ஊர் எல்லாம் மின் தட்டுப்பாடாக இருக்கும் இந்த நேரத்தில், திருப்பூர் மாவட்டம், சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ரேவதி, மின்சாரத்தை மிச்சப்படுத்தும் சிறந்த வழிமுறை ஒன்றைச் சொல்கிறார்.

சமீபத்தில், தர்மபுரி வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான 'இன்ஸ்பயர்’ கண்காட்சி நடந்தது. இதில், தன் யோசனையை 'பகலில் ஒரு நிலவு’ என்ற பெயரில் பார்வைக்கு வைத்தார், ரேவதி. பகலில் இயற்கை வெளிச்சத்தையே பல்பு ஒளிபோல் மாற்றிப் பயன்படுத்த முடியும் என்பதுதான் அவருடைய கான்செப்ட்.

''வீடுகள் அல்லது வர்த்தக நிறுவனங்களில், பகல் நேரங்களிலும் மின் விளக்குகளை எரியவிடும் சூழல் இருக்கு. இதன் மூலமும் தினசரி கணிசமான அளவு மின்சாரம் செலவாகுது. இந்த விரயத்தைச் சிறிய தொழில்நுட்பம் மூலம் எளிதாக மிச்சப்படுத்தலாம். அதாவது, ஓடு அல்லது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களைக்கொண்டுதான் நிறைய வர்த்தக நிறுவனங்களின் மேற்கூரைகள் அமைக்கப்பட்டு இருக்கு. இந்தக் கூரையில், குறிப்பிட்ட இடைவெளியில், வட்ட வடிவத் துளைகளைச் செய்துகொள்ள வேண்டும். அதாவது, கண்ணாடி போன்று வெள்ளை நிறம்கொண்ட, இரண்டு முதல் இரண்டரை லிட்டர் கொள்ளளவு உடைய கூல்டிரிங்ஸ் பிளாஸ்டிக் பாட்டில்களை அதில் பொருத்து வதுபோல் துளை இருக்க வேண்டும்.

பிறகு, சேகரித்துவைத்து இருக்கும் பாட்டில்களில், தூய்மையான நீரை நிரப்பிக்கணும். வாய்ப் பகுதியை மூடிவிட்டு, பாட்டில்களை கூரைப் பகுதியில் பொருத்த வேண்டும். அப்படிப் பொருத்தும்போது, பாதி பாட்டில் அறையின் உட்புறம் கூரையில் இருந்து தொங்கும் வகையில் அமைக்க வேண்டும். மீதி பாட்டில், கூரையின் மேற்புறம் தெரியும்படி இருக்க வேண்டும். பாட்டிலைச் சுற்றி மழை நீர் போன்றவை உட்புகாதபடி இறுக்கமான பிணைப்புகளை உருவாக்க வேண்டும்.'' என்கிறார் ரேவதி.

இந்தப் பாட்டிலில் உள்ள தண்ணீரானது சூரிய ஒளியை உள்வாங்கிக்கொள்ளும். இப்படி உள்வாங்கப்படும் ஒளியானது, அறையின் உட்புறமாகத் தொங்கியபடி இருக்கும் பாட்டிலின் வழியே, அறை முழுவதும் பிரதிபலிக்கும். இதன் மூலம் அறையில் தேவையான அளவு வெளிச்சம் கிடைக்கும். பெரிய அறையாக இருந்தால், பாட்டில்களின் அளவை அதிகப்படுத்தி, கூடுதல் வெளிச்சம் பெறலாம். இப்படிக் கிடைக்கும் ஒளி இயற்கையானது என்பதால், சருமத்துக்கும் நன்மை பயக்கும். மேலும், நிறைய நிறுவனங்கள் இப்படி மின் தேவையைக் குறைப்பதன் மூலம் மின் தட்டுப்பாடும் சீரடையும். சுற்றுச்சூழலும் மேம்படும்'' என்கிறார்.

ரேவதி வலியுறுத்தும் இந்த தொழில் நுட்பத்தைச் செயல்படுத்தினால், பகலில் பல நிலவுகள் செலவு இல்லாமல் நமக்கு வெளிச்சம் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.