Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

Published:Updated:
##~##

கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி பல்வேறு நாடுகளில் உள்ள முக்கியக் கட்டடங்கள் நீல வண்ணத்தில் ஒளிர்ந்தன. காரணம், உலக ஆட்டிசம் தினம்.

ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, 2008-ல் 'உலக ஆட்டிசம் தினம்'  அறிமுகப்படுத்தப்பட்டது. ஆட்டிசம் என்பது நோய் அல்ல, அது ஒரு குறைபாடு மட்டுமே என்பதை உணர்த்தும் வகையில், உலக நாடுகள் முழுவதும் பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பென் டிரைவ் !

குறிப்பாக, பள்ளிகள் முழுக் கவனம் செலுத்தின. அன்றைய தினத்தில், நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங்ஸ், சிட்னியில் உள்ள ஓப்ர ஹவுஸ் எனப் புகழ்பெற்ற கட்டடங்கள், நீல நிறத்தில் ஜொலித்தன. சென்னையிலும் ரிப்பன் கட்டடம் உள்பட பல கட்டடங்கள் மின்விளக்குகள் உதவியுடன் நீல வண்ணத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

பென் டிரைவ் !

கம்போடியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற அங்கோர் வாட் கோயில், இந்தியாவுக்கு வருகிறது. வியப்பாக இருக்கிறதா? சூரியவர்மன் என்ற மன்னரால் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது அங்கோர் வாட் கோயில்.  யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

இந்தக் கோயிலின் அமைப்பை அப்படியே பிரதிபலிக்கும் கோயில் ஒன்றை, பீகாரின் வைஷாலி மாவட்டத்தில்  கட்டுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன.  பிரபலத் தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டில் வசிக்கும் பணக்கார இந்தியர்களின் நிதி உதவியுடன் கட்டப்பட உள்ள இந்தக் கோயில், உலகின் மிகப் பெரிய இந்துக் கோயிலாக இருக்குமாம். இதைக் கட்டி முடிக்க 10 ஆண்டுகள் ஆகும் என்று  சொல்கிறார்கள்.

பென் டிரைவ் !

அகலமான சாலைகளும், ஒவ்வொரு தெருவில் இருக்கும் கட்டடங்களும் நல்ல சூரிய ஒளி மற்றும் காற்று வசதியுடன் கூடியது. ஆகாயத்தில் இருந்து பார்த்தால், ஒவ்வொரு பிளாக்கும் சதுர வடிவில் தெரியும். இதுதான் பர்சிலோனாவில் உள்ள எக்ஸாம்பிள் (Eixample) நகரத்தின் விசேஷம். இந்த அழகான நகரத்துக்கு உருவம் தந்தது, இல்டெஃபோன்ஸ் செர்டா (Ildefons Cerdà) எனும் கட்டட நிபுணர். 1860-ஆம் ஆண்டு முதல், கட்டடங்கள் 113-113 மீட்டர் அளவுக்கு பிளாக் வடிவில் இருந்தால்தான் கட்டடம் கட்ட அனுமதி தருகிறார். தற்போது, ஆயிரக்கணக்கான பிளாக்குகள் உள்ளன. இந்தத் திட்டமிட்ட கட்டட அழகைப் பார்க்கையில் வியக்காமல் இருக்க முடியவில்லை.

பென் டிரைவ் !

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நொறுக்குத் தீனியை விற்கக் கூடாது என்பது அந்த மாநில அரசின் கடுமையாக உத்தரவு.

பள்ளிகளில் உள்ள கேன்டீன்கள், பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் கடைகளில் உள்ள நொறுக்குத் தீனிகள்,  கார்பனேட்டட் கூல்டிரிங்ஸ், சர்க்கரை மிகுதியான உணவுப் பொருட்களை சுட்டிகள் வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.இதனால், பல்வேறு உடல்நிலைக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. இந்த   தின்பண்டங்களுக்குப் பதிலாக,  ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்பது அரசின் நோக்கம். இதனை மீறி, பள்ளிப் பகுதிகளில் நொறுக்கித் தீனிகள் விற்கப்பட்டால், கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள,  உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

பென் டிரைவ் !

கூரையே இல்லாமல், வெட்டவெளியில் சினிமா பார்த்து ரசிப்பதற்கு திரையரங்குகள் இருப்பதைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், தாய்லாந்து மக்கள் தண்ணீரில் மிதந்தபடியே சினிமா பார்க்கிறார்கள் தெரியுமா? தாய்லாந்தில் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவை வித்தியாசமான முறையில் நடத்தத் திட்டமிட்டார்கள். ஜெர்மன் பொறியாளர் ஓலே ஸ்சீரென் (Ole Scheeren) என்பவர் 'ஆர்ச்சிபெலாகோ சினிமா’ (Archipelago Cinema) என்ற மிதக்கும் தியேட்டரை உருவாக்கினார். கடலோரத்தில் ஆழம் இல்லாத பகுதியில் பாறைகளின் நடுவில், இந்தத் தியேட்டர் அமைந்திருக்கிறது. மரக்கட்டைகள், ரப்பர், ஃபோம் ஆகியவற்றைக்கொண்டு கேலரியை உருவாக்கி உள்ளனர். மிதமான அசைவுடன் தண்ணீரில் மிதந்தபடியே சினிமாவைப் பார்த்து ரசிப்பதே தனி த்ரில்லாகத்தான் இருக்கும்.    

பென் டிரைவ் !

காந்தியடிகள் வெள்ளையருக்கு எதிரான ஒரு போராட்ட வழியாக உப்புச் சத்யாகிரகத்தில் ஈடுபட்டார். அதற்காக தண்டி யாத்திரையைத் தொடங்கினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியை மீண்டும் நடத்தி இருக்கிறது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த காந்தி உலக மையம். ''அழிக்கவே முடியாத, இயற்கையை மாசுபடுத்தும் நச்சுப் பொருளான பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை எதிர்த்துத்தான் இந்த யாத்திரை. காந்தியடிகள் தண்டி யாத்திரையை மேற்கொண்டபோது, அவருடன் பங்கேற்றவர்கள் 78 பேர். அதை நினைவு கூறும் வகையில், எங்கள் யாத்திரையிலும் 78 பேரை பங்கேற்கச் செய்தோம்.'' என்கிறார், காந்தி உலக மையத்தின் நிறுவனர் எம்.எல்.ராஜேஷ்.

பென் டிரைவ் !

 பூங்காக்களில் நீரூற்றுக்களைப் பார்த்து இருப்பீர்கள்... சாக்லேட் நீரூற்று பார்த்தது உண்டா? லண்டனில் இருக்கும் வெஸ்ட் ஃபீல்டு எனும் ஷாப்பிங் சென்டரில் மிகப் பெரிய சாக்லேட் நீரூற்று வைத்து இருக்கிறார்கள். இதன் உயரம் 30 அடி. அகலம் 23 அடி. இதற்காக ஆயிரக்கணக்கான சாக்லேட் துண்டுகளை உருகவைத்து, 20 டன் க்ரீமைப் பைப்புகள் வழியாக அனுப்பி, தண்ணீர்போல் கொட்டவைக்கிறார்கள். அத்துடன் இன்னிசையும் ஒலித்து, காதுகளுக்கு இனிமை சேர்க்கிறது. இதைத் தயார் செய்தது, சாக்லேட் தயாரிப்பில் நம்பர் ஒன் நிறுவனமான கேட்பரீஸ்.

பென் டிரைவ் !

 சீனாவைச் சேர்ந்த 49 வயது ஜூ கேஃபெங் (Zhu Kefeng)கடந்த 10 வருடங்களாக இரும்பு, உலோக பாகங்களைக் கொண்டு ரோபோக்களைச் செய்துவருகிறார். இது, அந்தப் பகுதி மக்களிடம் நல்ல வரவேற்புப் பெற்றுள்ளது. அதனால், முழுநேர வேலையாக எடுத்துக்கொண்டு, சமீபத்தில் கார் மற்றும் இயந்திரங்களின் உதிரிப் பாகங்களால், 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ படத்தில் வரும் பிரமாண்ட மெட்டல் ரோபோ கேரக்டர்களை உருவாக்கி, ஒரு பொழுதுபோக்குப் பூங்காவை அமைத்துள்ளார் கேஃபெங். இதற்காகத் தன் வீட்டையும் விற்றார். இந்த டிரான்ஸ்ஃபார்மர்ஸ் பூங்காவைப் பார்க்க, சுட்டிகள் ஆர்வத்துடன் வருகிறார்கள். இன்னும் 600 ரோபோக்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் கேஃபெங்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism