'குக்கூ... குழந்தைகள் வெளி. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் செயல்பட்டுவரும் இந்தத் தன்னார்வ அமைப்பு, சுட்டிகளை வைத்து பல்வேறு சமூக விழிப்பு உணர்வு விஷயங்களைச் செய்கிறது. சமீபத்தில், 30-க்கும் மேற்பட்ட சுட்டிகள், கைத்தமலைக் குன்றுக்கு வித்தியாசமான விதை சேகரிக்கும் பயணத்தை மேற்கொண்டனர்.

'பூமியை வளமாக்கும் மரங்கள், மனிதர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால், கைத்தமலைப் பகுதியில் உள்ள பலன் தரக்கூடிய பாலை, ஆயா, வேம்பு, நாவல், ஆல், அரசு போன்ற நமது பாரம்பரிய மரங்களின் விதைகளைச் சேகரித்து, மீண்டும் மரம் வளர்க்கச் செய்வதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம்' என்றார், இந்தப் பயண அமைப்பாளர்களில் ஒருவரான வளர்மதி.

கைகளில் துணிப் பையும் உள்ளத்தில் குதூகலமுமாகப் புறப்பட்டார்கள் சுட்டிகள். கைத்தமலையை அடைந்தவுடன் அங்கே உள்ள மா, சப்போட்டா, நாவல் என வழி நெடுக காணப்பட்ட மரங்களின் விதைகளைச் சேகரித்தார்கள். கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் உற்சாக நடைபோட்டனர். விதைகளை ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு சேகரித்தனர். சுட்டிகள் சிலர் மரங்களின் மீது ஏறி, கிளைகளை உலுக்கி, விதைகளைத் தங்களது பைகளில் நிரப்பிக் கொண்டனர்.

'சேகரிக்கும் இந்த விதைகளை, செம்மண் கொண்ட 'மதர் பெட்டில்’ ஊன்றி, மண்புழு உரம் போட்டு நீர் ஊற்றுவோம். கொஞ்சம் வளர்ந்ததும் தனித்தனி கவர்களில் போட்டு வளர்ப்போம். நடுவதற்கு ஏற்ற அளவு வளர்ந்ததும், சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகள், கோயில்கள் மற்றும் சமுதாய இடங்களில் நடுவோம். தேவை எனக் கேட்பவர்களுக்கும் இலவசமாகக் கொடுப்போம்' என்றான் கண்ணன் எனும் சுட்டி.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள், ஊத்துக்குளி சுற்றுவட்டாரத்தில் நடப்பட்டு உள்ளன. இந்தப் பணியில் ஈடுபடும் சுட்டிகளுக்கு, அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களான மூர்த்தி மற்றும் லக்ஷ்மி ஊக்கம் ஊட்டி வருகின்றனர்.

'வகுப்பறையில் இறுக்கமான சூழ்நிலையில் இருக்கும் சுட்டிகளை அதில் இருந்து விடுவித்து, சுதந்திரமாகவும் உயிர்ப்போடும் வாழ்க்கையை அணுகச் செய்வதற்கு நாங்கள் செய்யும் முயற்சிதான் இது. நிலம், நீர், காற்று, ஆகாயம் என மாசுபட்டு இருக்கும் இந்த பூமியை மாற்றுவதற்கு சுட்டிகளுடன் கைக்கோத்து உள்ளோம். இந்தப் பயணத்தின் மூலம் சிறுவர்கள், இயற்கையை நேசிக்கவும் பாதுகாக்கவும் கற்றுக்கொள்கின்றனர் அவர்கள் சேகரித்த விதைகளைத் தங்கள் வீட்டுக்கு அருகில் ஊன்றி வளர்க்கவும் ஊக்கப்படுத்தி வருகின்றோம். ஊன்றப்படும் ஒவ்வொரு விதையும் செடியாய்... மரமாய்... வளர்ந்து, பூத்தும் காய்த்தும் இவர்களை நிச்சயம் வாழ்த்தும்.' என்று நெகிழ்வோடு கூறினார் குக்கூ குழந்தைகள் வெளியின் வழிகாட்டி அழகேஸ்வரி.

கைத்தமலையில் இருந்து பை நிறைய விதைகளுடனும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் திரும்பினர் சுட்டிகள். அவர்கள் விதைகளை விதைப்பது மண்ணில் மட்டும் அல்ல... நம் மனதிலும்தான்!