Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !
##~##

தன்னுடைய தந்தையின் சொந்த ஊரான குஜராத்தில் தொடங்கி, தனக்கு மிகவும் பிடித்த சமோசா வரை, பல விஷயங்களைச் சுட்டிகளுடன் பகிர்ந்துகொண்டார், நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோவை, ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வீடியோ கான்ஃபரென்ஸ் கலந்துரையாடலில், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருந்தபடி, 15,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரிடம் பேசினார். அவர்களில், பலரது கேள்விகளுக்கு நிதானமாகவும் விளக்கமாகவும் பதில் அளித்தார்.

முதல் விண்வெளிப் பயணத்தின்போது மனத்தில் உண்டான படபடப்புகள், அதை வெற்றிகரமாக நிறைவு செய்த தருணங்களை சுனிதா விவரித்தபோது, அரங்கில் அப்படி ஒரு நிசப்தம்.

பென் டிரைவ் !

''செவ்வாய் கிரகத்துக்குச் செல்வீர்களா?'' என்று ஒரு சுட்டி கேட்டதற்கு, 'ம்... மனிதர்களுக்குப் பயன்தரும் பட்சத்தில், நிச்சயமாகச் செல்வேன்' என்று சட்டெனச் சொன்னார், சுனிதா வில்லியம்ஸ்.

பென் டிரைவ் !

 நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் புதிய நெறிமுறைகளை வகுத்து இருக்கிறது, தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம்.

பள்ளி மாணவ-மாணவியரை, ஆசிரியர்கள் அடிப்பதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம். மாணவர்களிடம் பாரபட்சம் காட்டக் கூடாது, சிறுமைப்படுத்தும் விதமாக திட்டக் கூடாது, அவர்களுக்கு மன வேதனை ஏற்படும் விதத்தில் செயல்படக் கூடாது, என்ற உறுதிமொழி பத்திரத்தில் ஒவ்வோர் ஆசிரியரும் கையெழுத்து இட வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்த நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு குழுக்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக, உடல் ரீதியாகத் தண்டிப்பது, மன உளைச்சலை ஏற்படுத்துவது, கடுமையாகத் திட்டுவதை எதிர்த்துக் குரல் கொடுக்க, 'சுட்டிகளுக்கு உரிமை உண்டு’ என்பதை, அவர்களுக்கு உணர்த்துவதும், அனைத்துப் பள்ளிகளின் கடமை எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பென் டிரைவ் !

சுட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட, 'சில்லர் பார்ட்டி’ என்ற இந்தித் திரைப்படம், மூன்று தேசிய விருதுகளைக் குவித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

'குழந்தைகளுக்கான சிறந்த படம்’ விருதைத் தட்டிச் சென்றுள்ள சில்லர் பார்ட்டி, சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை, நிதேஷ் திவாரி, விஜய் மௌரியா மற்றும் விகாஸ் பால் ஆகியோருக்குப் பெற்று தந்துள்ளது.

இந்தப் படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களான இர்ஃபான் கான், ரோஹன் குரோவர், நாமா ஜெயின், ஆரவ் கண்ணா, விஷேஷ் திவாரி, சின்மய் சந்திரன்ஷ§, வேதாந்த் தேசாய் மற்றும் திவிஜ் ஹாண்டா ஆகிய ஒன்பது சுட்டிகளும், சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெறுகிறார்கள்.

பென் டிரைவ் !

மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன? வெப்பநிலையை அளவிடுவது எப்படி? வானிலைக்கும் கால நிலைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

வானிலை தொடர்பான அனைத்து விஷயங்களையும் பள்ளி மாணவ, மாணவிகள் நேரடியாகத் தெரிந்துகொள்வதற்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம், அவ்வப்போது பயிலரங்கம் நடத்தி வருகிறது.

ஆர்வம் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான சுட்டிகளுக்கு, மாதம் ஒரு முறை வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் நேரடியாக விளக்கம் அளிக்கின்றனர். அதிக எண்ணிக்கையில் சுட்டிகள் பயன்பெறும் வகையில், வரும் ஜூன் மாதத்தில் இருந்து டிசம்பர் வரை புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த, சென்னை வானிலை ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது.

பென் டிரைவ் !

இந்தியாவில் மொத்தம் 28 அறிவியல் மையங்கள் உள்ளன. அதில், தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஓர் அறிவியல் மையம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இது, 1987 பிப்ரவரி¢ 27-ல் தொடங்கப்பட்டது. சமீபத்தில் இதன் வெள்ளி விழா, கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ஒரு வார காலம்  தொடர்ந்து பல விதமானப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களின் ஒவியத் திறமையை வெளிக்கொண்டுவர, 'சிட் அண்ட் டிரா’  என்ற  ஓவியப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 25 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சின்மயா வித்யாலயா பள்ளியின் மாணவி கி.சி.அபிராமிக்கு முதல் பரி¢சு வழங்கப்பட்டது.

பென் டிரைவ் !

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட், நேபாள எல்லையில் அமைந்து இருப்பது உங்களுக்குத் தெரியும். உலகின் மிகக் குள்ளமான மனிதர் இருப்பதும் நேபாளம்தான்.

நேபாளத்தைச் சேர்ந்த 72 வயது தாத்தா, சந்திர பகதூர் டாங்கி என்பவரே அந்தச் சிறப்புக்கு உரியவர். இவரைப் பற்றிய தகவல் அறிந்து, அவர் வசிக்கும் குக்கிராமத்துக்கு சென்றது, கின்னஸ் சாதனைப் புத்தகத்தின் ஆசிரியர் குழு.

சந்திர பகதூர் டாங்கியின் உயரம், 54.60 சென்டி மீட்டர் மட்டுமே. இதை உறுதி செய்த குழு, 'உலகின் மிகக் குள்ளமான ஆண்’ என்ற கின்னஸ் சாதனைச் சான்றிதழை அவரிடம் அளித்தது.

டாங்கி தாத்தாவுக்கு முன்பு, உலகின் குள்ளமான ஆண் என்ற சிறப்பைத் தக்கவைத்து இருந்தவர், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 18 வயது பாலாவிங். இவரது உயரம் 59.9 செமீ. இது வரை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற குள்ளமானவர்களில் டாங்கிக்குதான் அதிக வயது என்பது குறிப்பிடத்தக்கது.

பென் டிரைவ் !

விளையாட்டுப் பொருளாகத் தொடங்கிய 'ரோபோட்’கள் படிப்படியாக தனது ஆதிக்கத்தைக் கார் தொழிற்சாலைகள், கனரகச் சாதனங்கள் உற்பத்தி செய்வதில் புகுந்தன. பின்னர், மருத்துவமனைகளில் ஆபரேஷன் செய்து சாதனை நிகழ்த்தின. தற்போது, ஜெர்மனி நாட்டில் 'கார்ல்ஸ்ருஹி’ (Karlsruhe) நகரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தினர், ஓவியம் தீட்டும் ரோபோட்டை வடிவமைத்து உள்ளனர். இந்த ரோபோவின் முன்னால் அமர்ந்தால் போதும், 10 நிமிடங்களில் நமது உருவத்தை கச்சிதமாக வரைந்துவிடும். அதன் செயல்பாடுகள் பற்றி வடிவமைப்பாளர் மார்டினா ரிசெர் கூறுகையில், ''இதில் உள்ள கேமரா, ஒரு உருவத்தைப் படம் எடுத்தவுடன், சாஃப்ட்வேர் உதவியுடன் ரோபோட் கரங்களுக்குக் கட்டளை இட்டு, வரைகிறது'' என்கிறார்.

பென் டிரைவ் !

பயப்படாதீர்கள், இது யானை மசாஜ்! ஆச்சர்யமா இருக்கா? மசாஜ்-க்கு பெயர்போன தாய்லாந்தில் இப்போது, இந்த யானை மசாஜ்-க்குத்தான் மவுசு. நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட குட்டி யானைகளைக்கொண்டு, மனிதர்களுக்கு மசாஜ் செய்கிறார்கள். இந்த யானைகள், இரண்டு கால்களைப் பயன்படுத்தாமல், ஒரு காலாலேயே, லேசாக அழுத்தம்கொடுத்து மசாஜ் செய்கின்றன. பயங்கர இடுப்பு வலி இருப்பவர்கள், இந்த யானைகளிடம் மசாஜ் செய்துகொண்டால், உடனே இடுப்பு வலி காணாமல் போய்விடுகிறதாம். இந்த யானை மசாஜ் செய்துகொள்ள உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் 'க்யூ’ கட்டி நிற்கிறார்களாம்!  

பென் டிரைவ் !

தெற்கு ஸ்பெயினில், அலோரா கிராமத்தின் அருகில் இருக்கும் மலைகளில், உலகிலேயே மிகவும் ஆபத்தான நடைபாதை இருக்கிறது. இந்தப் பாதை, 1 மீட்டர் அகலம் கொண்டது. 350 அடி உயரத்தில், 3 கி.மீ, தூரத்திற்கு மலைச்சரிவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. 1901-ல் தொடங்கி, 1905-ல் இந்தப் பாதை முடிக்கப்பட்டது. எனினும்,  1921-ல்தான் King Alfonso XIII மன்னரால் தொடங்கப்பட்டது. அவரே இந்த ஆபத்தான பாதையை முதலில் நடந்து கடந்தார். அதனால், இந்தப் பாதையை 'கிங்ஸ் லிட்டில் பாத் வே’ என்று அழைக்கிறார்கள்.

இங்கே ஒரு நீர்வீழ்ச்சி இருந்ததாம். தற்போது இந்தப் பாதை சிதிலம் அடைந்து இருப்பதால், 2000-ல் முதல் இந்தப் பாதையில் நடந்து செல்லத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.