ஒருவரின் பெயரை நினைவூட்டும் விதமாக ஒரு விலங்குக்குப் பட்டப் பெயர் உள்ளது. அதுதான் எம்பரர் டாமரின் என்ற குரங்கு. வில்ஹெம் மிமி என்ற ஜெர்மானியப் பேரரசரின் மீசையைப் போல இதற்கும் இருப்பதால் இந்தப் பெயர். ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த விலங்கியலாளர் கோல்டி, வேடிக்கையாக இந்த வகைக் குரங்குகளுக்கு, பேரரசன் என்று பட்டம் சூட்டினார். அதுவே நிலைத்துவிட்டது.

இதன் விலங்கியல் பெயர் Saguinus imperator.

அமேஸான் நீர்ப் பிடிப்புப் பகுதிக்குத் தென்மேற்கிலும், கிழக்கு பெருவிலும், வட பொலிவியாவிலும், மேற்கு பிரேசில் பகுதிகளிலும் உள்ள மழைக் காடுகளில் 100 அடி உயரம்கொண்ட மரங்களில் இது குடியிருக்கும்.

இரண்டு, எட்டு என்று குழுக்களாக வாழும். குழுவுக்கு, மூத்த பெண் குரங்கு தலைமை ஏற்கும்.

இவற்றின் வித்தியாசமான அம்சம், பெரிய அளவில் மீசை. 24 முதல் 26 செ.மீ. வரை வளரும். 35 செ.மீ. நீளம்கொண்ட வால் இருக்கும். நன்கு வளர்ந்த குரங்கு, 500 கிராம் இருக்கும்.

தட்டையான நகங்களுக்குப் பதிலாக பறவைகளுக்கு இருப்பதைப் போல் கூரிய, வளைந்த நகம் போன்ற அமைப்பு இருக்கும். ஆனால், பெருவிரலில் மட்டும் நகம் காணப்படும்.

இவற்றின் கர்ப்ப காலம், 140 முதல் 145 நாட்கள். ஒரு பிரசவத்தில் இரண்டு குட்டிகள் போடும். மூன்று மாதங்களுக்குப் பிறகு, குட்டிகள் தாயிடம் இருந்து பிரிந்து விடும்.

மழைக் காலங்களில் பழங்களையும், வறட்சிக் காலங்களில் தேன் போன்றவற்றையும் சாப்பிடும். கூடவே சிறு பூச்சிகள், குளவிகள், சிலந்திகள், எறும்புகள், சிறிய தவளைகள் போன்றவற்றையும் சாப்பிடும். பறவைகள், ஓணான்கள் மற்றும் பல்லிகளின் முட்டைகளும் இதன் மெனுவில் இருக்கின்றன.

இவற்றின் சிறிய உருவமும் குறைந்த உடல் எடையும், கிளைகளின் நுனி வரை செல்ல உதவிகரமாய் இருக்கின்றன. நீளமான வால், கிளைகளைப் பிடித்துத் தாவும்போது ஐந்தாவது கை போலச் செயல்படுகிறது.

மரங்களின் உச்சியில் இருப்பதால், வேட்டையாடும் விலங்குகளை எளிதில் கவனித்து, கீழே வசிக்கும் வேறு இனக் குரங்குகளை உஷார்ப்படுத்தும். அதே போல், பிற வகைக் குரங்குகளுக்கும் உணவு கிடைக்க வழி வகை செய்யும்.

10 முதல் 20 வருடங்கள் உயிர் வாழும்.

காட்டுப் பூனைகள், காட்டு நாய்கள், பாம்புகள், பெரிய வகைப் பறவைகள் போன்றவை இவற்றை வேட்டையாடி உண்ணும்.

வளர்ப்புப் பிராணியாகவும் இதைச் சிலர் வளர்க்கிறார்கள்.