Published:Updated:

தானே துயர் துடைத்தோம் !

தானே துயர் துடைத்தோம் !

தானே துயர் துடைத்தோம் !

தானே துயர் துடைத்தோம் !

Published:Updated:
##~##

விகடன் 'தானே’ துயர் துடைப்புத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் நமது பணிகள் நடந்துவருவதை அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, நம்மிடம் ஒரு கோரிக்கை வைத்தார். ''மிகமிக அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு இந்தப் பகுதியில் நம்பிக்கை தரும் விடுதியாக நந்தனார் விடுதி இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியின் குடும்பத்துப் பிள்ளைகள்

ஏராளமானோர் இங்கு படிக்கிறார்கள். பன்னிரண்டு, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்குப் பொதுத் தேர்வு என்பதால்,  விடுதி அறைகளுக்கு சோலார் விளக்குகளை ஏற்பாடு செய்துகொடுத்தால், அவர்களின் எதிர்காலத்துக்கு ஒளி ஏற்றியதாக இருக்கும்'' என்பதே ஆட்சியரின் ஆசை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சிதம்பரம் வருவேன். நந்தனார் கல்விக் கழகத்தில்தான் தங்குவேன்’ என்று காந்திஜி வாக்குறுதி அளித்து, வந்து தங்கிய இடம் இது. நமது துயர் துடைக்கும் அணி, உடனடியாகப் பணியில் இறங்கியது. மொத்தம் 28 அறைகளுக்கு சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டன. முதலில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் இந்த அறைகளில் தங்கிப் படித்தனர். இப்போது, பத்தாம் வகுப்பு மாணவர்கள் அங்கு தங்கி படித்து வருகிறார்கள்.

தானே துயர் துடைத்தோம் !

''என் பேரு வி.லெனின். நான் 10-ம் வகுப்பு ஞி பிரிவு. ராத்திரி அடிக்கடி கரன்ட் போகுது. மெழுகுவத்தி வெளிச்சத்துல படிக்கவே முடியல. கண்ணு எரியுது. காலைல

தூக்கம் தூக்கமா வருது. இப்போ, சோலார் லைட் போட்டது சந்தோஷமா இருக்கு. நல்ல மார்க் வாங்கிடுவேன்னு நம்பிக்கையா இருக்கு!'' என்று சொல்லும்போதே மகிழ்ந்தான் லெனின்.

தானே துயர் துடைத்தோம் !

கடலூர் பகுதியில் இருக்கும் சரவணா எனர்ஜி சிஸ்டம் என்ற நிறுவனம், துரிதமாக இந்த சோலார் விளக்குகளைத் தருவித்துப் பொருத்த உதவியது. இந்த விளக்குகளைப் பொருத்திவிட்டு இரண்டொரு நாட்கள் கழித்து நாம் சென்ற நேரத்தில், சிதம்பரத்தில் மின்சாரம் இல்லை. நந்தனார் விடுதி பளிச்சென்று இருந்தது. அப்போது நம்மிடம் அந்த மாணவ, மாணவிகள் மலர்ந்த முகத்துடன் சொன்னார்கள்... ''தேங்க்ஸ் விகடன்!''

அந்த நன்றிகள் அனைத்தும் வாசகர்களாகிய உங்களுக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism