Published:Updated:

சுட்டி விஞ்ஞானி

விபத்தைத் தடுக்கும் உருளைகள் !எஸ்.ராஜாசெல்லம் படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

##~##

''மலைப்பிரதேசங்களில்... அவ்வப்போது வாகனங்கள் பள்ளத்தில் உருண்டு, பெரும் உயிர்ச்சேதத்தில் முடிவதைப் பார்க்கிறோம். இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க வழி காட்டுகிறார் காஞ்சிபுரம் மாவட்டம்,  மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிவசங்கர்.

''இது போன்ற விபத்துகளுக்கு காரணம் மைய விலக்கு விசை. அதாவது, மலைப்பிரதேச சாலைகளின் வளைவுப் பகுதிகளில் செல்லும்போது, வாகனங்களுக்கு மைய நோக்கு விசை அவசியம். அந்த மைய நோக்கு விசை செயல்பட ஆதாரம் இல்லாத நிலை உருவாகும்போது, அங்கே மைய விலக்கு விசை ஏற்பட்டுவிடுகிறது. இது, வாகனங்களைப் பாதையின் விளிம்பை ஒட்டி நகர்த்திச் சென்று, பள்ளத்தில் தள்ளி விடுகிறது.'' என்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதைத் தவிர்க்கவே, மலைப் பாதையின் வளைவு இடங்களை உட்புறம்  தாழ்வாகவும், வெளி விளிம்பு சற்றே உயரமாகவும் அமைப்பார்கள். இருப்பினும் வளைவுப் பாதையின் ஆரம் குறைவாகவும் வண்டிகளின் வேகம் அதிகமாகவும் இருந்தால் மைய விலக்கு விசை உருவாகி, விபத்து நிகழ்கிறது. மலைப் பாதைகளில் பேருந்துப் பயணம் மேற்கொள்ளும்போது பயணிகள் வெளிப்புற ஓரம் தள்ளப்படுவது மைய விலக்கு விசை காரணமாகத்தான்.

''இது போன்ற விபத்துகளை எளிய முறையில் தடுத்துவிட முடியும்'' என்று சொல்லி தனது கண்டுபிடிப்பு குறித்து விளக்குகிறார் சிவசங்கர்.

தர்மபுரி, வருவான் வடிவேலன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான 'இன்ஸ்பயர்’ கண்காட்சில்... இவரது கண்டுபிடிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

சுட்டி விஞ்ஞானி

''விபத்துகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ள மலைப் பாதை வளைவுகளில், சாலையின் வெளிப்புற ஓரங்களில் தடுப்புச் சுவருக்கு பதிலாக, செங்குத்து நிலையில்,  உருளைகள் சிலவற்றை வரிசையாகவும் நெருக்கமாகவும் அமைக்க வேண்டும். பூமியில் பொருத்தப்பட்ட அச்சுக்களை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் வகையில் இந்த ரப்பர் உருளைகளை அமைக்க வேண்டும். உருளைகள் ரப்பரால் ஆனவை என்பதால், அவற்றின் மீது மோதி உராயும் வாகனங்களின் வெளிப்புறத்தில், எந்த பாதிப்பு ஏற்படாது. ஒவ்வொரு உருளையையும் சுமார் 15 அடி உயரத்துக்குக் குறையாமல் இருக்கும்படி அமைக்க வேண்டும். அதேபோல், உருளைகளின் அச்சுக்கள் உயர்தொழில்நுட்ப உதவியுடன் ஆழமாகவும், மிகவும் வலுவானதாகவும் பொருத்த வேண்டும்'' என்கிறார் சிவசங்கர்.

கண்காட்சியில் இவரது கண்டுபிடிப்பு மற்றும் செயல் விளக்கம் பலரின் பாராட்டுக்களைப் பெற்று இருக்கிறது.

சுட்டி விஞ்ஞானி

''எனது இந்த கண்டுபிடிப்புக்கு காரணம், வேறு ஒரு மாணவர்தான். எனக்கு இயல்பாகவே அறிவியல் பாடங்களில் ஆர்வம் உண்டு. ஆறாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் ஸ்கூல் சீனியர் மாணவர் தேவராஜ், 'இன்ஸ்பயர்’ கண்காட்சியில் ஒரு கண்டுபிடிப்பை பார்வைக்கு வைத்தார். ஹெல்மெட் இருந்தால் மட்டுமே பைக்குகள் ஸ்டார்ட் ஆகும்  தொழில்நுட்பத்துடன் ஒரு கருவியைக் கண்டுபிடித்து இருந்தார். இது பல கட்டங்களில் தேர்வாகி, டெல்லி வரை சென்று வந்தார். அது எனக்கு ஊக்கம் அளித்தது. அதனால், எங்கள் பள்ளி அறிவியல் ஆசிரியர் மாதவன் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பெற்று, நானும் முயன்றேன். அப்போது கிடைத்த இந்த யோசனையை செயல் வடிவமாக்கி இருக்கிறேன்'' என்கிறார்.

சபாஷ் சிவசங்கர்!