Published:Updated:

சுட்டி மனசு !

சுட்டி மனசு !

சுட்டி மனசு !

சுட்டி மனசு !

Published:Updated:

ஸ்ரீஜா, 3-ஆம் வகுப்பு, பொன்னேரி.  

##~##

''எனக்கு கதை கேட்கிறது ரொம்பப் பிடிக்கும் அங்கிள். அம்மாகிட்ட கதை சொல்லுங்கன்னு கேட்டால், சொல்லவே மாட்டாங்க. 'போய்ப் படிக்கிற வேலையைப் பாரு’னு எரிஞ்சு விழுவாங்க. யாருமே கதை சொல்லாததால, நான் டி.வி.யில் கார்ட்டூன் பார்க்க ஆரம்பிச்சேன். படிக்கிறதைவிட பார்க்கிறது மனசுல ஆழமாப் பதியும்னு எங்க டீச்சர் சொல்வாங்க. மிக்கி மவுஸ், டிஸ்னி கதைகள், டோரா புஜ்ஜினு பல கார்ட்டூன் கதைகள் அப்படியே மனசுல பதிஞ்சது. இந்தக் கதைகளை என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும்  சொல்லி, சந்தோஷப்படுவேன். இப்போ, என்னை டி.வி. பார்க்கவே விடுறது இல்லை. ஆனால், அப்பா, அம்மா, பாட்டின்னு எல்லோரும் சீரியல் பார்க்கிறாங்க. கார்ட்டூன் பார்க்கணும்னு அம்மாகிட்ட கேட்பேன். 'அடம்பிடிச்சா அடிச்சிடுவேன். ஒழுங்காபோய்ப் படி’னு சொல்லிடுவாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுட்டி மனசு !

நானும் எவ்வளவு நேரம்தான் படிச்சுட்டே இருக்கிறது? அம்மா மட்டும் டி.வி. பார்க்கலாம், நான் பார்த்தால் தப்பா? இது என்ன அங்கிள் நியாயம்?''

எஸ்.அமர்சபரிவாசன், எல்.கே.ஜி, கரூர்.

''பக்கத்தில் இருக்கிற என் கேர்ள் ஃப்ரெண்டு சுபா வீட்டுக்குப் போனால், அடிக்கிறாங்க அங்கிள். நீ என்ன ஊர் சுத்திப் பயலாடானு சொல்லி தலையில் ஓங்கிக் குட்டுவாங்க. எனக்கு எவ்ளோ வலிக்கும் தெரியுமா அங்கிள். எனக்கு சாப்பாடே புடிக்க மாட்டேங்குது. ஆனால், அதைத்தான் சாப்பிடணும்பாங்க. நான் நூடுல்ஸ் கேட்டால், அவ்ளோதான், 'இதைத் தின்னு வயித்தைக் கெடுத்துக்காதடா’னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுருவாங்க. நான் ஈவ்னிங் ஸ்கூல் முடிஞ்சு வந்ததும், போகோ சேனல் பார்க்கலாம்னு டி.வி. போடுவேன். உடனே அம்மா வந்து, சீரியல் போட்டுட்டு உக்காந்துக்குவாங்க. நைட் வரை அந்த சீரியல் பார்த்தால், செம போர் அடிக்கும். போன வாரம், நான் குறும்பு பண்ணினா அடிக்கணும்னு, கடை வீதியில் இருந்து ஒரு  பெரிய்ய்ய்ய பெரம்புக் குச்சி வாங்கிட்டு வந்துட்டாங்க. ப்ளீஸ் அந்தப் பெரம்புக் குச்சியை மட்டும் நைஸா எடுத்துட்டுப் போயிருங்க அங்கிள். அதைப் பார்த்தாலே, ரொம்பப் பயமா இருக்கு.

சுட்டி மனசு !

எங்க தாத்தா வேட்டிதான் கட்டுவாங்க. அது சூப்பரா இருக்கும். எனக்கும் அது மாதிரி டிரெஸ்தான் வேணும்னு கேட்டேன். ஆனா, அதுக்கு நான் பெருசாகணும்னு சொல்லித் திட்டுறாங்க. நான் பெருசாதானே அங்கிள் இருக்கேன்? பக்கத்து வீட்டு பிரவீன், டெய்லி ரோட்லதான் சைக்கிள் ஓட்டுவான். ஆனால், என்னை மட்டும் ரோட்டுல ஓட்டவே விடமாட்றாங்க. எங்க அப்பா செல்போனை சும்மா பாக்கலாம்னு எடுப்பேன். அவ்ளோதான், என் கையப் பிடிச்சுக் கிள்ளுவாங்க. எனக்கு ரொம்ப வலிக்கும். எங்க வீட்லதான் அடிப்பாங்க. ஆனா, எங்க டீச்சர் ரொம்ப நல்லவங்க. அடிக்கவே மாட்டாங்க. அதனால், எப்பவும் ஸ்கூல்லயே இருந்துடலாம்னு நினைப்பேன் அங்கிள்.''

மோகன், 2-ஆம் வகுப்பு, விருதுநகர்.

சுட்டி மனசு !

''எங்க அப்பா ரவிக்குமார், வத்தல் பிசினஸ் பண்றார். அம்மா மீனாட்சி, ஹவுஸ் ஓய்ப். நான் நல்லாப் படிப்பேன். எங்க கிளாஸ் டீச்சர்ஸ் எல்லாருமே நல்லாத்தான் பாடம் நடத்துவாங்க. ஆனால், சில நேரத்தில் அவங்களுக்கு என்ன டென்ஷனோ, கிளாஸ் ரூமில் எங்க எல்லார் மீதும் எரிஞ்சு விழுவாங்க. அப்போதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். டீச்சர்ஸ் எல்லாரும் ஹேப்பியா வந்து யாரையும் திட்டாம, அடிக்காமப் பாடம் நடத்தினால் எவ்வளவு சந்தோஷமா இருக்கும். அது போல, மார்க் குறைஞ்சிருச்சுனா, எல்லார் முன்னாடியும் கேலி, கிண்டல் செய்யும்போது... மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கும். அப்போ, தனியாக் கூப்பிட்டுக் கண்டிச்சு, நல்லாப் படிக்கணும்னு அட்வைஸ் செஞ்சா எங்களுக்கு நல்லா இருக்கும் தானே!''

சுபிக்ஷா, 5-ஆம் வகுப்பு, பொறையார்.

சுட்டி மனசு !

''காலையில் எழுந்ததும் அப்பா ஆபீஸுக்கும் அம்மா ஸ்கூலுக்கும் கிளம்புறதுனால, ரொம்ப டென்ஷனா இருப்பாங்க. நான் படிக்கிற ஸ்கூல்லதான் அம்மாவும் டீச்சரா இருக்கிறாங்க. அதனால், அவங்க ஸ்பீடுக்கு என்னையும் கிளம்பச் சொல்வாங்க. அப்படிக் கிளம்பலைன்னா, செம திட்டு விழும். சில நேரத்தில் அடியும் விழும். மார்க் குறைஞ்சா, ஸ்கூல் விட்ட பிறகு, ஈவ்னிங்ல அங்கேயே உட்காரவெச்சுப் படிக்கச் சொல்வாங்க. அம்மா எப்போ வீட்டுக்குப் புறப்படுவாங்களோ... அது வரைக்கும் படிக்கணும். அப்புறம் வீட்டுக்குப் போனதும், ஹோம்வொர்க் பண்ணனும். அம்மா 11-வது, 12-ஆவதுக்குப் பாடம் எடுக்கிறதால, அவங்க லெவலுக்கு என்னையும் எதிர் பார்க்கிறாங்க. இது நியாயமா? நீங்களே சொல்லுங்க!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism