''ஹாய் ஜீபா... கோழி தினமும் ஒரு முட்டை மட்டும் இடுகிறதே, அதன் வயிற்றில் ஒரே நாளில் முட்டை உருவாகிவிடுமா?''

-சி.அருண், சென்னை.

''இல்லை அருண். கோழி, முட்டை இடும் பருவத்தை அடையும்போதே அதன் வயிற்றுக்குள் சின்னச் சின்ன முட்டைகள் உருவாகி, வளர ஆரம்பித்துவிடும். சிலவற்றுக்கு கரு மட்டும் உருவாகி, ஓடு தோன்றாது. சிலவற்றுக்கு மெல்லிய ஓடுகள் உருவாகும். இப்படி சீரான இடைவெளியில் நடைபெறும் விஷயத்தில், முழுமை அடைந்த முதல் முட்டை வெளியே வருகிறது. முட்டை இட்ட ஒரு கோழியை எடுத்து, அதன் வயிற்றைத் தடவிப் பார்த்தால், 'நான் நாளைக்கு வரேன்’ என்பது போல், இன்னொரு முட்டை தயாராக இருக்கும்''

''டியர் ஜீபா... நான் ஃபுட்பால் ப்ளேயர் ஆகி, நம் நாட்டுக்காக விளையாடணும். அதற்கு என்ன தகுதி வேண்டும்?''

-பி.எஸ்.பரணி, திருப்பூர்.

''சபாஷ் பரணி, உன் லட்சியம் நிறைவேற அட்வான்ஸ் வாழ்த்துகள். எந்த விளையாட்டாக இருந்தாலும், இடைவிடாத பயிற்சியும், சோர்ந்துவிடாத மனவலிமையும் அவசியம். அத்துடன் கட்டுக்கோப்பான உடல் பராமரிப்பு இருந்தால், வெற்றி பெறலாம். கால்பந்தை பொறுத்தவரை, தமிழகம் முழுவதும் நிறைய தனியார் கோச்சிங் சென்டர்கள் இருக்கின்றன. 5 முதல் 14 வயது வரைக்கும் குரூப் வாரியான பயிற்சிகள் உண்டு. வரப்போவது விடுமுறைக் காலம் என்பதால், சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் நடக்கும். இவற்றில் ஒன்றை அணுகி, பயிற்சியை ஆரம்பி. மற்ற வழிகாட்டுதல்களை அவர்களே சொல்வார்கள்.''

''ஏன் ஜீபா, நைட்டில் தூங்கும்போது நைட் சூட் உடுத்திக்கொள்வதுபோல், பகலில் தூங்குவதற்கு எந்த ஆடையையும் தயாரிக்கவில்லையா?''

-எஸ்.சௌமியா, தேவனாங்குறிச்சி.

''ஒரு மனிதனுக்கு 8 மணி நேரத் தூக்கமே போதும். அது, இரவில் கிடைத்துவிடுகிறது. அந்த நேரத்தில், ஆழ்ந்த தூக்கத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவே, காற்றோட்டமான இரவு உடையைத் தயாரித் தார்கள். பகலில் களைப்பாக இருக்கும் சமயத்தில், ஓய்வுக்காக சற்று கண் அயரலாம். அதற்கு ஏன் தனியாக ஆடை? சிலர் பகலிலும் கும்பகர்ணத் தூக்கம் போடுவார்கள். அதற்காக, அவர்களே தயாரித்துக்கொள்ளும் ஆடையின் பெயர்... சோம்பல். அது நமக்கு வேண்டாமே சௌமியா''

''ஹாய் ஜீபா... உங்க யானை இனத்துக்கு விரல்கள் இல்லை, நகங்கள் உண்டு. அந்த நகத்தினால் என்ன பயன்?''

-ஞா.சுதாகர், கோவை.

''நகம் என்பது உயிரற்ற செல்களின் தொகுப்பு. மனிதர்களுக்கும் அதனால் எந்த பயனும் இல்லை. ஆனால், ஒரு டாக்டரிடம் போய்க் கேட்டால் 'அந்த நகத்தைப் பார்த்துதான் ரத்தச்சோகை, இருதயக் கோளாறு போன்ற பல நோய்களை நாங்க கண்டுபிடிக்கிறோம்’ என்பார். புலி, கழுகு போன்றவை, அவற்றின் இரைகளைக் கிழிப்பதற்குப் பயன்படுகிறது. எங்களை மாதிரியான சுத்த சைவங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்தக் கேள்வியைக் கேட்ட உனக்குப் பயன்படுவதற்காக சில தகவல்களை சொல்கிறேன். எங்களுடைய நகங்களை 'உகிர்வு’ என்பார்கள். ஆப்பிரிக்க யானைகளுக்குப் பின்னங்கால்களில் மூன்றும், முன்னங்கால்களில் நான்கும் இருக்கும். ஆசிய யானைகளுக்குப் பின்னங்கால்களில் நான்கும் முன்னங்கால்களில் ஐந்து உகிர்வுகளும் இருக்கும். உடனே பரபரப்பாகி, இந்த பக்கத்தில் இருக்கிற என் படத்தைப் பார்த்து, முன்னங்காலில் மூன்று உகிர்வுதானே இருக்கு...? என்று அடுத்தக் கேள்வியை அனுப்பிடாதே சுதாகர். மற்றவை ஓவியத்தின் அந்தப் பக்கமா இருக்கு.''

''வெயில் நேரத்தில் வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்ததும் ஒரே இருட்டாகத் தெரியுதே ஏன் ஜீபா?''

-ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

''கண்களில் ரெட்டினா என்கிற விழித்திரையைச் சுற்றி, ராட்ஸ் அண்ட் கோன்ஸ் (ஸிஷீபீs ணீஸீபீ நீஷீஸீமீs) என்ற செல்கள் இருக்கின்றன. இவை, அதிக வெளிச்சத்தில் ஒரு விதமாகவும், குறைந்த வெளிச்சம் அல்லது இருளில் ஒரு விதமாகவும் செயல்பட்டு, நமக்குப் பார்வையை அளிக்கிறது. வெயிலில் அதிக நேரம் இருக்கும்போது அந்த செல்கள், அதற்கு ஏற்ப செயல்பட்டுகொண்டு இருக்கும். திடீர் எனக் குறைந்த வெளிச்சத்துக்கு மாறும்போது, தன்னை மாற்றிக்கொள்ள இவற்றுக்குக் குறைந்தபட்சம் மூன்று நிமிட அவகாசம் தேவைப்படுகிறது. இருளின் தன்மைக்கு ஏற்ப இந்த அவகாசம் வேறுபடும். இந்த மாற்றத்தை மருத்துவத்தில் 'டார்க் அடாப்டேஷன்’ என்பார்கள். அதிக இருட்டாக இருக்கும் சினிமா தியேட்டர்களில் இதை நம்மால் நன்கு உணர முடியும் மஞ்சரி.''