Published:Updated:

ஹாக்கி அசத்தல் !

பூ.கொ.சரவணன்

##~##

ஒலிம்பிக் போட்டிகளில்... 30 வருடங்களுக்கு முன் வரை, எட்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்தது இந்திய ஹாக்கி. பிறகு, அடி மேல் அடி வாங்கி, தகுதிச் சுற்றுக்குக்கூட தகுதி பெறாமல் வெளியேறியது. ஆனால், இந்த முறை ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, ஒலிம்பிக் அணிகளில் ஒன்றாக நுழைந்து உள்ளது. ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்று, ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. பெண்கள் அணி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெரும் சுற்றின் இறுதிப் போட்டியில், தென் ஆப்ரிக்காவிடம் தோற்ற சோகத்துக்கு ஈடுகட்டும் வகையில் இருந்தது, நம் ஆண்கள் அணியின் ஆட்டம். அதிலும், சந்தீப் சிங் ஆடிய விதம் மலைக்கவைத்தது. சந்தீப் சிங் இந்தத் தொடரில் அடித்த மொத்த கோல்கள் 16. அதில், பிரான்ஸ் உடனான இறுதிப் போட்டியில் மட்டும் 5 கோல்களை அடித்து அசத்தினார்.

ஹாக்கி அசத்தல் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கபடி கலக்கல்!

பீகார் மாநிலம் உருவாகி 100 வருடங்கள் ஆனதைக் கொண்டாடும் விதமாக, முதல் பெண்கள் கபடி உலகக் கோப்பையை நடத்தியது. அதில் ஆண்களைப் போலவே, நம் இந்தியப் பெண்களும் உலகச் சாம்பியனாகி சாதித்து உள்ளனர். ஈரான், மெக்ஸிகோ, தாய்லாந்து, ஜப்பான் உட்பட 16 நாடுகள் கலந்துகொண்ட இந்த உலகக் கோப்பையில், இந்தியா முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அதிலும் அரை இறுதியில் ஜப்பானை வென்று, இறுதிப் போட்டியில் ஈரானை கவனத்தோடுதான் எதிர்கொண்டது. ஏனெனில், கடைசி ஆசிய விளையாட்டுகளில் இந்தியா, ஈரான் உடன் அரை இறுதியில் ரொம்பவே போராடித்தான் ஜெயித்தது. எனினும், மனம் தளராமல் ஆடிய நம் அணி, முதல் பாதியில் 19/11 பாயின்ட்ஸ் என முன்னிலை வகித்தது. இறுதியில், 25/19 புள்ளிகள் பெற்று, கபடி உலகக் கோப்பையை வென்றது.

ஹாக்கி அசத்தல் !

  சல்யூட் டிராவிட்!

இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றில்,16 வருடங்களாக தன் அழுத்தமான முத்திரையைப் பதித்த ராகுல் டிராவிட், கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஒய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். இந்தியாவின் சுவர் என செல்லமாக அழைக்கப்பட்டவர் இவர்.

எந்தப் பந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற டெக்னிக்கில் கைதேர்ந்தவர்.

ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்.

களத்தில் நுழைந்துவிட்டால், டிராவிட் போன்ற பொறுமைசாலியைப் பார்க்க முடியாது. 12 மணி நேரம் தொடர்ந்து களத்தில் நின்று ஆடுகிற அளவிற்குப் பொறுமைசாலி. மொத்தமாக 40,000 நிமிடங்கள் இப்படிக் களத்தில் இருந்தவர், டிராவிட். இது, யாருமே செய்யாத உலக சாதனை.

ஹாக்கி அசத்தல் !

2003 உலகக் கோப்பையின்போது, அணிக்கு விக்கெட் கீப்பர் இல்லாமல் போகவே, திடீர் கீப்பர் ஆக செயல்பட்டவர். தன் பள்ளிக் காலத்தில் வகுப்பு, வகுப்பை விட்டால் கிரிக்கெட் மைதானம் என வாழ்ந்தவர். இந்திய வீரர்களிலேயே சுழல் பந்தை நன்கு சமாளிக்கும் திறமையாளர். இங்கிலாந்து வீரர் மிக்கேல் வாகன், தனது சுழல் பந்து வீச்சால் பின்னி எடுத்த போது, அவரிடம் சென்று, சுழல் பந்து வீச்சை எதிர்கொள்வது எப்படி எனப் பொறுமையாக இரண்டு மணி நேரம் கற்றுக் கொண்டவர்.

சச்சினுக்கு அடுத்த படியாக, உலக அளவில் அதிக ரன்களை டெஸ்ட் போட்டிகளில் அடித்த வீரர் இவர்தான். இவரின் இன்னும் ஒரு சாதனை, உலக அளவில் 30,000 பந்துகளைச் சந்தித்த ஒரே வீரர். மூன்றாம் இடத்தில் ஆடி, 10,000 ரன்களை அடித்தவர், அதிக கேட்ச்களைப் பிடித்தவர், 38 வயதில் உலகிலேயே அதிக ரன்களை அடித்த வீரர் என சாதனைகளின் பட்டியல் நீள்கிறது. இவரின் மனத் திடத்தைப் பார்த்து வியந்த ஸ்டீவ் வாக், தன் சுயசரிதைக்கு முன்னுரையை இவரையே எழுதவைத்தார்.

ஓய்வு பெற்ற அன்று, தன்னைப்பற்றி இரண்டே வரியில் சொன்ன டிராவிட், ''நான் மிகப் பெரிய திறமையோடு எல்லாம் ஆடவில்லை. பல்வேறு தோல்விகளைச் சந்தித்தவன். ஆனாலும், நான் எப்பொழுதும் ஓயாது உழைப்பதையோ, முயற்சி செய்வதையோ நிறுத்தவில்லை. ஆகவேதான், சோகம் கலந்த இந்த தருணத்திலும் பெருமையோடு விடைபெறுகிறேன்'' என்றார்.