Published:Updated:

இராண்டாம் டைட்டானிக் !

இராண்டாம் டைட்டானிக் !

இராண்டாம் டைட்டானிக் !

இராண்டாம் டைட்டானிக் !

Published:Updated:
##~##

டைட்டானிக்... மறக்கக்கூடிய பெயரா?

அந்தப் பிரமாண்டமான கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கி, ஏப்ரல் 15- ஆம் தேதியுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதை நினைவூட்டும் வகையில், பல்வேறு நிகழ்சிகள் நடக்கின்றன. 14 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான டைட்டானிக் திரைப்படமும், தற்போது 3ஞி தொழில்நுட்பத்தில் வெளியாகி இருக்கிறது. இதற்கு எல்லாம் மகுடமாக, டைட்டானிக் கப்பல் சென்ற அதே பாதையில், லண்டன் - நியூயார்க் பயணத்தைத் தொடங்கி இருக்கிறது, ஒரு சொகுசுக் கப்பல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏப்ரல் 1, 1912 அன்று டைட்டானிக் கப்பல், லண்டன் சௌத்தாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. அதே போல, 'எம்.எஸ்.பால்மோரல்’ என்ற பிரமாண்டமான கப்பல், 1309 பயணிகளுடன் இப்போது தன் பயணத்தைத் தொடங்கி இருக்கிறது. இதுவும் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த அதே பயணிகளின் எண்ணிக்கையே! இதற்கான பயணக் கட்டணம் 6,000 டாலர்கள். இவர்களில் சிலர், முந்தைய டைட்டானிக் கப்பலில் பயணம்செய்து உயிர் இழந்தவர்களின் உறவினர்கள். உயிர் தப்பியவர்களின் உறவினர்களும் இருக்கிறார்கள். உயிர் தப்பிய பயணிகளில் ஒருவரின் பேரனான, பிஃலிப் லிட்டில் ஜான் என்பவர், ''இது உணர்ச்சிகரமான தருணம். என்னுடைய தாத்தா பெருமை அடைவார். அவருடைய கதையை இந்தப் பயணத்தின்போது சக பயணிகளிடம் நான் பகிர்ந்துகொள்வேன்'' என்றார்.

இராண்டாம் டைட்டானிக் !

எம்.எஸ்.பால்மோரால் கப்பலில் உணவு, நிகழ்ச்சிகள், அலங்காரங்கள் அனைத்துமே முந்தைய டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்டது போலவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில், பயணிகள் பலரும் அந்தக் கால உடைகளிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கப்பல், ஏப்ரல் 15 அன்று டைட்டானிக் கப்பல் மூழ்கிய அதே இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, ஏப்ரல் 19-ல் நியூயார்க் துறைமுகத்தை அடைகிறது.

புதிய டைட்டானிக் கப்பல் பல ஆண்டுகள் தன் பயணத்தைத் தொடர வாழ்த்துவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism