Published:Updated:

ஸ்கூல் ஸ்டார் !

ரா.அண்ணாமலை படங்கள் : பா.காளிமுத்து

ஸ்கூல் ஸ்டார் !

ரா.அண்ணாமலை படங்கள் : பா.காளிமுத்து

Published:Updated:
##~##

''இப்ப 10-ஆம் வகுப்பு என்பதால், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம்தான் பயிற்சி செய்கிறேன். அப்புறம் பாருங்க, அதிரடிப் பயிற்சிதான்... நிச்சயமாக, தேசிய  போட்டியில் தங்கம் வெல்வேன்'' என்று சொல்லும் ஷோபிகா, மதுரை மேரி ஆன் (Mary Ann) பள்ளியில் படிக்கிறார்.

சமீபத்தில், டெல்லியில் நடந்த தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தியவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ரொம்பக் குட்டி வயசில் இருந்தே ஸ்கூலில் நடக்கிற ரன்னிங், லாங் ஜம்ப் போட்டிகளில் கலந்துப்பேன். அதில் கிடைக்கிற சின்னச் சின்னப் பரிசுகள் எனக்கு ரொம்பவே உற்சாகத்தைக் கொடுக்கும். வகுப்பில் மற்ற தோழிகள் மத்தியில் ஒரு ஸ்டார் அந்தஸ்து கிடைக்கும். அதை ரொம்பவே நேசிச்சேன். என் ஆர்வத்தைப் பார்த்து அப்பாவும் அம்மாவும் எட்டு வயதில் டென்னிஸ் கோச்சிங் அனுப்பினாங்க. அப்போதில் இருந்து தமிழ்நாட்டில் நடந்த பல மாநில அளவிலான போட்டிகளில் தங்கம் வென்று இருக்கிறேன்'' என்கிறார் ஷோபிகா.

ஸ்கூல் ஸ்டார் !

தமிழ்நாட்டில் இருந்து தொடர்ந்து நான்காவது முறையாக தேசியப் போட்டிக்குத் தகுதி பெற்று இருக்கிறார். அதில், இரண்டு தடவை வெண்கலப் பதக்கம் வென்று இருக்கிறார். AITA (All India Tennis Association)நடத்திய தேசிய அளவிலான போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று இருக்கிறார்.

அயராத பயிற்சியும் தொடர் முயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணம் என்கிற ஷோபிகா, அதற்கு ஓர் உதாரணமும் சொல்கிறார். ''பினு என்ற சென்னை பெண்தான் எனக்கு சவாலானப் போட்டியாளர். தொடர்ந்து நான்கு முறை அவரிடம் தோற்றேன். பிறகு, ஐந்தாவது முறையாக, ராமநாதபுரத்தில் நடந்த போட்டியில், இறுதிச் சுற்றில் இரண்டரை மணி நேரம் போராடி, வெற்றி பெற்றேன். அந்தப் போட்டியை என்னால் மறக்கவே முடியாது'' என்கிறார்.

ஸ்கூல் ஸ்டார் !

ஷோபிகாவின் பள்ளித் தாளாளர், ரெஜினா ஜெயபால். ''ஷோபிகா, எல்லா விளையாட்டுக்களிலும் திறமைசாலி. படிப்பிலும் கெட்டி. 90 சதவிகிதம் மதிப்பெண் வாங்குபவர். அவரது டென்னிஸ் திறமைக்காக, எங்கள் பள்ளியில் அவருக்கு முற்றிலும் இலவசக் கல்வி வழங்குகிறோம். இது, வருங்கால விளையாட்டு நட்சத்திரத்துக்கு எங்களின் சிறிய பரிசு'' என்கிறார்.

''எப்பவும் துறுதுறுப்பு, எதிலும் சுறுசுறுப்பு இதுதான் ஷோபிகா. 6-ஆம் வகுப்பு படிக்கும்போது, ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றாள். டென்னிஸில் பெரிய நட்சத்திரம் ஆக வேண்டும் என்ற அவளது கனவையே எங்களின் கனவாகவும் மாற்றிக் கொண்டோம்'' என்று பெருமையுடன் சொல்கிறார்கள் ஷோபிகாவின் பெற்றோர்.

ஸ்கூல் ஸ்டார் !

பயிற்சியாளர் லட்சுமணன், ''எந்த ஒரு விளையாட்டுக்குமே அயராத அர்ப்பணிப்பும் மனஉறுதியான பயிற்சியும் முக்கியம். இது. ஷோபிகா விடம் இயல்பாகவே இருக்கும். சாதாரணப் போட்டியாக இருந்தாலும் இதே அர்ப்பணிப்புடன்தான் பயிற்சி செய்து களத்தில் இறங்குவார். அதுதான் அவரைத் தேசிய அளவுக்கு அழைத்து வந்து இருக்கிறது. அடுத்த தேசியப் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வார்'' என்று நம்பிக்கையுடன் பேசினார்.

''இந்தியாவுக்காக சர்வதேச அளவில் சாதிக்கணும்'' என்கிற ஷோபிகா, சொல்லும் வெற்றி வரிகள்... ''தோல்வி என்கிற சோர்வுகளை நீக்கும் ஒரே ஊட்டசத்து... நம்பிக்கை. அதை எந்த நேரமும் கை வசம் வெச்சுட்டே இருங்க. நிச்சயம் ஜெயிக்கலாம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism