Published:Updated:

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

Published:Updated:
##~##

''ஹாய் ஜீபா... மீன் ஏன் தூங்கவே மாட்டேங்குது? ராத்திரியில் எப்போ எழுந்துப் பார்த்தாலும் (மீன் தொட்டியில்) முழிச்சுக்கிட்டே இருக்கே..?''

     - எஸ். அஸ்விந்த், கூடலூர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மீன்களில் சில சுறா வகைகளுக்கு மட்டுமே கண் இமைகள் உண்டு. மற்ற மீன்களுக்கு இமைகள் கிடையாது. அதனால், நம்மைப் போல் கண்களை மூடித் தூங்க முடியாது. தவிர, நம்மை மாதிரி நீண்ட நேரம் தூங்கும் பழக்கமும் மீன்களுக்குக் கிடையாது. அது தண்ணீரில் சுறுசுறுப்புடன் சுற்றிக்கொண்டே இருக்கும். ஓய்வு தேவை என நினைக்கும்போது, ஓர் இடத்தில் அப்படியே அசையாமல் மிதந்தவாறு உறங்கும். சில நிமிடங்களில் 'லா... லா... லா’ என்று பாடியவாறு கிளம்பிவிடும். அப்படி உறங்கும் ஒரு சில நிமிடங்களிலும் தண்ணீரிலோ, வெளியிலோ சின்ன அசைவு ஏற்பட்டாலும் விழித்துகொள்ளும். அதனால், மீன் தூங்கலையே என அருகே சென்றுப் பார்த்து, அதன் தூக்கத்தையும் கெடுத்து, உன் தூக்கத்தையும் கெடுத்துக்காதே அஸ்விந்த்!''

''ஜீபா... எனக்கு கே.நவீன்குமார், மணிரத்னம் என இரண்டு நண்பர்கள். இதில், மணிரத்னம் கருப்பாக இருக்கிறான். அவன் வெள்ளை ஆக ஆசைப்படுகிறான். அதுக்கு என்ன செய்யணும்?''

-எம்.கோவர்த்தனன், கோவை.

''ஐடியா கேட்டால் அறிவுரை சொல்றேன்னு நினைச்சுக்காதே கோவர்த்தனன். கருப்பாக இருப்பது எந்த விதத்திலும் குறைச்சல் கிடையாது. அதனால், நமது படிப்பறிவோ மற்ற திறமைகளோ எந்த வகையிலும் பாதிக்காது. நிறம் என்பது ஒவ்வொருவரின் ஜீன் சம்மந்தப்பட்ட விஷயம். அதை மாற்றுவதில் கவனம் செலுத்தும் நேரத்தில், நமது திறமைகளில் கவனம் செலுத்தினால்... உலகமே வியந்து பார்க்கும். உன் நண்பனுக்கு இதைச் சொல். யாருக்குத் தெரியும்... நாளைக்கு உன் நண்பன் மணிரத்னம் தனது திறமையால், 'மணி’யான 'ரத்ன’மாக ஜொலிக்கலாம்.''

மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... தேனீக்கு எட்டு கண்கள் என்கிறார்களே, அதன் மூலம் எட்டு இடங்களைப் பார்க்க முடியுமா?''

- ரா.ராஜகுரு, நிலக்கோட்டை.

''ஒரு திருத்தம் ராஜகுரு... தேனீக்கு இருப்பவை எட்டு கண்கள் அல்ல, ஐந்துதான். அதில் தலையின் பக்கவாட்டில் இருக்கும் இரண்டு கண்களையும் கூட்டுக் கண்கள் என்பார்கள். இவை, ஆயிரக்கணக்கான செல்களின் தொகுப்பு. அறுங்கோண வடிவில் இருக்கும். இதன் முக்கியப் பணி, சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா வயலெட் கதிர்களை உள்வாங்குவது. அதன் மூலம், சுற்றுப்புறத்தில் இருக்கும் நிறம், ஒளி மற்றும் திசைகளை அறிந்து செயல்படுவது. இந்த இரண்டு கூட்டுக் கண்களைத் தவிர, தலைப் பகுதியில் முக்கோண வடிவில் மூன்று தனிக் கண்கள் உள்ளன. இது, மனிதனின் பார்வையில் இருந்து மாறுபட்டு இருக்கும். மற்றபடி, பல திசைகளை எல்லாம் பார்க்க முடியாது!''

''தென்னை மரங்கள் ஏன் ஜீபா வளைந்து வளைந்து வளர்கின்றன?''

-எம்.பேரறிவரசன், ஆத்தூர்.

''தென்னை மரங்கள் மட்டும் அல்ல, எல்லா மரங்களுமே வளைந்து வளைந்துதான் வளரும். அதற்கு காரணம், ஒரு மரம் வளரும்போது அதன் சுற்றுப்புறத்தில் இருந்து வீசுகிற காற்றின் தன்மைக்கு ஏற்ப, மரத்தின் இளம் தண்டு வளைய ஆரம்பிக்கும். நாளடைவில் அதுவே நிலைத்துவிடுகிறது. கை, கால்களை அப்படியும் இப்படியுமாக வளைத்து, கழுத்தைச் சுற்றிக்கொள்ளும் ஜிம்னாஸ்டிக் வீரனைப் போல் இருக்கும் பல மரங்களைக் காடுகளில் பார்க்கலாம். தென்னை மரத்தில் இந்த வித்தியாசம் பளிச் எனத் தெரிவதற்கு காரணம், அதற்கு அடர்த்தியான இலைகளோ, கிளைகளோ இல்லாததே. தவிர, தென்னை மரங்கள் கடற்கரையிலும் வளரும் இயல்புடையவை. அங்கே காற்று பல திசைகளில் இருந்து பலமாக வீசுவதால், பல வளைவுகளுடன் வளருகின்றன''  

''ஹாய் ஜீபா... நான் 'மும்பை இந்தியன்ஸ்’ ரசிகன், என் நண்பன் சென்னை கிங்ஸ் ரசிகன். அவன் அடிக்கடி 'சென்னை கெத்து’ என்று சொல்லி வெறுப்பேத்துறான். அவனுக்குப் பதிலடியா ஒரு பன்ச் சொல்லேன்''

- மா.சீதாராமன், உடுமலைப்பேட்டை.

''அதுக்கென்ன, சொல்லிட்டாப்போச்சு!  இந்தியிலேயே சொன்னால், இன்னும் 'கெத்தாக’ இருக்கும் இல்லியா? உன் நண்பனும் என்ன சொல்றேனு புரியாமல் முழிப்பான். அதைப் பார்க்க இன்னும் குஷியாக இருக்கும். 'மும்பை ஜபர்தஸ்த்’, 'காபிலே தாரீப்’, 'மும்பை பீஜோத்’ இப்படி பன்ச் பவுன்சர்களை அவன் மேலே அடிச்சுவிடு. இதுக்கு எல்லாம் என்ன அர்த்தம்னு கேட்கிறியா? அதே 'கெத்து’தான்!

மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... எனக்கு வகுப்பில் எதிரிகள் அதிகம். அவங்களைச் சமாளிக்க ஒரு ஐடியா சொல்லு?''

- வி.கோகுல், ஈரோடு.

''எதிரிகளைச் சமாளிக்க உலகில் எத்தனையோ வழிகள் இருக்கு. அதில் மிகவும் எளிமையானது, பக்க விளைவுகளோ, செலவோ இல்லாதது... அன்பைச் செலுத்தி, அவர்களை நண்பர்களாக மாற்றிக்கொள்வது.  இந்தச் சிறு வயதிலேயே எதிரிகள் இருப்பது நல்லது கிடையாது கோகுல். ஏன் அத்தனை எதிரிகள் உனக்கு இருக்கிறார்கள் என்று யோசி. அவங்ககிட்டேயே போய்க் கேளு. அல்லது, நீ மிகவும் மதிக்கும் ஒரு நண்பனிடம் கேள். உன்னிடம் மாற்றிக்கொள்ள வேண்டிய குணம் இருந்தால், அதை மாற்றிக்கொள். அப்புறம் என்ன... எல்லோரின் தோள் மீதும் கை போட்டு 'நண்பேன்டா’ என்று உலா வரலாம்''

''ஹாய் ஜீபா! ஆங்கிலத்தில் tall என்றால் உயரம். tallest என்றால் மிக உயரம், இல்லையா? ஆனால், late என்பதை தாமதம் என்று சொல்லும் நாம், புதுசை latest என்கிறோம். ஏன் இப்படி ஜீபா?

- எஸ்.செல்வி, வேலூர்.

''எக்ஸ்ட்ராடினரி கேள்வி ஒண்ணைக் கேட்டுட்டே செல்வி! இப்ப பாரு, லார்ஜ்... எக்ஸ்ட்ரா லார்ஜ்... என்று சைஸ்களை சொல்றோம். அதுவே, ஆர்டினரி என்றால் சாதாரணம். எக்ஸ்ட்ரா...ஆர்டினரி என்றால்?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism