவனங்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் வாசகர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இதை நடத்தினார்கள். இந்திய மற்றும் வெளிநாட்டின் பிரபல காமிக்ஸ் நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டன.

35,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்த காமிக்ஸ் திருவிழாவில், திரும்பிய திசை எல்லாம் சுட்டிகளின் உற்சாக உலா. இந்த மூன்று நாட்களில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட புதிய காமிக்ஸ், கிராஃபிக்ஸ் நாவல்கள் வெளியிடப்பட்டன. முக்கியமாக, 'அமர் சித்ர கதா’ நிறுவனர், ஆனந்த் பை நினைவாக, அவரது வாழ்க்கை வரலாறு காமிக்ஸ் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இந்த மூன்று நாள் திருவிழாவின் ஹைலைட், ஓவியங்களில் மட்டுமே கண்டு ரசித்த பிரபல காமிக்ஸ் கதாபாத்திரங்கள் நேரில் வந்தார்கள். அந்த வேடங்களில் பலரும் உலா வந்து பார்வையாளர்களைக் குஷிப்படுத்தினார்கள். சுட்டிகளுக்கு காமிக்ஸ் கதாப்பாத்திரங்களை வைத்து, மாறுவேடப் போட்டி நடத்தி, பரிசுகளும் அளிக்கப்பட்டன.