டெல்லியில் நடந்த தேசிய சாரணர் போட்டியில், தமிழ்நாட்டு அணி, பல சாம்பியன் பட்டங்களுடன் ஊர் திரும்பி இருக்கிறது.

ஜனவரி மாதம், 'நேஷனல் கப்ஸ் அண்ட் புல்புல்ஸ் உத்சவ்’ டெல்லியில் நடந்தது. இதில் சாரண, சாரணியர்களில் 10 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. இதில் சிறப்பான விஷயம், தமிழ்நாடு அணியில் பங்குபெற்ற 24 சுட்டிகளும் கரூர், பரணி பார்க் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

'ஸ்கவுட்டில் இந்திய அளவில் மாணவர்களுக்குக் கொடுக்கிற மிக உயரிய விருதான, 'கோல்டன் ஏரோ அவார்ட்’ இந்த 24 மாணவர்களுக்கும் கிடைச்சது. ஆரம்பத்தில் டெல்லிக்குப் போகவே ரொம்ப யோசிச்சோம். ஏன்னா, எல்லாரும் 10 வயசுக்கு உள்ள இருக்கிற சுட்டிகள். ஆனால், எல்லோருமே ரொம்பச் சமத்து. அதனால், தைரியமாகக் கிளம்பிட்டோம்'' என்றார் பள்ளியின் முதல்வர் ராம்சுப்ரமணியன்.

''மிச்சத்தை நாங்க சொல்றோம் சார்' எனக் கோரஸ் குரல் கொடுத்தார்கள் சுட்டிகள். முதல்வர் புன்னகையால் அனுமதி வழங்க, ஸ்வேதா காயத்திரி ஆரம்பித்தாள்.

'மொத்தம் அஞ்சு சாதனைகள் செய்தோம். கவனமா எண்ணிக்கிட்டே வாங்க அங்கிள். 24 பேரும் சேர்ந்து கீ போர்டு வாசிச்சுக்கிட்டே 3 மணி நேரம் 35 நிமிடங்கள் பாடினோம். இது, முதல் சாதனை. இதில் 25 நிமிடங்களுக்குள் 5 பாடல்களைப் பாடினது இரண்டாவது சாதனை.'' என்றாள்.

அவளைத் தொடர்ந்த ஆகாஷ் ''மூன்றாவது சாதனை, ஹம்சே சோட்டோ சூட் என்கிற ஸ்கவுட் பாடலை 50 முறை பாடிக்கிட்டே வாசிச்சோம். நான்காவதாக 'ஜாரே ஜஹாங் சே அச்சா’ பாடலை 50 முறை வாசிச்சுக்கிட்டே பாடினோம். கடைசியாக, 'வி ஷல் ஓவர்கம்’ பாடலை 50 முறை வாசிச்சுக்கிட்டே பாடினோம். என்ன அஞ்சு வந்துச்சா?'' என்றான்.

இதோடு முடிந்ததா? 'டெல்லியில் ரொம்பக் குளிர் அங்கிள். நாங்க அங்கே டென்ட் போட்டுத்தான் தங்கினோம். பக்கத்து டென்ட்டுல கேரளா, உத்தரப்பிரதேசம்னு ஃப்ரெண்ட்ஸ் வந்து இருந்தாங்க. நிறையக் கல்ச்சுரல்ஸ் நடந்தது. எல்லோரையும் கவர்ந்தது நாங்க ஆடின கரகாட்டம்தான். அது அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. அவங்களுக்கு நடுவில் ஒட்டு மொத்த ஹீரோக்கள் ஆயிட்டோம்.'' என்றாள் அமிர்தா.

''கேம்ப்ல க்ளீன் பண்றதுல ஆரம்பிச்சு, கல்ச்சுரல்ஸ் வரை தமிழ்நாடு கலக்கிருச்சு' என்ற முதல்வர் குரலில் சுட்டிகளுக்கு இணையான பெருமிதம்!