Published:Updated:

எப்படி வந்தேன் தெரியுமா ?

ரப்பர் இரா.நடராசன் தி.விஜய் பிரானேஷ்

##~##

என்ன நண்பா ஸ்கூல் விட்டு வந்தாச்சா? நான்தான் அழிரப்பர் பேசறேன். என்னை வீட்லயே விட்டுட்டுப் போயிட்டீங்க. பள்ளியில் எவ்வளவு கஷ்டப்பட்டீங்களோ? நான் இல்லைனா உங்க பென்சிலும் பேனாவும் காட்டுக் காட்டுனு காட்டி இருக்குமே... அடிச்சு அடிச்சு எழுதி, திட்டு வாங்கினீங்களா? நான் எப்படி எல்லாம் தயாராகி வந்தேன்னு தெரிஞ்சா, இப்படி என்னை விட்டுட மாட்டீங்க.

பென்சில் பிறந்தபோதே நானும் பிறந்துட்டேன். ரப்பர் மரத்தில் இருந்து வருவதால் என்னை ரப்பர் என்று சொல்வதாக நினைக்கிறார்கள். அது அப்படி அல்ல. ரப்பர், என்னில் ஒரு குட்டிப் பகுதி மட்டும்தான். நான் 'ரப்’ பண்ணுவதால், ரப்பர் என்று அழைக்கப்படுகிறேன்.

ஒரு தாளில் பென்சில் கிராஃபைட் படருவதும், பேனா மை படருவதும் அதில் உள்ள கண்ணிற்குத் தெரியாத குட்டித் துளைகளால் தாங்கப்படுகிறது. அதன் உள்ளே நான் ஊடுருவி தேயும்போது, அங்கே ஒட்டி இருக்கும் பென்சில் கிராஃபைட்டும் மையும் எனக்குள் அடங்கி, தாளில் இருந்து வந்துவிடும். இதுவே, எழுத்துகளை நான் அழிக்கும் ரகசியம். இனி, நான் தயாராகும் விதத்தைப் பார்ப்போம்.

எப்படி வந்தேன் தெரியுமா ?

இப்போது எல்லாம், என்னைத் தயாரிக்க பெரிய ஆலைகள் வந்துவிட்டன. ஆனால், முன்பு வீட்டிலேயே தயாரித்தார்கள். முதலில், ஆலையில் நெகிழ் ரப்பர் கூழை கச்சாப் பொருளாகப் பயன் படுத்துகிறார்கள். அதைக் கலக்கும் இயந்திரத்தில் போடுவார்கள். எவ்வளவு எடுக்கிறார்களோ, அதற்குச் சம அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கி, மேலும் கூழ் ஆக்குவார்கள். பிறகு அதில், வினிகர் எனப்படும் மணமூட்டும் 'புளிக்காடி’ சமையல் சமாச்சாரம் பாதிக்குப் பாதி கரைத்துக் கலக்கி, அச்சுகளில் வார்க்கிறது அடுத்த கட்ட மிக்ஸர்.

எப்படி வந்தேன் தெரியுமா ?

இந்த கொதிக் கூழுக்கு பூ, பூனை,  பறவை என விரும்பும் வடிவத்தை தரலாம். அல்லது சதுரம், வட்டம், ஹார்ட்டின் போன்ற வடிவமும் தரலாம். 90 செல்ஷியசில் இருக்கும் என்னை, ஆயிரக்கணக்கில் தயாரித்து, கொதி கலனில் இருந்து பெரிய தண்ணீர் பீப்பாய்களில் கொட்டுகிறார்கள். இங்கே நான் குளிர்விக்கப்படுகிறேன். இந்த நீரில் சென்ட் கலந்து எனக்கு மணம் ஊட்டுவார்கள்.

எப்படி வந்தேன் தெரியுமா ?

மேலும், ஒழுங்காக இருப்பதற்கு, அச்சுகளில் ஏற்றி, ஓரங்களைச் சரி செய்து, குட்டிப் பாக்கெட்களில் போட்டு என்னைச் சுட்டிகளிடம் அனுப்புகிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு லட்சம் என்ற வீதத்தில் நான் தயாராகிறேன். என்னைத் தயாரிக்க உலகில் 4,000 தொழிற்சாலைகள் உள்ளன. எழுதும்போது மிகவும் கவனமாக இருந்தால் என்னை பயன்படுத்த வேண்டிய அவசியமே ஏற்படாது. யோசிப்பீங்களா..?

அடுத்த கட்டுரைக்கு