Published:Updated:

பந்துப் போர்வை !

என்.மல்லிகார்ஜுனா

பந்துப் போர்வை !

என்.மல்லிகார்ஜுனா

Published:Updated:
##~##

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நீர்ப் பாதுகாப்பு அதிகாரிகள், குடிநீர் மாசுபடுவதைத் தடுக்க, ஒரு புதுமையான யுக்தியைக் கையாண்டு உள்ளனர்.

தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இவர்களுக்கு இவான்ஹோ நீர்த்தேக்கத்தில் (Ivanhoe Reservoir)இருந்து குடிநீர் அனுப்பப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத்தில் சூரிய ஒளி பட்டதும், நீரில் உள்ள ப்ரொமைடு மற்றும் க்ளோரின் கலந்து, கார்சினோஜன் புரோமேட் (Carcinogen bromate)என்ற வேதிப்பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது என்றும், இந்த நீரைப் பருகுபவர்களுக்கு கேன்ஸர் வர வாய்ப்புகள் அதிகம் என்றும் சமீபத்தில் கண்டறிந்தனர். எனவே, இந்த நீர்த்தேக்கத்தின் மீது சூர்ய ஒளி படாமல் இருக்க உடனடியாக என்ன செய்யலாம் என யோசித்தனர். அப்போது, ஒரு புதுமையான யோசனைத் தோன்றியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிகவும் எடை குறைந்த 4 லட்சம் கருப்பு பிளாஸ்டிக் பந்துகளைக் கொட்டி, நீர்த்தேக்கத்தை முழுவதுமாக நிரப்பிவிட்டனர். இப்போது, கருப்புப் போர்வையைப் போர்த்தியது போல் அந்த நீர்த்தேக்கம் காட்சி அளிக்கிறது.

பந்துப் போர்வை !

கருப்பு  நிறம் சூரிய ஒளி ஊடுருவதைத் தடுக்கும் என்பதால், இந்த ஐடியா. இதற்கு செலவு குறைவதோடு, கேடு விளைவிக்கும் நச்சு வேதிப்பொருளிடம் இருந்தும் தண்ணீர் பாதுகாக்கப்படுகிறது. இது தற்காலிக ஐடியாதான். சூரிய ஒளி படாமல் இருக்க கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவிட்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism