Published:Updated:

ஒரே நாளில் பல சாதனைகள் !

கே.யுவராஜன்

##~##

ஒரு நாளில் ஒரு சாதனை செய்வதற்கே எத்தனையோ முன்னேற்பாடுகள், தீவிரப் பயிற்சிகள் தேவை. அப்படி இருக்க, ஒரே நாளில் 10 சாதனைகள் செய்தால்?

ஒரே நாளில் பல சாதனைகள் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை, ஆவடியில் உள்ள ஆர்.சி.எம். பள்ளிகள் குழுமத்தைச் சேர்ந்த 3,600 சுட்டிகள், ஒரு நாளில் நான்ஸ்டாப்பாக 10 சாதனைகளைச் செய்து, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு விருதுகளைப் பெற்று இருக்கிறார்கள்.

பசுமையின் அவசியத்தை உணர்த்தும் வகையில் 305 குட்டிச் சுட்டிகள், பச்சை வண்ணத்தில் ஆடைகளை அணிந்துகொண்டு, மரங்களின் கிளைகளைப் போல் கை, கால்களை அசைத்தவாறு வந்தார்கள். எல்லோரின் கைகளிலும் சுற்றுச்சூழல் அவசியத்தை உணர்த்தும் வாசகங்கள். 750 பெரிய சுட்டிகள், இரண்டு அடி அகலமும், 500 அடி நீளமும்கொண்ட மெகா தாளில்... மரம், செடி, கொடிகளை ஒரே சமயத்தில் வரைந்தார்கள். அடுத்ததாக, நான்கு அடி அகலமும், 200 அடி நீளமும்கொண்ட தாளில், 508 மாணவர்கள் சேர்ந்து ஷிஜிஹிஞிசீ, ஷிணிஸிக்ஷிணி,ஷிவிமிலிணி  என்ற எழுத்துகளைப் பிரமாண்டமாக எழுதியதுடன், வண்ணமும் அடித்து அழகுபடுத்தினார்கள்.

ஒரே நாளில் பல சாதனைகள் !

அடுத்து, 754 மாணவர்கள், 754 முட்டைகளில், ஐந்து நிமிட நேரத்தில், வண்ணம் தீட்டி அசத்தினார்கள். பிறகு, வேறு 754 மாணவர்கள், வண்ணக் குடைகளுடன் வந்து, நடனமாடி அசத்தினார்கள். ஆர்.சி.எம். பள்ளியின் பெயர்  வடிவிலும் நின்றார்கள். இதைத் தவிர, 700 மாணவர்கள், 5 நிமிடங்களுக்கு ஒற்றைக் காலில் நின்றது, 1332 மாணவர்கள் ஒரே சமயத்தில் ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டிப்போட்டு பிடித்தது, 700 அடிகள் நீளம்கொண்ட ரிப்பனைக் கத்தரித்து, புதிய கட்டடத்தைத் திறந்தது என சாதனைகள் தொடர்ந்தன. 704 பேர் எதிர் எதிராக அமர்ந்து, கைகளைப் பிடித்துச் சாய்க்கும் பலப் பரீட்சையும், சுட்டிகளைக் குஷிப்படுத்திய சாதனைகளில் ஒன்றாகப் பதிவானது.

ஒரே நாளில் பல சாதனைகள் !

இந்தப் பிரமாண்டமான ஐடியாவை உருவாக்கி, வெற்றிகரமாகச் செய்து முடித்த பாபு மற்றும் வரதராஜன் இருவரும் ஆர்.சி.எம். பள்ளியின் முன்னாள் மாணவர்கள். ''எங்கள் பள்ளியின் 37-ஆம் ஆண்டு விழாவை வித்தியாசமாகக் கொண்டாட வேண்டும் என்று தாளாளர், அருட்தந்தை சந்தியாகு நினைத்தார். நாங்கள் ஏற்கெனவே வித்தியாசமான பல சாதனைகளைச் செய்து இருக்கிறோம். அதனால், இந்தப் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்தார். மூன்றே நாட்களில் அத்தனை மாணவர்களையும் இதற்காகத் தாயார்ப்படுத்தினோம். கின்னஸ் சாதனைக்கும் இதை அனுப்பி இருக்கிறோம்'' என்றார்கள்.

ஒரே நாளில் பல சாதனைகள் !

இத்தனையும் முடிந்து மாலையில் பள்ளி மைதானம் காலி ஆனபோது, சந்தோஷப் புயல் அடித்து ஓய்ந்த உணர்வு தோன்றியது.