'நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே...

இன்றிருந்தால் என்னாவோம்!’ என்று பாரதி கலங்கி எழுதிய பாட்டுக்குக் காரணம், புயல்தான். அவர் புதுவையில் வாழ்ந்த வீடு புயலால் நொறுங்கி விழுந்தபோது, எதிர் வீட்டுக்குக் குடி மாறி இருந்தார். தான் தப்பிப் பிழைத்த சோகத்தைச் சொல்ல இப்படி ஒரு கவிதையைப் படைத்தார்.

மீண்டும் அப்படி ஒரு நிலையைத் 'தானே’ புயல் ஏற்படுத்தி இருந்தது. கடல்கரையில் இருந்து மேற்கில் 3 கி.மீ. தொலைவிலும் உப்பனாற்றுக்குக் கிழக்கிலும் அமைந்துள்ள ஊர் தியாகவல்லி கிராமம். பெரும்பாலும் ஓலைக் குடிசைகளாகவே இருந்தன. புயலால் வீடுகளை இழந்து நிற்கிறார்கள் தியாகவல்லி மக்கள்.

விகடனின் தானே துயர் துடைப்பு அணி, இவர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் கடமையில் இறங்கியது. காற்றில் மேற்கூரை பறந்து, மரம் விழுந்ததால் மண் சுவர் இடிந்த நிலையில் காட்சியளித்த 20 வீடுகளை முதல் கட்டமாகத் தேர்ந்து எடுத்து, கட்டித்தரும் வேலை மார்ச் 16-ஆம் தேதி தொடங்கியது.

புயலால் வீடுகளை இழந்து, மாட்டுக் கொட்டகையில் படித்துக்கொண்டு இருந்தார்கள் சில சுட்டிகள். அதைப் பார்த்து அந்தக் கிராமத்தில் இருந்தவர்களின் மனமும் இடிந்துகொண்டு இருந்தது. அவர்களை மீட்டெடுத்துக் கொடுக்கும் மிக முக்கியமான பணி தியாகவல்லி கிராமத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. புயலுக்கு முந்தைய வாழ்க்கையை அல்ல... அதைவிட நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கப்போகிறோம்.

அங்கே இருக்கும் சுட்டிகள், மிக நல்ல முறையில் படித்து, தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் உயர வேண்டும் என்று சுட்டி விகடனின் லட்சக்கணக்கான சுட்டிகள் சார்பில் வாழ்த்துவோம்.