வணக்கம் நண்பர்களே, பரீட்சை நேரத்தில் கரன்ட் கட் ஆகுதா? உடனே என் ஞாபகம் வந்துருமே. நான்தாங்க மெழுகுவத்தி பேசுறேன்.

ஒரு காலத்தில் இந்த மின்சார விளக்குகள் வராதபோது, முழுக்க முழுக்க உங்க வீட்டை நான்தான் ஒளி ஏற்றினேன். நான் எப்படி உங்களிடம் வந்து சேர்ந்தேன்னு தெரியுமா?

இப்போது, என்னை உற்பத்தி செய்ய பெரிய தொழிற்சாலைகள் வந்துவிட்டன. ஒரு காலத்தில் வீட்டிலேயே என்னைத் தயாரித்தார்கள். இப்போதும் பல வீடுகளில் குடிசைத் தொழிலாக உருவாகிறேன். நான், மூன்று வகையான உருகுத் திரவத்தால் ஆனவன். மிருகக் கொழுப்பு கெட்டிப்படும்போது, அதை எரிபொருளாகக்கொண்டு என்னைச் செய்கிறார்கள். தேன்கூடுகளை உருக்கிக் கிடைக்கும் தேன்மெழுகு எனும் எரிதிரவத்திலும் என்னைச் செய்வது உண்டு. மூன்றாவதாக இப்போது வேதி முறையிலும் உருவாகிறேன்.

என்னைத் தயாரிக்கும் தொழிற்சாலையின் முதல் பகுதி, பர்னேஸ் எனப்படும் கொதிகலன்களால் ஆனது. இங்கேதான் என் உடலை அமைப்பதற்கான எரிதிரவத்தை முதலில் கொதியேற்றுகிறார்கள். திரவ நிலை அடைந்த மெழுகை, குழாய்கள் வழியே அடுத்த நிலையான அச்சுக் குழல்களுக்கு மோட்டார் மூலம் வரவைக்கிறார்கள். இந்த அறையில், பல வகை அச்சுக் குழல்கள் ஏற்கெனவே திரியோடு இருக்கும்.

எனது திரி, ஆரம்பக் காலத்தில் ஒற்றை இழை அல்லது, மெல்லிழைப் பருத்தி நூலாக இருந்தது. இப்போது, பின்னல் இழைத் திரிகளே பெரும்பாலும் பயன்படுகின்றன. இவை, நின்று எரியும். அந்தத் திரிகளைத் தயாரிக்கும் பகுதி தொழிற்சாலையிலேயே தனியாக உள்ளது. இவற்றை, அந்த அச்சுக் குழலின் மையம் வழியே செலுத்துவார்கள்.

உருகிய மெழுகுத் திரவம், இந்த அச்சுக் குழல்களில் செலுத்தப்பட்டு, கூலர்ஸ் எனப்படும் குளிர் ஊட்டும் பகுதியில், குளிர் நீரில் வைக்கப்படும். அச்சுக் குழலின் வடிவம், அதன் அகலம், அதன் நீளம், இதுவே எனது வடிவமாகிறது. இதில் பல நிறங்களில் எனக்கு கவர்ச்சி அளிக்கப்படும். சில சமயம், வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்பட்டு, 'கமகம’ என்று நான் ஒளிவிடவும் வழி செய்கிறார்கள்.

அச்சுக் குழல்கள் தங்களைத் தாங்களே கழற்றிக்கொண்டு என்னை விடுவிக்கும் இடம், தொழிற்சாலையின் அடுத்த பகுதி. இங்கே, பல தொழிலாளர்கள் எனக்கு இறுதி வடிவம் தருகிறார்கள். பிசிறுகளை நீக்கியும், எனது திரியைச் சரியாக 'கிராப்’ செய்தும் அனுப்புகிறார்கள்.

பேக்கிங் எனப்படும் கடைசிப் பகுதியில், என்னை அழகான அட்டைப் பெட்டிகளிலோ, கொஞ்சம் தடிமனான காக்கி, நீலம், சிவப்புக் காகிதத்திலோ அடைத்து, கடைக்கு அனுப்புகிறார்கள்.

எனது உடலையே உருக்கி, உங்களுக்காக ஒளி தந்து, சில மணி நேரங்களே வாழ்ந்தாலும், ஒரு காலத்தில் நான்தான் கடிகாரம் போல நேரத்தைக் காட்டினேன். 24 சம பாகங்களாக என்னைப் பிரித்து, ஒரு மணிக்கு ஒன்றாய் நான் உருக, மன்னர்கள்கூட அதைக்கொண்டே நேரத்தை அறிந்தனர்.

சரி, என்னைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருங்கள். நான் எரிந்துகொண்டு இருக்கும்போது, கொதி மெழுகை கை கால்களில்சொட்டிக் கொள்ளாமலும், என் ஜ்வாலையில் சுட்டுக்கொள்ளாமலும் ஜாக்கிரதையாக இருங்கள்.